சம காலத்தில் பல்வேறு வகையான கம்பியூட்டர் ஹேம்கள் காணப்படுகின்ற போதிலும் 3டி ஹேம்களுக்கு தனி வரவேற்பு உண்டு.அதிலும் இராணுவ நடவடிக்கைகளை அடிப்படையாகக் கொண்டு வடிவமைக்கப்பட்ட ஹேம்கள் என்றால் சொல்லவே தேவையில்லை.
அவ்வாறான ஹேம்களில் ஒன்றுதான் Counter-Strike ஆகும். இதேவேளை இக் ஹேம் ஆனது இது வரை காலமும் டெக்ஸ்டாப், லேப்டொப் கணினிகளில் மட்டுமே பயன்படுத்தக் கூடியதாகவும் இருந்தது.
ஆனால் தற்போது இதன் புதிய பதிப்பான Counter-Strike 1.6 வெளியிடப்பட்டுள்ளது. இந்நிலையில் அன்ரோயிட் இயங்குதளங்களில் செயல்படக்கூடிய ஸ்மார்ட் கைப்பேசிகள், டேப்லட்கள் என்பவற்றிலும் இதனை பயன்படுத்தக்கூடியவாறு காணப்படுகின்றது.
எனினும் டெக்ஸ்டாப் கணினிகளில் மவுஸ் மற்றும் கீபோர்ட்டின் உதவியுடன் விளையாடுவதைக் காட்டிலும் தொடுதிரையில் விளையாடும்போது சில சிரமங்கள் இருப்பதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment
நண்பனிடம் சொல்லுங்க,,,,,,,,,
பிடிச்சிருந்தாலும்....இல்லை என்றாலும் ;)