கைபேசிக்கான ஆன்டிராய்ட் தயாரிக்கும் கூகுள், தற்போது பிளாக்பெரி ஸ்மார்ட் கைபேசி பயன்படுத்துவோருக்கு தனது ஜிமெயில் சேவையை நிறுத்த முடிவு செய்யதுள்ளது.
நடப்பாண்டு நவம்பர் 22ம் திகதி முதல் இந்த தடை அமல்படுத்தப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கைபேசியில் ஜிமெயில் சேவையை கொண்டு வருவதில் கடந்த சில ஆண்டுகளாக கவனம் செலுத்தி வருவதாகவும், இதில் மேலும் பல முதலீடுகள் செய்ய உள்ளதாகவும் கூகுள் நிறுவனம் தெரிவித்துள்ளது.
நவம்பர் 22ம் திகதி முதல் பிளாக்பெரி பயன்படுத்துபவர்களுக்கு ஜிமெயில் சேவை நிறுத்தப்படும் எனவும், ஏற்கனவே ஜிமெயில் பிரவுசரை டவுன்லோட் செய்து வைத்திருப்பவர்கள் ஜிமெயில் சேவையை தொடர்ந்து பயன்படுத்தலாம் எனவும் கூகுள் நிறுவனம் தெரிவித்துள்ளது.
No comments:
Post a Comment
நண்பனிடம் சொல்லுங்க,,,,,,,,,
பிடிச்சிருந்தாலும்....இல்லை என்றாலும் ;)