அன்பை பகிர்வோம்,அன்பால் இணைவோம்

23 September 2011

ஸ்பாம்(SPAM) மெயில்களைப் தடுப்பது எப்படி?


இணைய காலத்தில் ஜன்க் மெயில்களைப் போன்றே ஸ்பாம் (SPAM) மெயில்களினால் உங்களது மின் அஞ்சல் முகவரிக்கு அதிகளவில் தேவையற்ற மின் அஞ்சல்கள் கிடைக்கப்பெறுகின்றன. ஸ்பாம் மெயில்களினால் உங்களது கணனிக்குள் ரைவஸ் அல்லது ஸ்பை வெயார்கள் உட்புகக்கூடிய அபாயம் காணப்படுகின்றது.
பொது இணைய தளங்களில் உங்களது இணைய முகவரியை பிரசூரிக்க வேண்டாம. 95 வீதமான ஸ்பாம் மெயில்கள் பொது இணைய தளங்களில் தங்களுடைய மின் அஞ்சல் முகவரியை பிரசூரிப்பதன் மூலம் அனுப்பி வைக்கப்படுகின்றன.
                                                         

நவீன தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி ரொபோக்கள் மற்றும் மென்பொருட்கள் இணைய தளங்களுக்குள் புகுந்து இலகுவில் இணைய முகவரிகளைப் பெற்றுக்கொள்கின்றன. வித்தியாசனமான வழிகளில் உங்களது மின் அஞ்சல் முகவரியை பிரசூரிப்பதன் மூலம் ஸ்பாம்களிலிருந்து பாதுகாத்துக்கொள்ள முடியும்.
தவிர்க்கப்பட வேண்டியவை
பிரபலமான செய்தித் தளங்கள் – ஸ்பாம் ரொபோக்கள் இலகுவில் இவ்வகை இணைய தளங்களில் பதிவாகும் மின் அஞ்சல் முகவரிகளை எடுத்துக்கொள்கின்றன.
பொன்ஸிபாடி போன்ற மென்பொருட்கள், ஸ்பாம் நிறுவனங்களின் துணை நிறுவனங்களாக செயற்பட்டு வருகின்றன. இந்த வகை மென்பொருட்களை பயன்படுத்தினால் மின் அஞ்சல் முகவரி இலகுவில் களவாடப்படக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.
சாட் தளங்களுக்கு பிரவேசித்தல், பிரபல சாட் தளங்களுக்கு பிரவேசிப்பதன் மின் அஞ்சல் முகவரிகளை இலகுவில் பெற்றுக்கொள்ள முடியும். யாகூ, ஏ.ஓ.எல் போன்ற இணைய சட் தளங்களின் பாவனையாளர் பெயருடன் @ குறியீடு மற்றும் உரிய முகவரியை பயன்படுத்தி இலகுவில் மின் அஞ்சல் முகவரிகளைப் பெற்றுக்கொள்ள முடிகிறது.
ஸ்பாம்களை முடக்கும் மென்பொருட்களை பயன்படுத்தவும்.
அநேகமான மின் அஞ்சல் சேவை வழங்குனர்கள் ஸ்பாம்களை முடக்கும் மென்பொருட்களை வழங்குகின்றனர். அல்லது அவ்வாறான ஓர் மென்பொருளை தரவிறக்கம் செய்து கொள்ள முயும்.
திஸ் இஸ் ஸ்பாம் வசதி உங்களது மின் அஞ்சல் முகவரியில் காணப்பட்டால் அந்த வசதியைப் பயன்படுத்தவும்.
யாகூ மின் அஞ்சல் முகவரியைப் பயன்படுத்தினால் ஒதுக்கப்பட்ட முகவரி முறையைக் கொண்டு ஸ்பாம்களை தடுக்க முடியும்.
ஸ்பாம்களை பிரித்து அறியக் கூடிய மென்பொருட்களைப் பயன்படுத்தல்
எம்.எஸ் அவுட்லுக் மின் அஞ்சல்சேவையில் ஸ்பாம்களை வடிகட்டக் கூடிய வசதிகள் காணப்படுகின்றன. (ஸ்பாம் எயிட், ஸ்பாம் ரீடர்)
ஸ்பாம் முகவரிகளை முடக்குதல் (எனினும், சிறந்த தடுப்பு வழியாக அமையாது ஏனெனில் ஸ்பாம் மின் அஞ்சல்களை அனுப்புவோர் அநேகமாக தற்காலிக முகவரிகளையே பயன்படுத்துகின்றனர்)
உங்களது முகவரி பட்டியலில் இல்லாதவர்களின் மின் அஞ்சல்களை ஜன்க் மெயில்களில் சேமிக்கும் வகையில் மாற்றத்தை ஏற்படுத்தல்.
ஸ்பாம் பற்றி முறைப்பாடு செய்யலாம்
ஸ்பாம்களை அழிப்பதற்கு முன்னர் spam@uce.gov என்ற முகவரிக்கு ஸ்பாம்கள் பற்றி முறைப்பாடு செய்ய முடியும்.
இந்த முகவரிகள் தொடர்பில் மத்திய வர்த்தக ஆணைக்குழு விசாரணை நடத்தும். ஸ்பாம் மின் அஞ்சலை அனுப்பியவருக்கு ஓரு மின் அஞ்சலுக்கு தலா 500 அமெரிக்க டொலர்கள் வீதம் அபராதம் விதிக்க முடியும்.
மின்அஞ்சல் முகவரியை பயன்படுத்தும் போது தந்திரோபாயமான அணுகுமுறைகளை பின்பற்ற முடியும். இணைய போரம்களில் உங்களது தரவுகள் கோரப்படும் மின்அஞ்சல் மற்றும் பெயர் விபரங்களை வழங்கும் போது நிதானமாக வழங்கவும். போலியான பெயர்களில் வரும் மின் அஞ்சல்களை அழித்து விடவும்.
ஸ்பாம் மெயில்களை அடையாளம் காண்பதற்கு வௌ;வேறு முகவரிகளைப் பயன்படுத்தவும். ஸ்பாம் மெயில்களை அடையாளம் காண்பதற்கு வி;த்தியாசமான முகவரிகளைப் பயன்படுத்த முடியும். ஒரு நிலையான முகவரியை பயன்படுத்தவும், இந்த முகவரியை நண்பர்களுக்குக் கூட கொடுக்க வேண்டாம்.
தேவைகளுக்கு ஏற்ற வகையில் மின் அஞ்சல் முகவரிகளை உருவாக்கிக்கொள்ள வேண்டும் (வியாபாரம், பொழுதுபோக்கு, தனிப்பட்டவிவகாரம்)
இந்த முகவரிகளிலிருந்து வரும் மின் அஞ்சல்களை பிரதான மின் அஞ்சல் முகவரிக்கு போர்வார்ட் செய்யவும். இதன் மூலம் பல முகவரிகளை பார்வையிட வேண்டிய அவசியமில்லை.
எந்தக் குழுவினர் அதிகளவில் ஸ்பாம்களை அதிகமாக அனுப்பி வைக்கின்றனர் என்பதனை அறிந்து கொள்ள முடியும்.
விக்கி ஸ்பாம் : ஏழுமாறாக ஸ்பாம் முகவரிகளைப் பெற்றுக் கொள்ளல், ஸ்பாம்பொட்ஸ் ஆகிய முறைகளில் அதிகளவில் மின் அஞ்சல்கள் தாக்கப்படுகின்றன.

No comments:

Post a Comment

நண்பனிடம் சொல்லுங்க,,,,,,,,,
பிடிச்சிருந்தாலும்....இல்லை என்றாலும் ;)