அன்பைதேடி அன்பு

அன்பை பகிர்வோம்,அன்பால் இணைவோம்

10 October 2025

கிராம ஊராட்சி செயலாளர்கள் காலிப்பணியிடம் நாகப்பட்டினம்

நாகப்பட்டினம் மாவட்ட கிராம ஊராட்சி செயலாளர்கள் காலிப்பணியிடம்

29 July 2025

இன்ஸ்டா குடும்ப வாழ்க்கையை அழிக்கும்




TikTok தடைக்குப் பிறகு இன்ஸ்டா பொழுதுபோக்கு என்பது வாழ்க்கையே ஆகி விட்டது.

 

TikTok தடை செய்யப்பட்டதற்குப் பிறகு பலரின் வாழ்க்கையை அழிக்கும் பொறுப்பை இன்ஸ்டா எடுத்துக்கொண்டது.

 

இளையோர்கள் லைக்ஸ், பிரபலத்துக்கு அடிமைப்பட்டு நேரத்தையும், நற்பண்புகளையும் இழந்து வருகின்றனர்.

 

உண்மை சம்பவங்கள், குடும்ப சிக்கல்கள், மற்றும் Instagram உண்மையான விளைவுகள் பற்றி இந்தக் கட்டுரை பேசுகிறது.

 

 

இன்ஸ்டா


முன்பு நிழற்படங்களைப் பகிரும் தளமாக இருந்த போது பெண்கள் கட்டுப்பாட்டிலேயே இருந்து வந்தது, தற்போதும் தொடர்கிறது.

குறு காணொளிகளை இன்ஸ்டா அறிமுகப்படுத்திய பிறகு அடுத்த கட்டத்துக்கு நகர்ந்தது, தற்போது ரீல்ஸ் வந்த பிறகு கட்டுப்பாடு இல்லாமல் சென்று விட்டது.

தற்போது பணமும் கிடைப்பதால், பலரும் பணத்துக்காகவும், பிரபலத்துக்காகவும் Extereme ஆக செயல்பட்டு வருகின்றனர்.
ஆண்களுக்கு குறைந்த ஆதரவே!


X ல் ஆண்கள் ஆதிக்கம் அதிகம் ஆனால், இன்ஸ்டாவில் பெண்கள் ஆதிக்கமே அதிகம்.

காரணம், X எழுத்து ஆனால், இங்கே பார்வை. எனவே, இயல்பாகவே பெண்களே முன்னணியில் உள்ளனர்.

எளிதாகப் புரிந்து கொள்ள, பெண்களைக் கவரும் எதுவும் இங்கே ஹிட் அடிக்கும். திரைப்படத்தின் பாடல்கள் உட்பட.
லைக்ஸ்


லைக்ஸே ஒரு நபரின் பிரபலத்தைத் தீர்மானிப்பதால், அதை அடைய எந்த எல்லைக்கும் செல்லத் தயாராகி விட்டனர்.

தற்போது கூடுதலாகப் பணமும் கிடைக்கிறது.

சில காணொளிகளைக் காண்கையில் இவர்கள் உறவினர்கள், நண்பர்கள், குடும்பத்தினர், பக்கத்துக்கு வீட்டினர் இவற்றைப் பார்க்க மாட்டார்களா?!

அது பற்றி எந்தக் கவலையும், எண்ணமும் இல்லாமல் எப்படி கேவலமாக நடந்து கொள்ள முடிகிறது? என்ற எண்ணம் வந்து செல்லத் தவறுவதில்லை.

அடுத்தவருக்காக இல்லையென்றாலும், நமக்கே இது தவறு என்று தோன்ற வேண்டும் இல்லையா!
நேரத்தைக் கபளீகரம் செய்கிறது


ஒருவரின் நேரத்தை விரைவாகக் கபளீகரம் செய்து விடுகிறது.

மாணவர்களின் படிப்புத்திறன் இதனாலேயே கடுமையாகப் பாதிக்கப்படுகிறது. மாணவ, மாணவிகள் ரீல்ஸ் செய்துகொண்டுள்ளார்கள்.

ஆகக்கொடுமையாகக் குடும்பமே இதில் ஈடுபடுகிறது.

