அன்பை பகிர்வோம்,அன்பால் இணைவோம்

10 April 2016

பேஸ்புக்கில் வீடியோக்களை தேடுவதற்கான வசதி

பேஸ்புக் நிறுவனம் அதிரடியாக பல புதிய அம்சங்களை பயனர்களுக்காக அறிமுகம் செய்துவருகின்றது.இவற்றின் ஒரு பகுதியாக சில தினங்களுக்கு முன்னர் நேரடி ஒளிபரப்பு வசதியினை அறிமுகம் செய்திருந்தது.இவ்வாறான நிலையில் மற்றுமொரு இலகுவானதும், பயனுள்ளதுமான வசதியினை அறிமுகம் செய்துள்ளது.

அதாவது இதுவரை காலமும் ஒவ்வொருவருடைய Timeline மூலமாகவும், News Feed ஊடாகவும், பகிரப்பட்ட பகுதிகள் ஊடாகவும் வீடியோ வீடியோக்களை பார்வையிடக்கூடியதாக இருந்தது.

எனினும் குறித்த ஒரு வீடியோவை சில நிமிடங்களின் பின்னர் மீண்டும் பார்வையிடுவது கடினமான காரணமாகும்.இதனை தவிர்ப்பதற்காகவே வீடியோ தேடல் (Video Search) எனும் இப் புதிய வசதியினை அறிமுகம் செய்துள்ளது.

இதன் மூலம் பிரபலமாகிக்கொண்டிருக்கும் வீடியோக்கள், நேரடி ஒளிபரப்பு வீடியோக்கள் என்பவற்றினையும் தனித்தனியாக தேடிப் பெற்றுக்கொள்ள முடியும்.

No comments:

Post a Comment

நண்பனிடம் சொல்லுங்க,,,,,,,,,
பிடிச்சிருந்தாலும்....இல்லை என்றாலும் ;)