போட்டோகிராபர்கள் மற்றும் போட்டோ கிராபிக் டிசைனர்களுக்குப் (photographic designer)பயன்படும் ஓர் அருமையான மென்பொருள் போட்டோஷாப். போட்டோக்களை, எந்த கேமராவின் மூலம் எடுத்திருந்தாலும் சரி, அவற்றை போட்டோஷாப் மென்பொருளில் திறந்து, போட்டோக்களை மேலும் அழகூட்ட முடியும். புதிய டிசைன்களை உருவாக்க முடியும். தமிழை போட்டோஷாப்பில் பயன்படுத்துவது எப்படி என்பதைப் பார்ப்போம்.
போட்டோஷாப்பில் தமிழ் எழுத்துரு பிரச்சினை
கணினி வைத்துள்ள பலரும் போட்டோஷாப் மென்பொருளை நிறுவி, தங்களுடைய படங்களை, தங்களுக்கு விருப்பமான டிசைனகளை வரையவே விருப்பபடுகின்றனர். போட்டோஷாப்பில் ஆங்கிலத்தில் எழுதுவது என்பது இயல்பிருக்காவே அதில் வசதி இருக்கும். தமிழில் எழுதுவது கடினம். தமிழ் எழுத்துருக்களை மென்பொருளை எடுத்துக்கொள்ளாது. தமிழில் தட்டச்சிட்டாலும் அவைகளை சிறிய கட்டங்களாகவோ அல்லது குறியீடுகளாகவோ மாறிவிடும்.
எழுத்துரு பிரச்னையைத் தீர்க்க வழி
போட்டோஷாப்பில் பயன்படுத்த விரும்பும் தமிழ் எழுத்துருக்களை தரவிறக்கம்செய்து கொண்டு, அவற்றை கணினியில் உள்ள Fonts போல்டரில் சேர்க்க வேண்டும்.
பிறகு NHM Writer மென்பொருளின் துணையுடன் உங்களுக்கு வேண்டிய எழுத்துக்களை உள்ளிட்டு, அவற்றை காப்பி செய்துகொண்டுபோய் போட்டோஷாப்பில் பேஸ்ட் செய்யலாம். அல்லது e-Kalappai, Azhagi மென்பொருட்களினையும் பயன்படுத்தலாம். அழகி மென்பொருளிலேயே எழுத்துரு மாற்றிக்கொள்ளும் வசதி உண்டு.
தமிழ் எழுத்துரு தரவிறக்கம் & நிறுவல்
யுனிக்கோட் எழுத்துருக்களிலேயே பல வடிவ எழுத்துருக்கள் உள்ளன. அவற்றை Download செய்து பயன்படுத்தலாம்.
சுட்டி: Download Unicode Fonts
டவுன்லோட் செய்யப்பட்ட எழுத்துருக்களை காப்பி செய்துகொண்டு, கம்ப்யூட்டரில் Start பட்டனை அழுத்தி,
Control Panel என்பதை கிளிக் செய்து,
Fonts போல்டரை திறந்து,
அதில் Paste செய்துவிடலாம்.
பிறகு பாண்ட்போல்டரை மூடிவிடலாம்.
NHM Converter:
NHM Converter என்பது ஒரு எழுத்துரு மாற்றி மென்பொருளாகும். இந்த மென்பொருள் மூலம் ஒரு எழுத்துருவில் உள்ள வார்த்தைகளை மற்றொரு எழுத்துருவிற்கு மாற்றிக்கொள்ள முடியும்.
உ.ம்.
உங்களுக்கு யுனிகோட் எழுத்துரு வேண்டும். ஆனால் பாமினி தமிழ் தட்டச்சு மட்டுமே தெரியும் எனில் பாமினி எழுத்துருவைப் பயன்படுத்தி வேண்டியதை தட்டச்சிட்டுவிட்டு, அவற்றை அப்படியே Unicode எழுத்துருவை தேர்ந்தெடுத்து Convert என்ற பொத்தானை சொடுக்குவதன் மூலம் மாற்றிக்கொள்ள இயலும்.
தமிழ் தட்டச்சு தெரியவில்லையா?
NHM Writer - ல் உள்ள Phonetic முறையைத் தேர்ந்தெடுப்பதன் மூலம் ஆங்கிலத்தை கொண்டு தமிழை உள்ளிடலாம். பிறகு வேண்டிய எழுத்துருவிற்கு மாறிக்கொண்டு, மாற்றிய எழுத்துருவை போட்டோஷாப்பில் பயன்படுத்திக்கொள்ள முடியும்.
Tam, Bamini, Tab, TACE, TSCII, Unicode, Vanavil, Shreelibi, Unicode, Vanavil, Softview ஆகிய எழுத்துருக்கள் உள்ளன. வேண்டிய எழுத்துருக்களை இணையத்திலிருந்து தரவிறக்கம் செய்துகொள்ள முடியும்.
முக்கியமான குறிப்பு: நீங்கள் மாற்றிய எழுத்துருவானது உங்கள் கணினியின் பாண்ட் போல்டரில் நிறுவப்பட்டிருக்க வேண்டும்.
அவ்வாறு மாற்றப்பட்ட எழுத்துருவை போட்டோஷாப்பில் உள்ளிட்டு, அந்த எழுத்துருவிற்கான பாண்ட்டை தேர்ந்தெடுப்பதன் மூலம் தமிழில் போட்டோஷாப்பில் தட்டச்சிட முடியும்.
வீடியோ டுடோரியல் :
கீழிருக்கும் இணைப்பிணை சொடுக்கி இப்பதிவிற்கான வீடியோவினைக் காணுங்கள்.
பயனுள்ள தகவல்! நன்றி!
ReplyDeleteசிறந்த வழிகாட்டல்
ReplyDeleteதொடருங்கள்
நல்ல தகவல்
ReplyDeleteTanq bro......
ReplyDeletethanks
ReplyDeleteஅருமையான பதிவு மேலும் photoshop cc மற்றும் illustrator cc ல் தமிழ் பான்ட் உபயோகிப்பதை தெரிந்து கொள்ள இங்கே சொடுக்கவும். Photoshop CC மற்றும் Illustrator CC ல் தமிழில் எழுத
ReplyDelete