பணியில், கல்வியில், வாழ்க்கையில் சிறந்து விளங்க வேண்டும் என்றால், இப்பக்கமே செல்லக் கூடாது என்பதே உண்மை.

சமூக கௌரவம்

சில விஷயங்களைக் கேள்விப்பட்டதில், இப்படியுமா?! இருப்பார்கள் என்று வியப்பை அளிக்கிறது.

இன்ஸ்டாவில் வெளியிடுவதற்காகவே பயணம் செல்கிறார்கள்.

மற்றவர்களிடம் பந்தா காட்டுவதற்காகவே செலவு செய்து பொருட்களை வாங்குகிறார்கள்.

தனிப்பட்ட அனைத்தையும் பொதுவெளிக்குக் கொண்டு வருகிறார்கள்.
சம்பவம் 1


தேனிலவுக்கு வெளிநாடு அழைத்துச் செல்வதாக கூறிய கணவன் திருமணத்துக்குப் பிறகு முடியாததால், விவாகரத்து வரை பெண் சென்று விட்டார்.

காரணம், அங்கே சென்று எடுக்கும் படங்களை இன்ஸ்டாவில் வெளியிடத் திட்டமிட்டு இருந்தார். இந்திய சுற்றுலாத் தலத்துக்குச் செல்வதை ஏற்றுக்கொள்ளவில்லை.

பின்னர் வெளிநாடு அழைத்துச் செல்வதாகக் கூறியும் சமாதானமாகவில்லை.

இதற்கெல்லாமா விவாகரத்து?! இது பெங்களூரூவில் நடந்த நிகழ்வு.
சம்பவம் 2


ஆட்டோ ஓட்டுநர் ஒருவர் பயணியிடம் தன் மனைவியின் இன்ஸ்டா பக்கத்தைக் காண்பித்து எப்படியுள்ளது? என்று கேட்டுள்ளார்.

அவரது மனைவி அலங்காரம் செய்து கொண்டு பாடலுக்கு ஆடுவது போன்றவற்றைச் செய்துள்ளார். தோராயமாக 15,000 பார்வைகள்.

‘இன்ஸ்டாவில் இது போலப் பகிர்ந்தால் பணம் கிடைக்கிறதாம், அதனால் என் மனைவி செய்கிறார். எனக்கும் ஒப்புதல்‘ என்று கூறியுள்ளார்.

நடிகைகள் இது போல போடும் போது, நடிக்கையில் என் மனைவி செய்தால் என்ன தவறு? என்று கேட்டுள்ளார்.

இதெல்லாம் ஒரு போதை, நாளை இதில் கருத்திடும் நபருடன் பழக்கம் ஏற்பட்டு இவர் குடும்பத்திலேயே பிரச்சனை வரலாம் ஆனால், அதன் ஆபத்தை உணராமல் உள்ளார்.

பெங்களூரூவில் நடந்த இந்நிகழ்வை X ல் ஒரு பெண் பகிர்ந்து இருந்தார்.
சம்பவம் 3


திருமணத்துக்கு முன்னர் பல Gift, Outing, Celebration செலவுகளைச் செய்ய வைத்து, அதைக் காணொளியாக இன்ஸ்டாவில் பகிர்ந்து வருகிறார்.

இதனால் ஏற்படும் செலவுகள், நட்டங்களை உணரவே இல்லை.

அடுத்தவர்களிடம், ‘நான் எப்படியுள்ளேன்.. பாருங்கள்!‘ என்று தற்பெருமை பேசவே அனைத்தையும் செய்து வருகிறார்.

இவரைப் போலக் கணக்கிலடங்கா நபர்கள் செய்து வருகின்றனர். இது தான் தற்போதைய ட்ரெண்டாக உள்ளது.
சம்பவம் 4


யாராக இருந்தாலும், ஒரு கட்டத்துக்கு மேல் பார்வைகள் குறையும் அல்லது மற்றவர்கள் இவர்களை விட சிறப்பாக செய்யலாம்.

இன்ஸ்டாவில் குப்பை போல பலர் உள்ளதால், ஒருவர் சற்று சலிப்பாகினால் அடுத்தவருக்கு நகர்ந்து விடுவர்.

