நீங்கள் ஒவ்வொரு முறை பதிவை வெளியிடும்போதும் அதில் தேதியும் நேரமும் சேர்ந்தே வெளியாகும். சில நேரங்களில் சரியான தேதி தெரியாமல் அதற்கு முந்தைய தேதியோ அல்லது பிந்தைய தேதியோ தெரியும். இதற்கு காரணம் உலக்கத்தில் ஒவ்வொரு நாட்டிலும் வெவ்வேறு நேரமும் தேதியும் பின்பற்றுவதே காரணம்.
இதை எப்படி சரி செய்வது என்பது பற்றி பார்க்கலாம். முதலில்
- DASHBOARD
- SETTINGS
- FORMATTING
என்ற இடத்திற்கு செல்லுங்கள். அதில்
- DATE HEADER FORMAT
- ARCHIVE INDEX DATE FORMAT
- TIME STAMP FORMAT
- TIME ZONE
என்று பதிவின் நேரம் மற்றும் தேதிக்கு சம்பந்தப்பட்டவை காணப்படும். அதில் உங்கள் பதிவில் நேரமும் தேதியும் எப்படி தெரியவேண்டும் என அதில் இருக்கும் ஏராளமான முறைகளில் ஏதாவது ஒன்றை தேர்வு செய்து கொள்ளலாம்.
மேற்சொன்னபடி தேதியும் நேரமும் சரியாக தெரிய TIME ZONE என்னும் இடத்தில் உங்கள் நாட்டிற்கான நேரத்தை தேர்வு செய்யுங்கள். உதாரணமாக நீங்கள் இந்தியாவில் இருந்தால் GMT +5.30 என்பதனை தேர்வு செய்யுங்கள். தேர்வு செய்த பின்னர் கீழே SAVE SETTINGS என்பதனை அழுத்துங்கள்.
இனி நீங்கள் எழுதும் பதிவுகளில் சரியான நேரமும் தேதியும் தோன்றும். அதுமட்டுமல்லாமல் நீங்கள் எழுதிய பதிவுகளிலும் நேரமும் தேதியும் மாறியிருக்கும்.
No comments:
Post a Comment
நண்பனிடம் சொல்லுங்க,,,,,,,,,
பிடிச்சிருந்தாலும்....இல்லை என்றாலும் ;)