அன்பை பகிர்வோம்,அன்பால் இணைவோம்

08 January 2013

பயனுள்ள சில இணைய தளங்கள் பகுதி_2

தினந்தோறும், பொழுதெல்லாம் இணையத்தில் உலா வருபவரா நீங்கள்! நிச்சயம் உங்களுக்கு பேஸ்புக்(facebook) இணைய தளம் தெரிந்திருக்கும். ஏன், அதே போல ஜிமெயில், யாஹூ, மைக்ரோசாப்ட், ட்விட்டர் போன்ற தளங்களெல்லாம் தெரிந்திருக்கும்.ஆனால், ஜின்னி, ஜூங்கல் அல்லது ஜாங்கில் (Jinni, Joongel அல்லது Jangle) ஆகிய தளங்களைப் பற்றி தெரியுமா? இப்போது இங்கு தெரிந்து கொள்ளுங்கள். இவை எல்லாம் நாம் அனைவரும் தெரிந்து பயன்படுத்த வேண்டிய தளங்கள்.

                                             
சர்ச் இஞ்சின்கள் - நாமெல்லாம், தெரிந்து தினந்தோறும் பயன்படுத்து பவை. பரிந்துரைக்கும் இஞ்சின்கள் (Redcommendation Engines) பற்றி தெரியுமா? அப்படி ஒரு வகை சர்ச் இஞ்சின்கள் இணையத்தில் மிகச் சிறப்பாகச் செயல்படுகின்றன. நாம் கொடுக்கும் தேடல் சொற்களுக்கேற்ப உள்ள தளங்களைச் சுட்டிக் காட்டும். ஆனால் இந்த பரிந்துரைக்கும் இஞ்சின்கள், சில தளங்களை நம் தேடல் தொடர்புடையதாகப் பரிந்துரைக்கும். அப்படிப்பட்ட சில தளங்களைப் பார்க்கலாம்.


1. டேஸ்ட்கிட் (Tastekid):


புதிய நூல்கள், திரைப்படங்கள், இசை ஆல்பங்கள், நூலாசிரியர்கள் ஆகியன குறித்து தெரிந்து கொள்ள ஆவலா? இந்த தளம் (http://www.tastekid.com/) செல்லுங்கள். இங்கு மேலே சொல்லப்பட்ட பிரிவுகளில் புதிதாய் என்னவெல்லாம் உள்ளன என்றும் அவற்றைக் காணச் செல்ல வேண்டிய தளங்கள் குறித்தும் காட்டப்படும். இதைக் காண்கையில், நம் தமிழ் மொழி மற்றும் தமிழ்நாடு சார்ந்தவற்றிற்கும் இது போன்ற ஒரு தளம் இருந்தால் எவ்வளவு பயனுள்ளதாக இருக்கும் என்ற எண்ணம் ஏற்படுகிறது.


2. ஆல்டர்னேடிவ் ட்டூ (Alternative To):


ஏதேனும் ஒரு புரோகிராம் அல்லது சேவையை மனதில் நினைத்துக் கொண்டு, இதே போல ஒன்று இருந்தால் நல்லது என்று எண்ணுகிறீர்களா? இந்த தளம் அது போன்ற தகவல்களைத் தருகிறது. முகவரி: http://alternativeto.net/


கூகுள் ஒன்று மட்டுமே மிக,மிக நல்ல தேடு தளம் என்று எண்ணிக் கொண்டிருக்கிறோம். அதைப் போல, ஏன், அதைக் காட்டிலும் சிறப்பாக தகவல்களைக் காட்டும் தளங்கள் பல உள்ளன. இவற்றின் செயல்பாடுகளும் வித்தியாசமாக இருக்கும். இதோ அவை:


1. ஜூங்கல் (Joongel):

இதன் செயல்பாடு முற்றிலும் வித்தியாசமும் பயனும் கொண்டது. அனைத்து தேடல் இஞ்சின் களையும் வகைப்படுத்தி மொத்தமாக தருகிறது. அத்துடன், குறிப்பிட்ட சேவைகளை முன்னிறுத்தியும் முடிவு களைத் தருகிறது. இசை, படங்கள், சமுதாய மையங்கள், கிசுகிசு என எத்தனையோ பிரிவுகளை முதன்மைப் படுத்தித் தகவல்களைத் தருகிறது.