இந்நிலையில் ஒருவர் மீதான வயது காரணமாகவோ, வேறு காரணங்களாலோ ஈர்ப்பு, பார்வை, லைக்ஸ் குறைகையில் அதை அவர்களால் ஏற்றுக்கொள்ள முடிவதில்லை.

பின்தொடர்பவர்களைத் தக்க வைக்க ஆபாசமாக வெளியிடுவது. அதைக் கணவனே எடுத்து வெளியிடுவது என்று படுகேவலமாகச் சென்று கொண்டுள்ளார்கள்.

வாழ்க்கையை அழிக்கும்


தற்பெருமை, மற்றவர்கள் முன்னர் தன்னை உயர்த்திக்காட்ட, ஆபாசம், பணம் என்று மிக மோசமாக சென்று கொண்டுள்ளது.

இதனால், பலரின் குடும்ப வாழ்க்கையும் சிக்கலில் முடிகிறது. இன்ஸ்டாவில் பலர் போலி வாழ்க்கை வாழ்ந்துகொண்டுள்ளனர்.

சுருக்கமாக, தனக்காக வாழாமல் மற்றவர்களின் பார்வையில் தன்னை கெத்தாகக் காட்டத் தன்னை சிதைத்துக்கொண்டுள்ளார்கள்.

முன்னரே கூறியபடி இதுவொரு போதை. இதில் சிக்கி விட்டால், வெளியே வருவது மிக மிகக்கடினம். பலர் புலி வாலை பிடித்த கதையாக உள்ளனர்.
பிரபலங்களின் வாழ்க்கை


திருமணத்துக்கு முன்னர் இன்ஸ்டா பக்கத்தைப் பார்த்தாலே ஒருவர் எப்படிப்பட்டவர் என்பதை ஓரளவு ஊகித்து விடலாம்.

பெரும்பான்மை பிரபலங்களின் வாழ்க்கையை உன்னிப்பாகக் கவனித்துப்பாருங்கள், ஏதோ ஒரு சிக்கலில் இருப்பர்.

பலர் கைதாவார்கள், சில விவாகரத்தாவார்கள், சில வழக்குகளில் சிக்குவார்கள்.

இதற்கு ஏராளமானவர்களை எடுத்துக்காட்டாகக் கூறலாம், உங்களுக்கும் தெரியும்.

எனவே, வெளியே இருந்து பார்க்கையில் பணம், சொகுசு என்று அழகாக தெரியும் குடும்பத்தில் புயல் வீசுவது பலருக்குத் தெரியாது.
வாழ்க்கையில் முன்னேற


இது AI காலம். நாளை என்ன நடக்கும் என்று தெரியவில்லை. எதிர்காலம் எப்படி இருக்கும் என்றே புரியவில்லை.

எனவே, நம்மை மேம்படுத்துவது அவசியமாகிறது.

இளையோர் குறிப்பாக 20 – 40 தங்களது பொன்னான நேரத்தை இதில் செலவழித்து வந்தால், விரயம் செய்த நேரத்தை நினைத்துப் பின்னர் வருத்தப்பட நேரிடும்.

பொழுதுபோக்கு நல்லது ஆனால், அவை நம் கட்டுக்குள் இருக்கும் வரையே!
மற்றவர்களைத் திருப்தி செய்ய முயலாதீர்கள்


வாழ்க்கையில் குறிப்பிடத் தக்க இடத்தை அடைந்து விட்டீர்கள், பொருளாதாரத்தில் பாதுகாப்பான பகுதியை அடைந்து விட்டீர்கள் என்றால், அளவாக நேரம் செலவழிப்பது பிரச்சனையில்லை.

ஆனால், வாழ்க்கையில் இன்னும் எதுவுமே சாதிக்கவில்லை, குறைந்த பட்சம் சரியான தொழில், பணியில் இல்லையென்றால், இவற்றை விட்டு விலகி இருங்கள்.

உங்கள் விருப்பத்துக்குச் செய்வது வேறு ஆனால், எப்போது மற்றவர்களைக் கவர்வதற்காகச் செயல்பட ஆரம்பித்து விட்டீர்களோ அன்றே தனித்தன்மையை இழந்து விட்டீர்கள்.

