விண்டோஸ் இயங்குதளத்தில் 32 Bit, 64 Bit என இரண்டு வகைப்பட்ட இயங்குதளங்கள் உள்ளது என்பதை நாம் அறிவோம். நாம் விண்டோஸ் எக்ஸ்பி பயன்படுத்தி வந்த காலங்களில் நமக்கு இந்த 32 Bit / 64 Bit -ல் எதை உபயோகிப்பது என்பதைப் பற்றிய யோசனை தோன்றவில்லை. ஆனால் தற்பொழுது நாம் புதிதாக வாங்கும் மடி கணினிகள் பெரும்பாலும் 64 பிட் விண்டோஸ் 7 இயங்குதளம் நிறுவப்பட்ட நிலையில் தான் விற்பனைக்கு வருகின்றன.
முதலில் உங்கள் விண்டோஸ் 7 இயங்குதளம் 32 பிட்டா அல்லது 64 பிட்டா என்பதை எப்படி அறிய முடியும் என்பதை (பலருக்கு தெரிந்தாலும், புதியவர்களுக்காக) பார்க்கலாம். Start menu வில் Computer -ல் வலது க்ளிக் செய்து Properties செல்லுங்கள்.
இப்பொழுது திறக்கும் System information திரையில் System Type -ல் உங்களது இயங்குதளம் 32/64 பிட்டா என்பதை அறிய முடியும்.
சரி! இவை இரண்டிற்கும் என்ன வித்தியாசம்? மேலே உள்ள படத்தை கவனியுங்கள், அதில் Installed Memory (RAM) 8 GB. விண்டோஸ் 32 பிட் இயங்குதளங்கள் 4 GB க்கு மேல் நினைவகத்தை ஏற்றுக் கொள்ளாது.
இது கணினியின் நினைவகம் மட்டுமல்ல, நீங்கள் உபயோகிக்கும் வீடியோ கார்டும்தான். 4 GB க்கு மேலாக RAM அல்லது வீடியோ கார்டு பயன் படுத்த வேண்டுமானால் நீங்கள் 64 பிட் இயங்குதளத்திற்குத்தான் மாற வேண்டும்.
மேலும் 32 பிட் மென்பொருட்கள் பெரும்பாலானவை 64 பிட் இயங்குதளத்தில் இயங்கும் ஒரு சில மென்பொருட்கள் உதாரணமாக AutoCAD, 3 D Studio போன்றவைகள் நிச்சயமாக 64 பிட் பதிப்பாகத்தான் இருக்க வேண்டும்.
மற்றொரு முக்கிய செய்தி 64 பிட் என்றவுடன் 32 பிட்டுக்கு அப்படியே இரட்டை வேகத்தில் இருக்கும் என எதிர்பார்க்கக் கூடாது.
முதலில் உங்கள் விண்டோஸ் 7 இயங்குதளம் 32 பிட்டா அல்லது 64 பிட்டா என்பதை எப்படி அறிய முடியும் என்பதை (பலருக்கு தெரிந்தாலும், புதியவர்களுக்காக) பார்க்கலாம். Start menu வில் Computer -ல் வலது க்ளிக் செய்து Properties செல்லுங்கள்.
மேலும் 32 பிட் மென்பொருட்கள் பெரும்பாலானவை 64 பிட் இயங்குதளத்தில் இயங்கும் ஒரு சில மென்பொருட்கள் உதாரணமாக AutoCAD, 3 D Studio போன்றவைகள் நிச்சயமாக 64 பிட் பதிப்பாகத்தான் இருக்க வேண்டும்.
மற்றொரு முக்கிய செய்தி 64 பிட் என்றவுடன் 32 பிட்டுக்கு அப்படியே இரட்டை வேகத்தில் இருக்கும் என எதிர்பார்க்கக் கூடாது.
பலரும் தெரிந்து கொள்ள வேண்டிய பகிர்வு...
ReplyDeleteநன்றி நண்பரே...tm2
Very good info and well explained - Rob Anderson.
ReplyDeleteஎனக்கு ஒரு பெரிய பிரச்சனை, கணினியில் 8GB Ram install பண்ணி இருக்கு, ஆனா usable memory 6 GB, virtual memory 11 GB எண்டு எரர் மெசேஜ் அடிக்கடி வருது, என்ன செய்யலாம் ?
ReplyDeleteதோள் கொடுத்தவரே, நுணுக்கமான பதிவு! வாழ்த்துக்கள்! இதுவர எனக்கு, 32-பிட்'ல ஏன் அதிகபட்ச ரேம் 4ஜி.பி.'னு தெரியாம இருந்துச்சு! அதத் தெரிய வெச்சுட்டீங்க, ரொம்ப தேங்ஸ்'ங்க! ஆனாலும், எனக்கு 3 சந்தேகம் இருக்கு! அதத் தீத்து வெய்க்கிறீங்களா?
ReplyDelete1.அந்த ஃபார்முலா எப்டி வந்துச்சு? அதுல இருக்ற ஒவ்வொன்னும் எதுக்குனு சொல்லிக் குடுங்க!
2.அதிகபட்ச மெமரி'ன்றது, க்ராஃபிக்ஸ் காட் சேத்தீங்களா இல்ல சேத்தாமைங்களா?
3.சேத்தாமைனா, க்ராஃபிக்ஸ் காட் எவ்ளோ ஜி.பி. வர சப்போட் ஆகும்னு சொல்லுங்க ப்ளீஸ்!
Really Good Post
ReplyDelete