விண்டோஸ் விஸ்டா, விண்டோஸ் ஏழு என்று அடுத்தடுத்து புதிய இயங்குதளங்களை மைக்ரோசாப்ட் வெளியிட்டு இருந்தாலும் விண்டோஸ் எக்ஸ்பி இன்னும் வெற்றிகரமாக இயங்குதளமாகவே திகழ்ந்து வருகிறது.புதிய இயங்குதளங்களுக்கு மாறமால் இன்னும் விண்டோஸ் எக்ஸ்பி உபயோகித்து வருபவர்கள் அதிகம்.
விண்டோஸ் எக்ஸ்பியில் தமிழ் எழுத்துக்கள்
விண்டோஸ் எக்ஸ்பியை ஒப்பிடும் போது விண்டோஸ் விஸ்டா மற்றும் ஏழில் தமிழ் இணையதளங்களை வாசிப்பது புத்துணர்ச்சியை தரும். விண்டோஸ் எக்ஸ்பியிலும் தமிழ் எழுத்துகளை நன்றாக தோன்ற வைப்பது எப்படி என்று பல முறை முயன்று வெற்றி பெற வில்லை. இதற்கு தீர்வாக நான் இணையத்தில் உலா வந்தபோது என் கண்ணில் பட்டது இந்த மென்பொருள்.
விண்டோஸ் விஸ்டா, ஏழில் தமிழ் எழுத்துக்கள்
விண்டோஸ் எக்ஸ்பியில் நல்ல 'ஊட்டமான' தமிழ் எழுத்துருக்களை பெற மைக்ரோசாப்டின் ClearType Tuner என்ற பவர் டாய் மென்பொருளை உங்கள் கணினியில் நிறுவி கொண்டால் போதுமானது. அதனை தரவிறக்க இந்த சுட்டிக்கு செல்லவும். நிறுவிய பின் உங்கள் கணினியின் கண்ட்ரோல் பேனலில் புதிதாக ClearType Tuning என்று ஒரு ஐகான் தோன்றி இருக்கும். அதனை திறந்து கொள்ளுங்கள்
அதில் Turn On Clear Type என்பதனை தேர்வு செய்து கொண்டு Ok கொடுத்து கொள்ளுங்கள். இனி விண்டோஸ் எக்ஸ்பியில் தமிழ் தளங்களின் எழுத்துகள் விண்டோஸ் விஸ்டா மற்றும் ஏழில் தோன்றுவது போல் தெளிவாக ஊட்டமாக தோன்றும். Start Wizard மூலம் நீங்கள் விரும்புவது போன்று எழுத்துகளின் தோற்றத்தை நீங்கள் மெருகேற்றி கொள்ள முடியும்.
இது சிறிய டிப்ஸாக இருந்தாலும் விண்டோஸ் எக்ஸ்பி உபயோகிப்பவர்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். தமிழ் இணைய தளங்களை வாசிப்பது என்றால் விண்டோஸ் ஏழுக்கு மாறி கொண்டிருந்த நான், இனி விண்டோஸ் எக்ஸ்பியிலும் சோர்வின்றி வாசித்து கொள்ள போகின்றேன்.
சகோ. அன்புதில்! அருமையான டிப்ஸை கொடுத்து இருக்கிறீர்கள். நான் எக்ஸ்பி தான் பயன்படுத்தி வருகிறேன். நீண்ட நாட்களாக இந்த மனக்குறை இருந்து வந்தது. இப்போது தீர்ந்தது. மனமார்ந்த நன்றி! தொடரட்டும் உங்கள் சேவை!
ReplyDeleteஅன்புடன் நீங்கள் தந்தது நல்லதொரு தீர்வு எனக்கு. நானும் பயன்படுத்திக் கொள்கிறேன். மிக்க நன்றி.
ReplyDeleteமிக்க நன்றி சகோதரரே. பயன்படுத்தியபின்னர் வித்தியாசம் நன்கு தெரிகிறது.
ReplyDelete