Braking Point


எல்லோருக்கும் ஒரு சுதாரிக்கும் Breaking Point இருக்கும். ஒருவேளை அது இதுவாகவும் இருக்கலாம் அல்லது பின்னர் ஒரு தருணத்தில் உணரலாம்.

எனவே, தருணங்களைத் தவறவிட்டு வருத்தப்படாதீர்கள்.

இன்ஸ்டா பிரபலம், பணம், லைக்ஸ் அனைத்துமே தாற்காலிகமே! நிரந்தரம் அல்ல.

தனிப்பட்ட வளர்ச்சியை மட்டுமல்ல குடும்ப உறவையும் சிதைக்கிறது.

ஒரு நாள் புறக்கணிப்பு நடைபெறுகையில் அதைத் தாங்கும் சக்தி, இது போன்று பயன்படுத்துபவர்களுக்கு இருக்காது.
thanks to giriblog 

01 July 2025

கடகம்"என்றால் நண்டு என அர்த்தம்! இந்த ராசி நீர் ராசி என்பதால் மிகவும் மென்மையானவர்கள்,உணர்ச்சி வசப்படுபவர்கள்!

 கடகம்!


"கடகம்"என்றால் நண்டு என அர்த்தம்!


இந்த ராசி நீர் ராசி என்பதால் மிகவும் மென்மையானவர்கள்,உணர்ச்சி வசப்படுபவர்கள்!


இவர்கள் மனிதநேயம்,இரக்க மனம் கொண்டவர்கள்.சக மனிதர்கள் கஷ்டத்தில் இருக்கும் போது கடக ராசிக்காரர்கள் உதவ ஒருபோதும் தயங்குவதில்லை.


சிக்கல்களை,பிரச்சனைகளை அலசி ஆராய்ந்து தீர்க்கக்கூடியவர்கள்.இவர்களிடம் எந்த பிரச்சனைக்கு சென்றாலும் நல்ல ஆலோசனை வழங்குவார்கள் ஆனால் இவர்களுக்கு பிரச்சனை வந்தால் மனம் தடுமாறுவார் ஆனால் வெளியிர் காட்டிக்கொள்ள மாட்டார்கள்.


மனசறிந்து தவறு செய்யமாட்டார்கள் ஆனால் தன் மீது தவறு இருப்பதாக நினைத்தால் விவாதம் செய்யவோ சண்டை போடவோ மாட்டார்கள். இதை வைத்து அவர்களை குறைவாக எடை போடக்கூடாது.


கடகராசிக்காரர்களின் இரக்க மனதையும்,நல்ல குணத்தையும் நீங்கள் பயன்படுத்துகிறீர்கள் என தெரிந்தால் மிக உறுதியானவர்களாக மாறிவிடுவார்கள். 


கடக ராசிக்காரர்களுடன் பேசுவது,பொழுதுபோக்குவது ஆனந்தமான விசயம் மனதில் கள்ளம் கபடம் இல்லாமல் பழகக்கூடியவர்கள் அதேபோல் மற்றவர்களையும் சந்தோசப்படுத்துவார்கள்.


கடக ராசிக்காரர்கள் இயற்கையாகவே பாதுகாக்கும் சுபாவம் கொண்டவர்கள். இதனால் சில சமயங்களில் அவர்கள் சற்று சுயநலமானவர்களாகக் கூட தோன்றலாம். அவர்கள் சுயநலம்  கொண்டவர்கள் என்றாலும் மற்றவர்களின் சந்தோஷத்தை கெடுக்க மாட்டார்கள், அதே சமயம் எக்காரணம் கொண்டும் தங்கள் மகிழ்ச்சியை தியாகம் செய்ய மாட்டார்கள்.


இவர்கள் மீது ஒரு பங்கு அன்பு காட்டினால் நூறு பங்கு திருப்பி செலுத்துவார்கள்.அன்புக்கு மட்டும் அடிபணியக்கூடியவர்கள்.


இவர்களிடம் நட்பு வைத்தால் அது நீண்டகாலம் தொடர்ந்த நட்பாக இருக்கும்.பழகியவர்களுக்காக உயிரை கூட கொடுப்பார்கள்.


