மொபைலில் இருக்கும் தகவல்களை அவ்வப்போது கணினிக்கு மாற்ற வேண்டியிருக்கும், ஒவ்வொரு முறையும் டேட்டா கேபிள்களை வைத்திருக்க முடியாது. இருந்தும் தகவல்களை மாற்ற ப்ளூடூத் வசதியை பயன்படுத்தலாம். ப்ளூடூத் மூலம் இரு கருவிகளுக்கு தகவல்களை பகிர்ந்து கொள்வது எளிமையாக முடிகிறது. ஆனால் ப்ளூடூத் கருவியை கணினியுடன் இணைப்பது கடினமாக உள்ளதா, அப்ப இதை படிங்க...
ஆன் முதலில் உங்க மொபைல் ப்ளூடூத்தை ஆன் செய்யுங்கள், பின் அந்த டிவைஸ் கண்டுபிடிக்கும்படி (டிஸ்கவரபிள் ஆப்ஷனில்) உள்ளதா என்று பாருங்கள்.
கணினி இப்ப உங்க கம்ப்யூட்டரின் ஸ்டார்ட் மெனு சென்று கன்ட்ரோல் பேனலை க்ளிக் பன்னுங்க, அங்கு டிவைசஸ் மற்றும் ப்ரின்டர்ஸ் ஆப்ஷனை தேர்வு செய்யுங்கள்.
ஆட் டிவைஸ் இப்போ ஆட் டிவைஸ் ஆப்ஷனை க்ளிக் செய்யுங்கள். இது ஹார்டுவேர் மற்றும் செட்டிங்ஸ் ஆப்ஷனுக்கு கீழ் இருக்கும்.
தேடல் ஆட் டிவைஸ் பட்டனை க்ளிக் செய்தவுடன் தானாக ப்ளூடூத் டிவைஸை தேட ஆரம்பிக்கும்.
கணினி இப்போ உங்க கணினியை மொபைல் கருவியுடன் இணைக்கலாம். உங்க ப்ளூடூத் பெயர் மெனுவில் தெரிந்ததும் Next என்ற பட்டனை அழுத்தவும். இது கணினியுடன் ப்ளூசூத் இணைவதை உறுதி படுத்தும்.
நண்பரே, நான் முன்பொரு முறை ப்ளூடூத் குறித்த ஒரு தகவல் வாசித்தேன். அதை குறிப்பெடுக்க மறந்ததால் இன்றுவரை அந்த தகவலை தேடுகிறேன். தங்களுக்கு தெரிந்தால் சொல்லுங்கள். மொபைல் போனிலிருந்து கணினிக்கு ப்ளூடூத் இணைப்பை ஏற்படுத்துதல். கணினியில் ஸ்டார்ட்டை கிளிக் செய்து ரன் னில் குறிப்பிட்ட 5 இலக்க எண் ஒன்றை டைப் செய்து சர்ச் செய்தால் கணினியில் புளூடூத் இயங்க தொடங்கிவிடும். அந்த 5 இலக்க எண் பற்றி தங்களுக்கு தெரியுமா.
ReplyDeletefsquirt அந்த 5 இலக்க எண்
Deleteசிறந்த பகிர்வு
ReplyDeleteதொடருங்கள்