அன்பை பகிர்வோம்,அன்பால் இணைவோம்

05 October 2012

பயனுள்ள முத்தான 10 தளங்கள்

கம்ப்யூட்டரைப் பயன்படுத்துவதற்கான முழுமையான குறிப்புகளை நம்மால் நினைவில் வைத்துக்கொள்ள முடிவதில்லை. அதனால் எளிய முறையில் குறிப்பு களைத்தரும் பயனுள்ள தளங்கள் மற்றும் நவீன தொழில்நுட்பக் கருவிகள் குறித்த சில தளங்களைத் இந்த பதிவில் பார்க்கலாம்.

                                 
 www.quotedb.com

நீங்கள் சிறந்த பேச்சாளராக வேண்டுமா? உங்கள் உரை வீச்சுகளில் அடிக்கடி பல பெரிய அறிஞர்கள் மற்றும் பெய தலைவர்களின் கூற்றுக்களைக் கோடிட்டுக் காட்ட வேண்டுமா? அப்படியானால் அவற்றுக் கான சிறந்த தளம் இதுதான். 60 வகை பொருள்களில், ஏறத்தாழ 4,000 புகழ் பெற்ற மேற்கோள் உரைகள் உள்ளன.சிறந்த பேராசியராக, மாணவர்களிடம் நற்பெயர் பெற விரும்பும் ஆசியர்களுக்கும் இது உகந்த தளம்.


  www.photonhead.com


டிஜிட்டல் CAMERA வாங்கிப் பயன்படுத்தாதவர்கள் மிகவும் குறைவு என்றே கூறலாம். எளிதாக, சிறுவர்கள்கூட இவற்றைக் கையாளத் தொடங்கிவிட்டனர். ஆனால், முழு மையாக அதன் வசதிகளைப் பயன்படுத்துகின்றனரா என்றால் இல்லை என்றே கூற வேண்டும். டிஜிட்டல் CAMERAவின் வசதிகள் என்ன? எதனைப் பயன்படுத்தினால் என்ன கிடைக்கும் என்று விலாவாயாகத் தரும் தளம் இது. அபெர்ச்சர், ஸ்பீட், ரெட் ஐ எனப் பல விஷயங்கள் குறித்து இங்கு தகவல்கள் தரப்படுகின்றன. குழந்தைக்குச் சொல்லிக் கொடுப்பது போன்ற பல டுடோரியல்கள் உள் ளன. சிலேட்டர் றையில் ஒரு CAMERA ஆன்லைனிலேயே தரப்பட்டு எப்படி இயக்குவது என்பது சொல்லிக் கொடுக்கப்படுகிறது. ஆனால், கொஞ்சம் பழைமையானது போல சில விஷயங்கள் இருக்கின்றன. நவீன தொழில் நுட்பம் தான் வேண்டும் என எண்ணுபவர்கள்  www.slrgear.com    என்ற தளத்திற்குச் செல்லலாம்.

  www.downloadsquad.com


SOFTWARE மற்றும் வெப் புரோகிராம்களில் அவ்வப்போது ஏற்படும் மாற்றங்கள் குறித்து இந்தத் தளத்தில் தகவல்கள் அப்டேட்        செய்யப்படும். மிகவும் பயனுள்ள தகவல்களைத் தருவதுடன், வேடிக்கையாகவும் சில சமயம் செய்தி களைத் தரும்.

  www.stopbadware.org


இது பக்கத்து வீட்டுக் காவல்காரன்போல் செயற்படுகிறது. ஏதேனும் மோசமான விளைவு களைத் தருவதற்கென்றே உருவாக்கப்படும் தளங்கள் குறித்த தகவல்களைத் தருகிறது. இதுபோன்ற தளங்களால் பாதிக்கப்பட்டவர்களிடமிருந்து வரும் தகவல்களைத் திரட்டி அவற்றின் அடிப் படையில் மோசமான தளங்கள் மற்றும் புரோகிராம்களின் பட்டியலை அளிக் கிறது.

 www.techcrunch.com


இணையதள வெப்சைட் குறித்த செய்திகள் மற்றும் ஆய்வுகள் குறித்த தகவல்களைத் தருகி றது. குறிப்பாக அண்மைக்காலத்திய செய்திகள் அதிகம்.