மனோக்காரகன் சந்திரனை அதிபதியாக பெற்ற கடக ராசிக்காரர்கள்எனவே கடக ராசியினர் தங்கள் ராசிக்குரிய திங்கட்கிழமைகளில் சிவபெருமான் கோயிலில், சிவனுக்கு அம்பாளுக்கு அர்ச்சனை செய்து வழிபட்டு வந்தால் அவர்களின் கிரக தோஷங்கள், கர்ம தோஷங்கள் போன்றவற்றை நீக்கும். 


பௌர்ணமி தினங்களில் முன்னிரவு நேரத்தில் வானில் தோன்றும் பூரண சந்திரனின் தரிசனம் செய்து வருவது உங்களின் மனதில் நேர்மறை சக்திகளை நிரம்பச் செய்யும்.

anbucellcom

சந்திர பகவான் ஒரு மனிதனின் தாயாருக்கு காரகனாகிறார். எனவே கடக ராசியினர் தினந்தோறும் தங்களின் தாயாரை வணங்கி அவர்களின் ஆசிகளை பெற்று செல்வது உங்களுக்கு பல நன்மைகளை உண்டாக்கும். 


மாதமொருமுறை கோயில்கள் மற்றும் துறவிகள், ஏழைகள் ஆகியோர்களுக்கு அரிசி தானமளிப்பதால் உங்களுக்கு ஏற்படவிருக்கின்ற எத்தகைய துரதிர்ஷ்டங்களையும் போக்கும் சிறந்த பரிகாரமாக இருக்கும்.


கடக ராசியினர் திங்கள் கிழமை அசைவம் தவிர்ப்பது நல்லது.

28 April 2024

10 TH &12 TH CERTIFICATE MISSING / DAMAGE CERTIFICATE - REPRINT - TAMILNADU




 link 

https://apply1.tndge.org/online-public-service

16 November 2023

பெண்களே நீங்கள் மிக எச்சரிக்கையாக இருக்க வேண்டிய தருணம்



Deepfake காணொளிகள் இந்தியா முழுக்க சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

Deepfake


ஒருவரின் முகத்தை செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் மூலம் போலியாக மாற்றும் தொழில்நுட்பம் Deepfake என்று அழைக்கப்படுகிறது.

முன்பு Photoshop தொழில்நுட்பத்தால் இது போலச் செய்யப்பட்டது ஆனால், அதை விடப் பல மடங்கு துல்லியமாகச் செயற்கை நுண்ணறிவின் மூலம் செய்ய முடியும்.

எனவே தான் இதன் மூலம் வரும், நிழற்படங்கள், காணொளிகள் உண்மையானது போலவே உள்ளது.
எப்படி உருவாக்குகிறார்கள்?


எப்படி Photoshop தொழில்நுட்பத்தில் மாற்றுகிறார்களோ அதே போல, Deepfake லும் செய்யப்படுகிறது. Photoshop சாதாரணமானது ஆனால், Deepfake செயற்கை நுண்ணறிவுடன் உருவாக்கப்படுவது.

செயற்கை நுண்ணறிவு (Artificial Intelligence) எப்படி வித்தியாசப்படுகிறது என்றால், கிடைக்கும் ஏராளமான தகவல்களை வைத்தே.பிரபலங்களின் நிழற்படங்கள், காணொளிகள் இணையத்தில் கொட்டிக்கிடப்பதால், அவற்றை அடிப்படையாக வைத்து உருவாக்கப்படுகிறது.


எந்த ஒரு உணர்வுக்கும் காணொளிகள், நிழற்படங்கள் இருப்பதால், அவற்றை வைத்துத் துல்லியமாக முகத்தை, உணர்வுகளைக் கொண்டுவர முடிகிறது.

இதன் அடிப்படையிலேயே ட்ரம்ப், ராஷ்மிகா காணொளிகள் வைரலானது.ஒருவருடைய நிழற்படங்கள், காணொளிகள் அதிகம் கிடைக்கிறது என்றால், இது போன்ற Deepfake காணொளிகளைத் துல்லியமாக உருவாக்க முடியும்.


Deepfake காணொளிகளில் வரும் கண்கள் சிமிட்டாது என்பதை வைத்துப் போலி என்று அடையாளம் காணலாம் ஆனால், எதிர்காலத்தில் இதையும் வளரும் தொழில்நுட்பத்தில் சரி செய்து விடுவார்கள்.
ஆபத்து நிறைந்தது


யாருக்கோ நடந்தது என்று எளிதாகக் கடக்க முடியாது காரணம், நமக்கே, நம் குடும்பத்தினருக்கே இது போன்று நடக்க ஏராளமான வாய்ப்புகள்.

