அன்பை பகிர்வோம்,அன்பால் இணைவோம்

13 February 2012

கணினியை எதற்கு Backup செய்ய வேண்டும்?



வீட்டிலோ அல்லது அலுவலகத்திலோ கணினியைப் பயன்படுத்தும் போது முக்கிய பைல்களைப் பிரதி செய்து வேறொரு ஊடகத்தில் பாதுகாப்பாக களஞ்சியப்படுத்திக் கொள்வதை (Backup) பேக்கப் எனப்படும். எதிர்பராத விதமாக கணினி செயலிழக்கும்போது தகவல் இழப்பு ஏற்படவும் வாய்ப்புள்ளது. எனவே பைல்களை பேக்கப் செய்து கொள்வதும் அதனை அவ்வப்போது புதுப்பித்துக் (update) கொள்வதும் அவசியம். முக்கிய பைல்களை பேக்கப் செய்து வைத்திருந்தால் அதிலிருந்து பைல்களை மீளப் பெற்றுக் கொள்ளக் கூடிய வாய்ப்பு கிடைக்கிறது.

கணினியை ஏன் பேக்கப் செய்ய வேண்டும் என்பதற்ககான சில காரணங்களைப் பார்க்கலாம்.

முக்கிய ஆவணங்கள் மற்றும் பைல்களை ஹாட் டிஸ்கில் சேமித்து வைப்பதே சௌகரியமாது என அனேகமான கணினிப் பயனர் கருதுகின்றனர். தேவை ஏற்படின் ஆவணங்களை இலகுவாக அச்சிட்டுக் கொள்ளவும். அவற்றில் மாற்றங்கள் செய்து புதுப்பித்துக் கொள்ளவும் முடியும் எனப் பலரும் கருதுவதால் ஹாட் டிஸ்கிலேயே அவற்றை சேமித்து வைப்பர். ஹாட் டிஸ்கில் பைல்களை சேமித்து வைப்பது உண்மையிலேயே சௌகரியமானதுதான்.

எனினும் அது பாதுகாப்பான வழிமுறையல்ல என்பதைப் புரிந்து கொள்ளுங்கள். காகித ஆவணங்களைப் போலவே கணினியிலுள்ள பைல்களின் பிரதியொண்றை வேறோரு ஊடகத்தில் களஞ்சியப்படுத்தி வைப்பதே சிறந்த வழி முறையாகும்.

ஹாட் டிஸ்க் ஏதோ ஒரு காரணத்தால் பழுதடையும் போது அதில் சேமிக்கப்பட்டுள்ள பைல்களுக்கும் உத்தரவாதம் கிடைக்காமல் போகும்.. நமது பைல்களைக் கணினி காண்பிக்காது விடும். சில வேளை அவற்றைத் திறந்து பார்க்க முடியாமலிருக்கும் இவ்வாறான சந்தர்ப்பத்தில் இந்த பைகளின் பேக்கப் பிரதியொன்று இருக்குமானால் அதனை வேறொரு கணினியில் ஏற்றியோ அல்லது ஹாட் டிஸ்கை மாற்றிக் கணினியை சரி செய்த பிறகோ பயன்படுத்தக் கூடியதாயிருக்கும். எனினும் பேக்-அப் பிரதி இல்லையெனின் அவற்றை நிரந்தரமாகவே இழக்க நேரிடும் அல்லது. . அதிக நேரத்தைச் செலவிட்டு அந்த ஆவணங்களை மறுபடியும் உருவாக்க வேண்டியிருக்கும்

டெஸ்க்டொப் கணினியை நீங்கள் செல்லுமிடமெல்லாம் தூக்கிச் செல்ல முடியாது. எனவே முக்கியமான பைல்களை ஒரு சீடியிலோ அல்லது பென்ட்ரைவிலோ பேக்கப் செய்து விட்டால் அதன நீங்கள் செல்லுமிடத்திள்ள ஒரு கணினியில் இட்டுப் பயன்படுத்தலாம். இதனை பேக்கப செய்வதனால் பெறக் கூடிய மற்றொரு பயனாகக் கொள்ளலாம்.

ஒரு ரீமோட் சேர்வரின் உதவியுடன் இணையத்திலும் பைல்களையோ அவற்றை இயக்கக கூடிய மென்பொருள்களையோ பேக்கப் செய்து வைக்க லாம். இதனை ஓன்லைன் பேக்கப் என்பர். இணையத்தில் இவ்வாறான சேவை வழங்கும் ஏராளமான நிறுவனங்கள் உள்ளன. சில நிறுவனங்கள் இந்த சேவையை இலவசமாகவும் சில சிறிய தொகையை கட்டணமாகப் பெற்றும் வழங்குகின்றன. ஓன்லைன் பேக்கப் மூலம் நீங்கள் உலகின் எந்த மூலையிலிருந்தாலும் உங்கள் பைல்களை அணுக முடியும்.

கணினியை குறிப்பிட்ட கால இடை வெளியில் பேக்கப் செய்து கொள்ள வேண்டும். பேக்கப் செய்ய மறந்து விடுமானால் பேக் அப் செய்யும் செயற்பாட்டை நீங்கள் குறிப்பிடும் கால இடை வெளியில் விண்டோஸ் தானாகவே பேக்கப் செய்வதற்கும் வசதியுள்ளது.. குறைந்தது மாதமொருமுறையேனும் பேக்கப் செய்து கொள்வது சிறந்த நடை முறையெனப் பரிந்துரைக்கப்படுகிறது எனினும் உங்கள் கணினியில் தினசரி டேட்டா சேக்கப்படுமாயின் வாரமொரு முறையேனும் பேக்கப் செய்து கொள்ளல் நல்லது.

