அன்பை பகிர்வோம்,அன்பால் இணைவோம்

18 March 2015

பேஸ்புக்கில் அறிமுகமில்லாத நண்பர்களின் பகிர்வுகளைத் தவிர்க்க

பேஸ்புக் தனது பயனர்களைத் தொடர்ந்து நிலைநிறுத்திக்கொள்ள ஒவ்வொரு முறையும் பல புத்தம் புதிய வசதிகளை அறிமுகப்படுத்திக்கொண்டே இருக்கிறது. அவ்வாறு அறிமுகப்படுத்திய வசதிகளில் ஒன்றுதான் இன்ட்ரஸ்ட்(Interest)வசதி.


இந்த Interest வசதியின் சிறப்பு என்ன?

இந்த Interest வசதியின் மூலம் பேஸ்புக்கில் உங்களுக்கு விருப்பமான நண்பர்களின் பகிர்வுகளை மட்டும் காண முடியும். மற்ற நண்பர்களின் பகிர்வுகளை பார்க்க முடியாது. பேஸ்புக்கில் உள்ள அனைத்து நண்பர்களின் பகிர்வுகளையும் பார்வையிட அதிக நேரம் எடுத்துக்கொள்ளும். அதேசமயம் அதிக பரிச்சயமில்லாத நண்பர்களின் பகிர்வுகளும் அதில் தோன்றுவதால் அது நமக்குத் தேவையில்லாத ஒன்றாகவும் இருக்கும். எனவே இந்த இன்ட்ரஸ்ட் வசதியை செயல்படுத்துவதன் மூலம் நமக்கு மிக நெருங்கிய, பிடித்தமான நண்பர்களின் பகிர்வுகளை மட்டும் காண முடியும்.

                                    Image result for fb interest
Interest வசதியை செயல்படுத்துவது எப்படி? 


1. உங்கள் பேஸ்புக் கணக்கில் உள்நுழைந்துகொள்ளுங்கள். (Login)
2. பேஸ்புக் முகப்பு பக்கத்தில் இடது புறம் Interest என்ற வசதி இருக்கும்.
அதன் மீது கிளிக் செய்யுங்கள்.
3. தோன்றும் பக்கத்தில் Create List என்பதைக் கிளிக் செய்யுங்கள்.
அடுத்து தோன்றும் பக்கத்தில்
4. Pages, Subscriptions, Friends என்ற வசதிகள் இருக்கும்.
5. அதில் Friends என்பதில் கிளிக் செய்து உங்களுக்கு மிக நெருக்கமான நண்பர்களை தேர்வு செய்துகொள்ளுங்கள்.
6. அடுத்து next என்பதை கிளிக் செய்யவும்.
7. பிறகு தோன்றும் பக்கத்தில் நீங்கள் உருவாக்கிய லிஸ்டிற்கு பெயர் ஒன்றை கொடுக்கவும்.
8. அந்த பக்கத்தில் நீங்கள் உருவாக்கிய Interest யாருக்கெல்லாம் தெரிய வேண்டும் என்பதையும் தேர்வு செய்யுங்கள். அதாவது Friends, Public, Only Me என்று மூன்று வசதிகள் இருக்கும். அதில் உங்களுக்குப் பிடித்தமானதை தேர்வு செய்யுங்கள்.
9. இறுதியாக கீழிருக்கும் Done என்ற பட்டனை அழுத்துங்கள்.

முடிந்தது. நீங்கள் உங்கள் Interest வசதியை உருவாக்கிவிட்டீர்கள். இனி தேவையில்லாத நண்பர்களின் பகிர்வுகளை நீங்கள் தவிர்த்து, உங்களுக்குப் பிடித்த நண்பர்களின் பகிர்வுகளை மட்டும் எளிதில் பார்வையிடலாம்.


பேஸ்புக்கில் இந்த Interest வசதி மிகவும் பயனுள்ள ஒரு வசதியாகும். அறிமுகமில்லாத நண்பர்களின் பகிர்வுகளைத் தவிர்க்க சிறந்த இந்த வசதியைப் பயன்படுத்தி, நீங்களும் உங்களுக்குப் பிடித்தமான, அறிமுகமான நண்பர்களின் பகிர்வுகளை மட்டும் பார்வையிடுங்கள்...

2 comments:

  1. பயனுள்ள பதிவு.

    ReplyDelete
  2. Anna en website/blog la COMMENT BOX varala

    enna mistake pannen nu teriyala.

    Pls comment box epdi kondu vara en blog la?

    ReplyDelete

நண்பனிடம் சொல்லுங்க,,,,,,,,,
பிடிச்சிருந்தாலும்....இல்லை என்றாலும் ;)