தங்களுக்குப் பிடிக்காத ஒரு நபரை இத்தொழில்நுட்பம் மூலம் எளிதாக அவமானப்படுத்திவிட முடியும். இது உண்மையா பொய்யா என்று உணர்வதற்குள் போதுமான சேதம் ஆகியிருக்கும்.

இது நானில்லை என்று விளக்கம் கொடுத்து அது மற்றவர்களைச் சென்றடைவதற்குள் பொய் வேகமாக அனைவரிடையே சென்றடைந்து இருக்கும்.

தற்காலத்தில் ஆண்களும், பெண்களும் குறிப்பாகப் பெண்கள் Reels, இன்ஸ்டாகிராம், Shorts போன்றவற்றில் எல்லை மீறிய காணொளிகளைப் பகிர்ந்து வருகிறார்கள்.

இதை வைத்து எளிதாக Deepfake செய்து விட முடியும்.இவர்கள் அல்லாமல், லைக்ஸ் ஆர்வத்துக்காக தங்கள் நிழற்படங்களை, காணொளிகளை ஏராளமாகச் சமூகத்தளங்களில் பகிரும் பெண்கள் மிக எச்சரிக்கையாக இருக்க வேண்டிய தருணம்.


இவர்கள் சொல்லித் திருந்த மாட்டார்கள் காரணம், லைக்ஸ் போதைக்கு அடிமையாகி விட்டார்கள். எனவே, பட்டுத்திருந்தினால் தான் உண்டு.

திரைப்பட காட்சிகளை மீண்டும் எடுக்காமல், செலவைக் குறைத்து வேறு மொழிகளில் கொண்டு வரப் பயன்பட்ட தொழில்நுட்பம் தற்போது மற்றவர்களின் தனிப்பட்ட வாழக்கையில் விளையாடி வருகிறது.
குரல் மாற்றம்


முகம் மட்டுமல்லாது குரலையும் Deepfake மூலம் மாற்றம் செய்ய முடியும்.

முருகன் பாடலை மோடி பாடுவது உட்படப் பல பாடல்கள் இன்ஸ்டாகிராமில் ட்ரெண்டிங்காக இருந்தது. மோடி பேசுவது, பாடுவது போலவே இருந்தது.

மோடி தமிழ் பேசினால் எப்படிப் பேசுவாரோ அதே போல உருவாக்கப்பட்டு இருந்தது.

இவையெல்லாம் மீம்ஸாக வந்து நகைச்சுவையாக இருந்தாலும், இதே முறையில் மொபைலில் போலி முகம், குரல் மூலம் ஏமாற்றுவதும் நடைபெறுகிறது.

அதாவது, உங்களுக்குத் தெரிந்த நபர் போல Video Call ல் வந்து அவசரமாகப் பணம் தேவைப்படுவதாகக் கூறினால், ஏமாந்து கொடுத்து விட வாய்ப்பாகியுள்ளது.

எனவே, யாரை, எதை நம்புவது என்றே தெரியவில்லை.
தவிர்க்க முடியாதது


வளரும் தொழில்நுட்பம் பல நன்மைகளை, வசதிகளைக் கொண்டு வந்தாலும், இது போன்ற ஆபத்துகளையும், சிக்கல்களையும் உடன் கொண்டு வருகிறது.

எனவே, இவையெல்லாம் தவிர்க்க முடியாத பிரச்சனைகள். எச்சரிக்கையாக இருப்பதைத் தவிர வேறு வாய்ப்புக் கிடையாது.

தவறு செய்தவர்களும் கூட Deepfake என்று கூறி தப்பித்து விட வாய்ப்புள்ளது குறிப்பாக அரசியல்வாதிகள்.

பிடிக்கிறதோ இல்லையோ, எதிர்காலத்தில் இப்பிரச்சனைகளைக் கடந்து செல்லாமல் ஒதுங்க முடியாது. எச்சரிக்கை மட்டுமே ஒரே வழி...