அன்பை பகிர்வோம்,அன்பால் இணைவோம்

20 June 2012

மொபைல் போன் மூலம் அனைத்து நாட்டு வானொலிகளையும் கேட்டு மகிழ

கையடக்கத்தொலைபேசிகளில் இணையப்பாவனை என்பது நாளுக்கு நாள்  அதிகரித்த ஒன்றாகவே காணப்படுகின்றது. அந்த வகையில் கையடக்க தொலைபேசிகள் வாயிலாக இணைய வானொலி பாவனையும் அதிகரித்தே காணப்படுகின்றது. பல கையடக்க தொலைபேசிகளில் பண்பலை வாயிலான(FM) வானொலி மென்பொருட்கள் காணப்படுகின்ற போதிலும் அவற்றின் தெளிவின்மை காரணமாக பலரும் இணைய வானொலியினை பயன்படுத்துகிறார்கள்.


 இணைய வானொலியினை பயன்படுத்துவதற்கு பொதுப்பொட்டல வானலைச் சேவை(GPRS) உள்ள கையடக்க தொலைபேசிகள் அவசியம். அந்த வகையில் இந்த இணைய வானொலி சேவைகளை பெற்றுக் கொள்ளுவதற்கு சிறப்பான மென்பொருட்கள் உள்ளன.

அத்தகையதொரு மென்பொருட்கள் தான் iRadio மற்றும் VirtualRadio என்னும் இணையவானொலி மென்பொருட்கள் ஆகும். இவற்றினை இணையத்தளங்களிலிருந்து இலவசமாக பெற்றுக் கொள்ளமுடியும். இவற்றை கையாள்வதற்கும் மிக இலகுவாக இருக்கும்.

iRadio என்னும் மென்பொருளில் 700 க்கும் மேற்பட்ட இணைய வானொலிகள் உள்ளன. இந்த மென்பொருளில் தமிழ் மொழியிலான பல இணைய வானொலிகளும் இடம்பிடித்துல்லைமை மிகவும் சிறப்பானதொரு விடயம்.

iRadio என்னும் மென்பொருளை தரவிறக்குவதற்கான மென்பொருள் சுட்டி:
கணணி வழியிலான சுட்டி: iRadio
கையடக்கத்தொலைபேசி வழியிலான சுட்டி: m.getjar.com
குறியீடு: 083548
online fm/anbuthil.com


VirtualRadio என்னும் மென்பொருள் மூலமாகவும் தமிழ்மொழியிலான பல இணையவானொலி சேவைகள் உள்ளன.
மென்பொருள் தரவிறக்குவதற்கான சுட்டி: VirtualRadio
கையடக்கத்தொலைபேசி வழியிலான சுட்டி: m.getjar.com
குறியீடு:084278
         
                                                                         
online fm/anbuthil.com

7 comments:

  1. அருமையான செய்தி நண்பா ட்ரை செய்து பார்கிறேன் ரொம்ப நன்றி...

    ReplyDelete
  2. பயனுள்ள பகிர்வு நண்பா.!

    ReplyDelete
  3. உங்கள் இணையத்தளத்துக்கு எளிதான முறையில் டிராபிக் பெறுவது எப்படி ?


    Tamilpanel.com தளத்தின் மூலம் உங்கள் இணையத்திற்கு , மிக எளிதான முறையில் நூற்றுக் கணக்கான வாசகர்களை எளிதில் பெறலாம் .இதில் கருத்தில் கொள்ள வேண்டியது என்னவெனில் நீங்கள் , ஓட்டுப் பட்டையோ , வாக்குகளோ அல்லது உங்கள் தளத்தின் செய்திகள் முன்னணி இடுகையாகவோ தேர்ந்தெடுக்கப்பட வேண்டிய அவசியம் இல்லை




    மேலும் விபரங்களுக்கு



    http://www.tamilpanel.com/







    நன்றி

    ReplyDelete
  4. பயனுள்ள பதிவு !

    ReplyDelete
  5. நண்பரே உங்கள் சேவைக்கு பாராட்டுகிறேன்

    ReplyDelete

நண்பனிடம் சொல்லுங்க,,,,,,,,,
பிடிச்சிருந்தாலும்....இல்லை என்றாலும் ;)