  www.gmailtips.com

கூகுள் மெயில் பயன்படுத்துபவர்களுக்கான தகவல் களஞ்சியம். அதிகமான எண்ணிக்கை யில் குறிப்புகள், டிப்ஸ் மற்றும் ட்ரிக்ஸ் தரப்பட்டுள்ளன.

   www.thegreenbutton.com


 கூகுள் மெயில் பயன்படுத்துபவர்களுக் கான தகவல் களஞ்சியம். இதிலும் பல் வேறு விதமான, அதிகளவு எண்ணிக்கை யிலான குறிப்புகள், மற்றும் ட்ரிக்ஸ் தரப் பட்டுள்ளன.

  www.tweakguides.com


இதுவும் உங்கள் சிஸ்டத்தை ட்யூன் செய்து அதன் திறனை அதிகப்படுத்த வேண்டுமா? அதற்கு இதுதான் நீங்கள் செல்ல வேண்டிய தளம். விளையாட்டுகள், பிரவுசர்கள், டிரைவர்கள் என அனைத்தையும் இந்ததளம் மூலம் மேம்படுத்தி உங்கள் COMPUTER இயக்கத்தை புதுப்பிக்கலாம்.

  www.ilounge.com


இதனுடைய பெயர் தெரிவிப்பது போல் இது ஐபாட் மற்றும் ஐட்யூன் ஆகியன குறித்த தக வல்களை தரும் தளம். இந்த இரண்டு விஷயங்கள் குறித்தும் உங்களுக்கு என்ன உதவி வேண்டுமானாலும் இங்கு கிடைக்கும். எப்படிப் பயன்படுத்துவது என்ற டுடோரியல் தகவல்கள் மிகவும் பயனுள்ளன. இந்த இரண்டைப் பொறுத்தவரை இந்தத் தளத்தை ஒரு கடல் எனலாம். இதில், ஐபாட் 2.2 வழி காட்டி இபுக்காக உள்ளது. இதில், 202 பக்க தகவல்கள் ஐபாட் குறித்து உள் ளன.

 www.goaskalice.com


அமெரிக்க கொலம்பியா பல்கலைக்கழகம் நடத்தும் மெடிக்கல் இணையதளம். சிலர் கேட்கக் கூச்சப்படும் கேள்விகளை, யாரென்று காட்டிக்கொள்ளாமல் இங்கு இடலாம். சரியான முறையான பதில் கிடைக்கும்.

12 comments:

  1. ஒவ்வொரு பதிவாக தராமல் ஒட்டுமொத்த தகவலையும் தரும் தளங்களை அறிமுகப்படுத்தியமைக்கு மிக்க நன்றி அன்பு..

    தேவையான நண்பர்களுக்கு மிகவும் பயன்படும் பதிவு.. இது.. பகிர்வுக்கு நன்றி..! பாராட்டுக்கள்..!

    தொடர்ந்து உங்கள் பணி சிறக்க என்னுடைய வாழ்த்துகள்..!

    ReplyDelete
    Replies
    1. தங்களின் வாழ்த்துக்களால் வளர்கிறேன்

      என்றும் உங்களின்
      அன்பை தேடி அன்பு

      Delete
  2. சேமித்துக் கொண்டேன்... மிக்க நன்றி...

    ReplyDelete
    Replies
    1. தங்களின் கருத்துக்கு நன்றி

      Delete
  3. பயனுள்ள பதிவு, பகிர்ந்தமைக்கு மிக்க நன்றிகள்

    ReplyDelete
    Replies
    1. தங்களின் கருத்துக்கு நன்றி

      Delete
  4. பயனுள்ள தகவல்கள்.... நல்ல பகிர்வு

    ReplyDelete
    Replies
    1. தங்களின் கருத்துக்கு நன்றி

      Delete
  5. பயனுள்ள தகவல்கள் அன்பு.
    நன்றி.

    ReplyDelete
  6. இதுபோன்ற தகவலைத்தான் தேடினேன்.வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  7. பயனுள்ள தகவல்கள்
    நன்றி

    ReplyDelete
  8. அரிய தகவல்கள் அளித்தமைக்கு மிக்க நன்றி

    ReplyDelete

நண்பனிடம் சொல்லுங்க,,,,,,,,,
பிடிச்சிருந்தாலும்....இல்லை என்றாலும் ;)