போன பாடத்தில் dashboardஐப் பற்றி சிறிய அறிமுகம் போல ஒரு பதிவு எழுதினேன். இந்தப் பாடத்தில் எப்படி ஒரு பதிவு வெளியிடுவது என்பது பற்றி பார்க்கலாம். முதலில் உங்கள் DASHBOARDல் இருந்து NEW POST என்பதனை தேர்வு செய்து உள்ளே செல்லுங்கள். ஒரு வோர்ட்பேட் போன்ற விண்டோ ஒன்று தோன்றும்.
அதில் உங்கள் பதிவின் தலைப்பு கொடுத்துவிட்டு பதிவை எழுதுங்கள். நீங்கள் உங்கள் பதிவின் எழுத்தை அதிகரிக்கலாம், எழுத்தை மாற்றலாம், மேலும் வோர்ட்பேட்டில் உள்ளது போலது போலவே bold, italic, strike, போன்றவைகளும், எழுத்து நிறமும், எழுத்துக்குப் பின்னால் உள்ள நிறமும் தேர்வு செய்துகொள்ளலாம்.
Link: நீங்கள் எழுதும்போது ஏதாவது வேறொரு வலைப்பக்கத்துக்கு இணைப்பு கொடுக்க நினைக்கலாம். அதற்கு அந்த வலைப்பக்கத்தின் முகவரியை கொடுக்காமல், ஏதாவது ஒரு எழுத்தை அழுத்தினால் அந்த வலைப்பக்கம் தோன்றுவது போல் இணைப்பு கொடுக்கலாம். அதற்கு உதவுவதே இந்த Link.
நீங்கள் எந்த வார்த்தையின் மூலம் இணைப்பு கொடுக்க வேண்டும் என நினைக்கிறீர்களோ அந்த வார்த்தையை தேர்வு செய்து கொண்டு Link என்பதனை அழுத்துங்கள். உங்களுக்கு மேலே உள்ளது போல் ஒரு திரை திறக்கும். அதில் web address என்பதில் இணைக்கவேண்டிய வலைப்பதிவின் முகவரியைக் கொடுங்கள். வேண்டும் என்றால் நீங்கள் ஒரு ஈ-மெயில் முகவரிக்கும் இணைப்பு கொடுக்கலாம். கொடுத்தபின் OK என்பதனை அழுத்தினால் நீங்கள் தேர்ந்தெடுத்த வார்த்தையில் அந்த வலைப்பக்கம் இணைக்கப்பட்டிருப்பதை உறுதிபடுத்தும் வகையில் அடிக்கோடு காணப்படும்.
Image: நீங்கள் ஒரு பதிவில் ஒரு புகைப்படத்தை இணைக்க உதவுவது இந்த Image சுட்டி. ஏதாவது ஒரு புகைப்படத்தை நீங்கள் இணைக்க விரும்பினால் இணைக்க வேண்டிய இடத்தில் cursorஐ வைத்துவிட்டு Image சுட்டியை அழுத்தவும். உங்களுக்கு கீழ்கண்டதை போல் ஒரு திரை தோன்றும்.
அதன் மூலம் நீங்கள் உங்கள் கணினியில் உள்ள புகைப்படத்தை தரவேற்றம் செய்தோ அல்லது ஏற்கனவே தரவேற்றப்பட்ட புகைப்படத்தின் சுட்டியையோ கொடுத்து நீங்கள் உங்கள் பதிவில் புகைப்படத்தை இணைக்கலாம். புகைப்படம் தோன்றியவுடன் அது எந்த இடத்தில் இருக்கவேண்டும் எவ்வளவு பெரிதாக இருக்கவேண்டும் என்பதையும் நீங்கள் முடிவு செய்யலாம்.
புகைப்படம் தோன்றியவுடன் புகைப்படத்தின் மேல் கிளிக் செய்தால் மேலுல்லதை போல் ஒரு சின்ன பெட்டி தோன்றும். அதன் மூலம் நீங்கள் பதிவில் புகைப்படம் எப்படி தோன்றவேண்டும் என்பதை முடிவு செய்யலாம். மேலும் add caption என்பதனை தேர்வு செய்து புகைப்படத்தைப் பற்றி சிறிய விளக்கமும் அளிக்கலாம்.
Video: உங்கள் கணினியில் இருந்து வீடியோவை தரவேற்றி இணைக்க விரும்பினால், video சுட்டியை அழுத்தி புகைப்படத்தை இணைப்பது போலவே இணைக்கலாம். மேலும் யூடியூப் போன்ற தளங்களில் இருந்தும் வீடியோக்களில் embed code ஐ பயன்படுத்தி வீடியோக்களில் இணைக்கலாம்.
