அன்பை பகிர்வோம்,அன்பால் இணைவோம்

30 October 2015

கைப்பேசி விற்பனையில் சரித்திரம் படைத்த Samsung

மொபைல் சாதன உற்பத்தியில் தற்போது சம்சுங் நிறுவனமே தொடர்ச்சியாக பல்வேறு வகையான ஸ்மார்ட் கைப்பேசிகளை அறிமுகம் செய்துவருகின்றது.இந்நிறுவனம் இந்த வருடத்தில் முதல் மூன்று காலாண்டுப் பகுதிகளில் சுமார் 83.8 மில்லியன் கைப்பேசிகளை விற்பனை செய்து சாதனை படைத்துள்ளது.

இதேவேளை இக்காலப் பகுதியில் அப்பிள் நிறுவனம் 38 மில்லியன் வரையான கைப்பேசிகளையே விற்பனை செய்துள்ளது.

மேலும் கைப்பேசிகளுக்கான உலக சந்தையில் சம்சுங் நிறுவனம் 23.7 சதவீதத்தினையும், அப்பிள் நிறுவனம் 13.6 சதவீதத்தினையும் ஆக்கிரமித்துள்ளன.

தவிர ஏனைய ஸ்மார்ட் கைப்பேசி வடிவமைப்பு நிறுவனங்களான Huawei ஆனது 26.7 மில்லியன் கைப்பேசிகளையும், Lenovo 18.8 மில்லியன் கைப்பேசிகளையும், Xiaomi ஆனது 17.8 மில்லியன் கைப்பேசிகளையும் மேற்குறித்த காலப்பகுதியில் விற்பனை செய்துள்ளன.

No comments:

Post a Comment

நண்பனிடம் சொல்லுங்க,,,,,,,,,
பிடிச்சிருந்தாலும்....இல்லை என்றாலும் ;)