அன்பை பகிர்வோம்,அன்பால் இணைவோம்

03 February 2012

உங்கள் வலைப்பதிவில் ஒட்டெடுக்க..

வலைப்பதிவு என்பது நம் கருத்துக்களை மற்றவர்களுடன் பகிர்ந்துகொள்ளவே என்பது பெரும்பாலானோரின் கருத்து. ஆனால் வலைப்பதிவின் மூலம் மற்றவர்களின் கருத்துக்களையும் நாம் சேகரிக்கலாம். அதற்கு நம் வலைப்பதிவிலேயே ஒட்டெடுப்பும் நடத்தி வாசகர்களை ஒட்டளிக்கச் செய்யலாம்.
உதாரணமாக இந்தியாவின் அடுத்த பிரதமர் யார்?, நீங்கள் வலைப்பதிவு வைத்துள்ளது எதற்காக? இந்த வலைப்பதிவு நன்றாக உள்ளதா? நண்பன்  திரைப்படம் நன்றாக இருக்கிறதா? என நம் வலைப்பதிவிலேயே நம் வாசகர்கள் மூலம் வாக்கெடுக்கலாம்.




அதற்கு DASHBOARD--) DESIGN--) ADD A GADGET என்பதை அழுத்துங்கள். அழுத்தியவுடன் ஒரு திரை தோன்றும். 




அதில் POLL என்பதை தேடி அதற்கு அருகில் உள்ள கூட்டல் குறியீட்டை அழுத்துங்கள். அழுத்தியவுடன் புதிய திரை தோன்றும். 




அதில் உங்கள் கேள்வியையும் பதில்களையும் கொடுத்துள்ள கட்டங்களில் நிரப்புங்கள். நிறைய பதில்கள் இருந்தால் Add another answer என்பதை அழுத்தி பதில்களை சேர்த்துக்கொள்ளலாம். தேவையில்லாத பதில்களை Remove அழுத்தி நீக்கிக் கொள்ளலாம். 


உங்கள் கேள்வியை பொருத்து வாசகர்கள் ஒரு பதிலையோ அல்லது பல பதில்களையோ தேர்வு செய்ய நேரிடலாம். உதாரணமாக இந்தியாவின் அடுத்த பிரதமர் யார்? என்ற கேள்விக்கு ஒரு பதிலை மட்டுமே எதிர்பார்க்கலாம். ஆனால் உங்களுக்க பிடித்த படங்கள் எவை? என்ற கேள்விக்கு பல பதில்கள் இருக்கலாம். அப்படி பல பதில்கள் வேண்டிய சமயத்தில் Allow users to select multiple answers என்பதற்கு அருகில் உள்ள பெட்டியை தேர்வு செய்யவேண்டும். 


நீங்கள் எத்தனை நாள் இந்த ஓட்டெடுப்பை நடத்தவேண்டும் என நினைக்கிறீர்களோ அதற்கு ஏற்றாற்போல Poll Closing date and time என்னும் பெட்டியில் தேதியையும் நேரத்தையும் நிரப்புங்கள். முக்கியமாக மாதத்தை முதலில் அடிக்கவேண்டும். அதாவது dd/mm/yyஎன்பதற்கு பதிலாக mm/dd/yy என்று அடிக்கவேண்டும்.  


அனைத்தையும் நிரப்பிய பின்னர் Save அழுத்துங்கள். அழுத்திய பின்னர் உங்கள் Designபகுதியில் ஒட்டெடுப்பு பெட்டி இருக்கும்.  அதை தேவையான இடத்துக்கு மாற்றிக்கொள்ளலாம்.  தேவைப்பட்டால் Edit என்பதை அழுத்தி மாற்றங்கள் செய்துகொள்ளலாம். அவ்வளவுதான் ஒட்டெடுப்புப் பெட்டி தயார். 










வலைப்பதிவு என்பது நம் கருத்துக்களை மற்றவர்களுடன் பகிர்ந்துகொள்ளவே என்பது பெரும்பாலானோரின் கருத்து. ஆனால் வலைப்பதிவின் மூலம் மற்றவர்களின் கருத்துக்களையும் நாம் சேகரிக்கலாம். அதற்கு நம் வலைப்பதிவிலேயே ஒட்டெடுப்பும் நடத்தி வாசகர்களை ஒட்டளிக்கச் செய்யலாம்.

5 comments:

  1. நல்ல பதிவு ! வாழ்த்துக்கள் ! நன்றி சார் !

    ReplyDelete
  2. அழகாக சொல்லியிருக்கிறீர்கள்..

    தகவலுக்க நன்றி

    ReplyDelete
  3. இப்படிக்கூட ஒரு விஷயம் இருக்கா? தேவைப்படும் போது பயன்படுத்திக் கொள்கிறேன். அவசியமான பகிர்வுக்கு என் மனமார்ந்த நன்றி!

    ReplyDelete

நண்பனிடம் சொல்லுங்க,,,,,,,,,
பிடிச்சிருந்தாலும்....இல்லை என்றாலும் ;)