ஆண்ட்ராய்ட் இயக்கத்தில் செயல்படும் பேஸ்புக் செயலியின், புதிய செயலியான பேஸ்புக் லைட் தற்போது கூகுள் பிளே இந்தியா ஸ்டோரில், இலவச தரவிறக்கத்திற்குத் தரப்பட்டுள்ளது. ஸ்மார்ட்போன் பயன்பாடுகளில், பேஸ்புக் பயன்பாடு முக்கிய இடத்தை வகிக்கிறது. உலக அளவில், மாதந்தோறும் இதனைத் தொடர்ந்து பயன்படுத்துவோரின் எண்ணிக்கை 144 கோடியாகும். இவர்களில், இந்தியாவில் 10 கோடி பேர் பயன்படுத்தி வருகின்றனர். அமெரிக்காவிற்கு அடுத்தபடியாக, அதிக பயனாளர்களை பேஸ்புக் கொண்டிருப்பது இந்தியாவில் தான்.
ஆனால், இவர்களில் பெரும்பாலானவர்கள், வேகம் மிகக் குறைந்த (2ஜி) இணைய இணைப்பினையே பயன்படுத்தியே, பேஸ்புக் தளத்தைக் காண்கின்றனர். இதனால், தரவிறக்கம் செய்வது மிக மிகத் தாமதமாகிறது. குறிப்பாக, புகைப்படங்களை தளத்திற்கு ஏற்றுவதற்கு அதிக நேரம் காத்திருக்க வேண்டியுள்ளது. இந்தியாவில் மட்டுமின்றி, வேறு பல நாடுகளிலும் இதே நிலை தான்.
இவர்களுக்கு உதவும் வகையில், பேஸ்புக், “பேஸ்புக் லைட்” என்ற செயலியை அறிமுகப்படுத்தியது. முதலில் ஆசியாவின் சில நாடுகளில் மட்டுமே அறிமுகப்படுத்தப்பட்ட இந்த செயலியின் மூலம், பேஸ்புக் தளத்தினை மிக வேகமாகப் பயன்படுத்த இயலும். படங்கள் அப்லோட் செய்வதும் டவுண்லோட் செய்வதும் மிக விரைவாக மேற்கொள்ள முடியும். தற்போது இந்த செயலி, இந்தியாவிலும் அறிமுகம் ஆகியுள்ளது. இதனைத் தரவிறக்கம் செய்து, ஆண்ட்ராய்ட் 2.2. மற்றும் அதன் பின்னர் வந்த சிஸ்டம் இயங்கும் ஸ்மார்ட்போன்களில் பயன்படுத்தலாம்.

சிறந்த பயனுள்ள பகிர்வு
ReplyDeleteபுதிய வலைப்பூவில் இணைய வாருங்கள்
இவ்வலைப்பூவில் நான் இதுவரை பேணிவந்த ஆறு வலைப்பூக்களை ஒன்றாக்கிப் பேணுகின்றேன்.
http://www.ypvnpubs.com/
நாம் அனைவருக்கும்சிறந்த பயனுள்ள பகிர்வு,சமூக வலைத்தளங்களின் வரிசையில் அசைக்கமுடியாத அரசனாக முதலிடத்தில் திகழும் Facebook ஆனது.
ReplyDeletevery useful site
ReplyDelete