அரசின் பல்வேறு திட்டங்களின் பலன்களை பெறுவதற்கும், மொபைல் போன் எண், வங்கி கணக்கிற்கும் ஆதார் அவசியம் ஆக்கப்பட்டு வரும் நிலையில் 5 வயதிற்கு உட்பட்ட குழந்தைகளுக்கு தனி ஆதார் அட்டையை மத்திய அரசு அறிமுகம் செய்துள்ளது.
'பால் ஆதார்' என பெயரிடப்பட்டுள்ள இத்திட்டத்தின்படி 5 வயதிற்கு உட்பட்ட குழந்தைகளுக்கு நீள நிறத்தில் ஆதார் அட்டை வழங்கப்பட உள்ளது. 5 வயதிற்கு உட்பட்ட குழந்தைகளுக்கு பயோ மெட்ரிக் தகவல்கள் தேவையில்லை. 5 வயது வரை இந்த ஆதார் அட்டையை பயன்படுத்தலாம்.
குழந்தைக்கு 5 வயது ஆன பிறகு பயோமெட்ரிக் தகவல்களை இணைக்க வேண்டும். 5 வயதிற்கு உட்பட்ட குழந்தைகள் வெளிநாட்டில் கல்வி பயில்வதற்கோ, அரசின் கல்விச்சலுகையை பெறுவதற்கோ ஆதாரை பதிவு செய்ய வேண்டும் என்ற கட்டாயமில்லை. பால் ஆதாரை பெற்றோரின் ஆதாருடன் இணைத்துக் கொள்ளலாம்.
குழந்தையின் 5, 10, 15 வயதுகளில் அவரின் பிறப்பு சான்றிதழ் மற்றும் பள்ளி அடையாள சான்றுடன், பயோமெட்ரிக் தகவல்களையும் இணைக்க வேண்டியது அவசியம்.