Jump Break: உங்கள் வலைப்பதிவின் முகப்பு பக்கத்தில் பதிவின் ஆரம்ப சில வரிகள் மட்டும் தெரியவேண்டும் எனில் jump breakஐ பயன்படுத்தலாம். பதிவின் முதல் சில வரிகளுக்குப் பின்னர் cursorஐ வைத்து jump break சுட்டியை அழுத்தினால் ஒரு கோடு தோன்றும். முகப்பு பக்கத்தில் கோட்டிற்கு மேல் உள்ள வரிகள் மட்டுமே தோன்றும். அதற்கு கீழ் Read More என்பது தோன்றும். அதை கிளிக் செய்தால் முழு பதிவும் தோன்றும்.
மேலும் வோர்டில் உள்ளது போலவே எழுத்துக்களை align செய்யலாம், Numbered list, Bulleted list, Quote, Spell Check போன்றவற்றையும் உபயோகிக்கலாம். மேலும் இந்திய மொழிகளில் எழுதுவதற்கான சுட்டியும் உள்ளது. இதில் தமிழும் உள்ளது. பல தமிழ் பதிவர்கள் இதில் இருக்கும் சுட்டியை பயன்படுத்துகிறார்கள்,மேலும் பலர் தமிழில் எழுதுவதற்காக சில மென்பொருட்களையும் பயன்படுத்துகின்றனர்.
இதன் கீழ் post options என்ற இணைப்பும் உள்ளது. அதை கிளிக் செய்தால் அந்த பதிவிற்கான settings தோன்றும். அதில் நீங்கள் உங்கள் பதிவிற்கான வாசகர் கருத்துக்களை அனுமதிக்கலாம் அல்லது வாசகர்களை கருத்துக்களை ஏற்க மறுக்கலாம். Edit HTML Line Breaks என்பதில் நீங்கள் எந்தவித மாற்றமும் செய்ய தேவையில்லை. பதிவில் enter செய்தாலே Line Breaks உருவாகிவிடும். நீங்கள் பிளாக்கர் டிப்ஸ் எழுதுபவராக இருந்தால் சில html கோடிங்குகளை நீங்கள் உங்கள் பதிவில் இட வேண்டியிருக்கும். அச்சமயங்களில் நீங்கள் compose settings என்பதில் show HTML literally என்பதை தேர்வு செய்துகொண்டால் வசதியாக இருக்கும். மேலும் உங்கள் பதிவை எழுதிவிட்டு அதை எப்போது வெளியிட வேண்டும் எனவும் தீர்மானித்து வெளியிடலாம். அதற்கு Post date and time என்பதின் கீழ் Scheduled at என்பதில் பதிவை வெளியிட வேண்டிய நேரமும் தேதியும் குறிப்பிட்டு Publish Post என்பதனை அழுத்தினால் நீங்கள் குறிப்பிட்ட நேரத்தில் பதிவு வெளியாகும்.
மேலும் நீங்கள் பதிவுகளை பாதி எழுதிவிட்டு save செய்துகொள்ளலாம். மீண்டும் நேரம் கிடைக்கும்போது edit posts என்பதில் நீங்கள் சேமித்த பதிவு இருக்கும். அதில் edit என்பதை தேர்வு செய்து நீங்கள் முழு பதிவையும் எழுதி வெளியிடலாம். நீங்கள் முன்னரே வெளியிட்ட பதிவுகளும் edit postsல் இருக்கும், நீங்கள் அதிலும் edit என்பதை தேர்வு செய்து மாற்றங்களை செய்து வெளியிடலாம்.
உங்கள் பதிவு எப்படித் தோன்றும் என்பதை preview அழுத்தி பார்த்துக்கொள்ளலாம். எல்லாம் எழுதிய பின்னர் publish post என்பதை அழுத்தினால் பதிவு வெளியானதை உறுதி செய்யும் வகையில் ஒரு திரை தோன்றும். அதில் view post என்பதை தேர்வு செய்து நீங்கள் உங்கள் புதிய பதிவை உங்கள் வலைப்பதிவில் காணலாம். எப்படி பதிவை வெளியிடுவது என்பதை தெரிந்துகொண்டீர்களா? அடுத்த பதிவில் சந்திக்கிறேன்.
.
Menula SUN tv Live Nu Thappa Iruku....
ReplyDeleteActual ah SUN NEWS Tv Live NU Irkanum....
Maathigonga.............!
thank u fd i will change later
ReplyDeletearumaiyaana vilakka pathivu
ReplyDelete