இவ்வாறு பேக்கப் செய்து கொண்டால் ஹாட் டிஸ்கில் பாதிப்பு ஏற்படினும் தகவல், இழப்பைக் குறைத்துக் கொள்ள முடிவதோடு குறைந்த நேரத்திலேயே அதனை மீட்டுக் கொள்ளவும் முடியும்.
விண்டோஸ் எக்ஸ்பீ பதிப்பில் பேக்கப் செய்வதற்கான யூட்டிலிட்டியும் இணைந்து வருகிறது. எந்த பைல்களை பேக்கப் செய்ய வேண்டும், பேக்கப் செய்த பைல்களை எந்த ஊடகத்தில் சேமிக்கப்பட வேண்டும் என்பதைத் தீர்மானித்த் பிறகு பின்வரும் வழிகளில் பேக்கப் செய்ய ஆரம்பிக்கலாம்.


விண்டோஸ் எக்ஸ்பீ இயங்கு தளத்தில் Start →Programs →Accessories →System Tools ஊடாக Backup தெரிவு செய்யுங்கள். அப்போது Backup and Restore விசர்ட் தோன்றும். அங்கு வரும் மூன்றாவது கட்டத்தில் நான்கு தெரிவுகள் உள்ளன.

All information on this computer என்பதைத் தெரிவு செய்வதன் மூலம் கணினியிலுள்ள அனைத்து பைல்களையும் பேக்கப் செய்யலாம். எனினும் இதற்கு அதிக கொள்ளளவு கொண்ட ஒரு ஊடகம் தேவைப்படும் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.

My documents and settings என்பதைத் தெரிவு செய்வது சிறந்த தெரிவாகும். பயனர் கணக்குக்குரிய மை டொகுயுமண்ட்ஸ் போல்டரானது, அவுட்லுக் எக்ஸ்பிரஸ் மூலம் பெற்ற மின்னஞ்சல்கள், இண்டர்நெட் எக்ஸ்ப்லோரர் பயன்படுத்திய குக்கீஸ் மற்றும் விருப்பமான இணைய
தளங்களின் பட்டியல் என்பவற்றுடன் விண்டோஸ் ரெஜிஸ்ட்ரி செட்டிங்ஸ் என்பவற்றைக் கொண்டிருக்கும். பேக்கப் செய்ய வேண்டிய பைல்கள் கணினியில் வேறொரிடத்தில் இருப்பின் அவற்றையும் மை டொகுயுமண்ட்ஸ் போல்டருக்கே நகர்த்திக் கொள்வது பேக் அப் செயற்பாட்டை இலகு படுத்தும்
.

ஒரே கணினியைப் பல பேர் பயன்படுத்தும் சூழலில் Everyone's documents and settings என்பதைத் தெரிவு செய்வதன் மூலம் அனைத்து பயனர் கணக்குகளுக்குரிய ஆவணங்கள் மற்றும் விண்டோஸ் ரெஜிஸ்ட்ரி செட்டிங்ஸ் அனைத்தும் பேக்கப் செய்யப்படும்.

உங்கள் ஆவணங்கள் மைடொகுயுமெண்ட்ஸ் போல்டருக்கு வெளியே வேறொரு இடத்தில் சேமிக்கப்பட்டிருப்பின், Let me choose what to back up
என்பதைத் தெரிவு செய்ய வேண்டும். இதனைத் தெரிவு செய்வதன் மூலம் உங்களுக்கு பேக் அப் செய்ய அவசியமற்ற பைல்களைக் நீக்க முடியும்.

பேக்கப் செய்யும் பைல்களை எந்த ஊடகத்தில் சேமிப்பது என்பதை விண்டோஸ் அடுத்து வினவும். மெக்னடிக் டேப் எனும் காந்த நாடா, ப்லொப்பி டிஸ்க், சிப் டிஸ்க், ஹாட் டிஸ்க், சீடி, டீவிடி, பென் ட்ரைவ் என எவற்றிலும் சேமித்துக் கொள்ளலாம். உங்கள் கணினி ஒரு வலையமைப்பிலிருந்தால் வெறொரு கணினியிலும் கூட சேமித்துக் கொள்ளலாம். ஹாட் டிஸ்கில் பேக்கப் செய்கையில் C - ட்ரைவ் அல்லாத வேறொரு பாட்டிசனில் பேக்கப் செய்தல் நல்லது.

பேக்கப் செய்ததும் அனைத்து பைல்களும் ஒரே பைலாக சேமிக்கப்படும். பேக்கப் பைல் . bkf என்ற பைல் நீட்டிப்பைக் கொண்டிருக்கும். ஒரு பேக்கப் பைலைப் பயன்படுத்த முன்னர் ஒரு (Zip) சிப் பைலை (extract) விரித்துக் கொள்வது போல் அதனை ரீஸ்டோர் (restore) செய்து கொள்ள வேண்டும்..

விண்டோஸ் விஸ்டா பதிப்பபில் பேக்க்ப் செய்வதற்கு Backup and Restore Center ஐ அணுக வேண்டும் அதற்கு கண்ட்ரோல் பேனலில் System and Maintenance தெரிவு செய்யுங்கள். அங்கு Backup your computer. தெரிவு செய்யுங்கள். அங்கு Backup files, தெரிவு செய்வதன் மூலம் உங்களுக்குத் தேவையான பைல்களை பேக்கப் செய்யலாம்.

                                                                                                      

2 comments:

நண்பனிடம் சொல்லுங்க,,,,,,,,,
பிடிச்சிருந்தாலும்....இல்லை என்றாலும் ;)