ஷேர்வேர் அல்லது பிரீவேர் எனப்படும் இலவச புரோகிராம்கள் எந்த தளங்களில் கிடக்கும் என அறிய வேண்டுமா? அதற்கென்றே சில தளங்கள் உள்ளன. ஏற்கனவே நீங்கள் அறிந்த இலவச புரோகிராம்களுக்கு அப்டேட் பைல்கள் தரப்பட்டுள்ளனவா? என்ற தகவல் களையும் தரும் தளங்கள் உள்ளன. அவற்றில் சில.

1. போர்ட்டபிள் பிரீவேர் கலக்ஷன் (Portable Freeware Collection):
இலவச புரோகிராம்கள் மற்றும் அவற்றிற்கான அப்டேட் பைல்களைக் காட்டும் தளம் இது. மிகவும் பயனுள்ள தளம். இதன் முகவரி: www.portablefreeware.com/
2. கீ எக்ஸ் எல் (keyxl):
ஏதேனும் ஒரு புரோகிராமினை நீங்கள் பயன்படுத்தி வருகிறீர்கள். இதற்கான ஷார்ட்கட் கீகள் என்ன என்ன என்று தெரிய வேண்டுமா? இந்த தளம் சென்று, நீங்கள் பெற விரும்பிய புரோகிராமின் பெயரைத் தரவும். தளங்களின் பட்டியல் உங்களுக்குக் கிடைக்கும். இந்த தளத்தின் முகவரி:http://www.keyxl.com/
மேலே சொன்னவற்றில் அடங்காத சில பயனுள்ள தளங்களும் உள்ளன. அவற்றில் முக்கிய தளங்களும் அவற்றின் பயன்களும் பார்ப்போம்.
1. சி.எல்.1.ப்பி. நெட்:
இணைய வெளியில் நமக்கு ஒரு கிளிப்போர்டு தரும் தளம். ஆம், நீங்கள் இணைய வெளியில் சுற்றி வருகையில், பின்னர் படித்துக் கொள்ளலாம் என்ற வகையில் டெக்ஸ்ட்களைத் தேர்ந்தெடுத்து பதிவு செய்து வைத்துக் கொள்ள விரும்புவீர்கள். ஒவ்வொரு முறையும், டெக்ஸ்ட் தேர்ந்தெடுத்த பின்னர், ஏதேனும் வேர்ட் ப்ராசசர் ஒன்றைத் திறந்து, அதில் பதிந்து பைல் பெயர் கொடுத்து சேவ் செய்திடுவீர்கள்.
இந்த தொல்லையே இல்லாமல், உங்களுக்கென ஒரு இணைய தள கிளிப் போர்டு ஒன்றை இந்த தளம் தருகிறது. என்ற பெயருடன் இணைந்த பெயரில், உங்களுக்கான தளம் ஒன்றை உருவாக்குகிறது. இதில் திறக்கப்படும் எடிட்டரில், நீங்கள் தேர்ந்தெடுக்கும் டெக்ஸ்ட்டை பதிந்து வைக்கலாம். ஜஸ்ட், கிளிக் செய்தால் போதும், தேர்ந்தெடுத்த டெக்ஸ்ட் அந்த தளத்தின் எடிட்டரில் பதியப்படும்.
பின்னர், இந்த டெக்ஸ்ட் அந்த தள முகவரியில் ஏழு நாட்கள் இருக்கும். நேரம் கிடைக்கும்போது, அந்த தளம் சென்று பார்த்துப் படிக்கலாம். அல்லது உங்கள் கம்ப்யூட்டரில் உள்ள டெக்ஸ்ட் எடிட்டரில் சேவ் செய்து வைக்கலாம். இந்த தளத்தின் முகவரி: https://github.com/robmayhew/cl1p.net-source
2. வெப் 2 கால்க் (web2calc):
இந்த தளத்திற்குச் (http://web2.0calc.com) சென்றால், அருமையான ஒரு கால்குலேட்டர் கிடைக்கும். பலவித அறிவியல் கணக்குகளைச் செயல்படுத் தலாம். முழுமையான சயின்டிபிக் கால்குலேட்டர். இதே போல இன்னொரு தளமும் உள்ளது . இதிலும் ஒரு ஆன்லைன் சயின்டிபிக் கால்குலேட்டர் தரப்படுகிறது. இதன் முகவரி: http://www.ecalc.com/
3. ரெய்னி மூட் (rainymood):
ஓய்வாக பொழுதை ரசிக்க வேண்டுமா! பின்னணி யில் மழை பெய்தால் எவ்வளவு நன்றாக இருக்கும். இந்த சூழ்நிலையை இந்த தளம் தருகிறது. இதன் முகவரி: http://www.rainymood.com/
4. நீங்கள் பிறந்த ஆண்டில் என்ன என்ன சம்பவங்கள் நடந்தன. நூல்கள், சினிமா, இசை எனப் பல பிரிவுகளில் தகவல் தரும் தளம். இதன் முகவரி:http://whathappenedinmybirthyear.com/
மிக மிக முன்னால் என்றால், எடுத்துக் காட்டாக, 1950 என்று அமைத்தால், அப்போது கூகுள், யாஹூ எல்லாம் இல்லை. டிவிடி இல்லை எனத் தொடங்கி, அப்போது ஆஸ்கார் அவார்ட் வாங்கிய படம், நடிகர், நடிகை என்று பட்டியல் நீள்கிறது. உலக அளவில் நடந்த முக்கிய நிகழ்வுகள் தரப்படுகின்றன. சரித்திர நிகழ்வுகளைக் காணவும் இதனைப் பயன்படுத்தலாம்.

மிகவும் பயனுள்ள தகவல்கள்.
ReplyDeleteஉங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும் இனிய பொங்கல் திரு நாள் நல் வாழ்த்துக்கள்.
ReplyDeleteithula orey oru website mattum than nallam maththathu ellam kuppa websites ok
ReplyDeletethank for PORTABLEFREEWARE.COM