அன்பை பகிர்வோம்,அன்பால் இணைவோம்

04 September 2012

Desktop Icon களை ON/OFF செய்ய

ஒரு சிலரது கணினின் டெஸ்க்டாப்பில் கோப்புகள், ஷார்ட்கட்கள், ஃபோல்டர்கள் என நிரம்பி வழிவதை பார்த்திருக்கிறோம். அவர்களுக்கே என்ன என்ன ஐகான்கள் தங்கள் டெஸ்க்டாப்பில் உள்ளன என்பது நினைவில் வைத்திருப்பது கடினம்தான்.


இவ்வாறு தங்கள் டெஸ்க்டாப்பை வைத்திருப்பவர்கள், தங்களுக்கு விருப்பமான, அழகான ஒரு வால் பேப்பரை திரையில் அமைக்கும் பொழுது, இந்த ஐகான்களை OFF செய்தால் நன்றாக இருக்குமே என்று யோசித்தால், வழக்கமாக நாம் செய்வது, டெஸ்க்டாப்பில் வலது க்ளிக் செய்து, Arrange Icons by --> Show Desktop Icons க்ளிக் செய்வதன் மூலமாக, ON/OFF செய்ய முடியும்.




ஆனால், இந்த பணியை எளிதாக்க, Hide Desktop Icons எனும் மிகச் சிறிய இலவச மென்பொருள் மிகவும் பயனுள்ளதாக உள்ளது.


இதனை தரவிறக்கி உங்கள் கணினியில் பதிந்து கொண்ட பிறகு இதற்கு ஒரு ஷார்ட்கட் ஐ உருவாக்கி டெஸ்க்டாப்பில் வைத்து விடாதீர்கள்.(ஏனென்றால் டெஸ்க்டாப் ஐகான்களை OFF செய்த பிறகு, மறுபடியும் ON செய்வதில் சிரமம் ஏற்படலாம்) மாறாக Start Menu / Quick Launch பாரில் இணைத்துக் கொள்ளலாம். இதனை ஒரு முறை க்ளிக் செய்ய, Desktop Icon கள் OFF ஆகும், மறுமுறை க்ளிக் செய்ய ON ஆகும்.


                                                            




8 comments:

  1. ரொம்ப நாள் கழிச்சு வந்திருக்கீங்க வாங்க வாங்க! :)

    ReplyDelete
    Replies
    1. நன்றி நண்பா அலுவலக வேலை காரணமாக நான் மலேசியா சென்றிருந்ததால் தொடந்து பதிவிட முடியாமல் போனது

      Delete
  2. Nice Post, But Not Use For Me bcs My OS is Ubuntu.

    Plz Come To My site

    http://palathum10m.blogspot.com/

    ReplyDelete
  3. நன்றி...

    மலேசியா பயண பதிவு உண்டா...?

    ReplyDelete
    Replies
    1. இந்த தளம் தொழில்நுட்ப பதிவுகளை பகிர்வதர்க்கான தளமாக இருப்பதால் மன்னிக்கவும் நண்பா

      Delete
  4. பகிர்வுக்கு மிக்க நன்றி!

    ReplyDelete

நண்பனிடம் சொல்லுங்க,,,,,,,,,
பிடிச்சிருந்தாலும்....இல்லை என்றாலும் ;)