ஒரு சர்ச் இஞ்சின் மூலம் கிடைக்கும் தகவல்களை முதலில் தருகிறது. அப்போதே, மேலும் வேறு வகை தகவல்கள் வேண்டுமாயின், எந்த தேடல் தளத்திற்குச் செல்ல வேண்டும் என்றும் சுட்டிக் காட்டுகிறது. செல்ல வேண்டிய தள முகவரி: http://www.joongel.com/


2.சூப்பர் குக் (Supercook):

பொதுவாக, சமையல் குறித்து தகவல் தரும் தளங்கள், சில உணவுப் பதார்த்தங்களைச் சொல்லி, அவற்றைத் தயாரிப்பது எப்படி என விலாவாரியாகத் தகவல்களைத் தரும். தேவையான சமையல் பொருட்கள், காய்கறிகள், மசாலாக்கள் மற்றும் பிற பொருட்கள் குறித்தும், அவற்றைக் கொண்டு, பதார்த்தம் தயாரிப்பது எப்படி என்றும் விளக்கமாகத் தரப்படும்.
இதைப் படித்துவிட்டு, நாம் முதலில் பொருட்க ளை வாங்கச் செல்ல வேண்டும். ஒன்று இருந்தால், இன்னொன்று கிடைக்காது. கடைசியில் நம் ஆசையே போய்விடும். இந்த தளம் சற்று வித்தியாசமானது. உங்களிடம் என்ன என்ன சமையல் பொருட்கள் உள்ளன என்று பட்டியலிடுங்கள். அவற்றைக் கொண்டு, என்ன உணவுப் பண்டங்களைத் தயாரிக்கலாம் என்று விபரங்களை இந்த தளம் தருகிறது.

இந்த தளத்தின் முகவரி: http://www.supercook.com/



இனி மீடியா தளங்களைக் காணலாம். இங்கு பெரும்பாலும் பிற மொழிப் பாடல்கள், குறிப்பாக ஆங்கிலம், சார்ந்த தகவல்கள் இருந்தாலும், நம்முடைய பாடல்களைப் பதிவு செய்து கேட்க வசதி தரும் தளங்களும் உள்ளன.

1. ஜாமென்டோ (Jamendo):

ஏறத்தாழ மூன்று லட்சத்திற்கும் மேற்பட்ட இசைப்பாடல்கள் இதில் உள்ளன. இலவசமாக டவுண்லோட் செய்திடலாம். பாடல் ஆல்பங்களும் இதில் அடக்கம். அவற்றை டவுண்லோட் செய்திடலாம்; அல்லது ஆன்லைனிலேயே கேட்கலாம். பொதுவாக உங்கள் தேடலில் கிடைக்காத பாடல்களை நாங்கள் தருகிறோம் என்று இந்த தளம் பாடல்களைத் தருகிறது. முகவரி: http://www.jamendo.com/en/ இங்கு சென்று ஏ.ஆர். ரஹ்மான் என டைப் செய்து தேடிய போது அவர் இசை அமைத்த அணைத்து ஆல்பப் பாடல்களை டவுண்லோட் செய்திட முடிந்தது.

3 comments:

  1. பயனுள்ள பகிர்வுக்கு நன்றிங்க.

    ReplyDelete
  2. Respected Sir ji,
    i am one of the regular visitor's your blog. I wish to publish my Blogs here. this is for who are suffering & loss in the share market. If they wish 'll ready to help them related this field .i am giving free services.if you wish you 'll publish my blogs here this is my blog ID : http://tradersguides.blogspot.in/
    Thanks in advance
    Regds P.Bharath

    ReplyDelete

நண்பனிடம் சொல்லுங்க,,,,,,,,,
பிடிச்சிருந்தாலும்....இல்லை என்றாலும் ;)