தமிழக அரசு காலியிடங்களை நிரப்புவதில் டி.என்.பி.எஸ்.சி.,(Tnpsc) ஈடுபட்டு வருகிறது. தடய அறிவியல் துறையில் ஆய்வக உதவியாளர் பிரிவில் காலியாக உள்ள 56 இடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
வயது : விண்ணப்ப தாரர்கள் 18 - 30 வயதுக்குள் இருக்க வேண்டும்.
கல்வித் தகுதி : பிளஸ் 2 படிப்பில், இயற்பியல், வேதியியல், உயிரியல் அல்லது தாவரவியல் மற்றும் விலங்கியல் பாடங்களுடன் முடித்திருக்க வேண்டும்.
தேர்ச்சி முறை : எழுத்துத் தேர்வு வாயிலாக தேர்ச்சி இருக்கும்.
எழுத்துத் தேர்வு மையங்கள் : சென்னை, மதுரை, கோவை, திருச்சி, நெல்லை, சேலம், தஞ்சை, சிதம்பரம் ஆகிய மையங்களில் இந்த தேர்வு நடத்தப்படும்.
விண்ணப்பிக்க : ஆன்லைன் முறையில் விண்ணப்பிக்க வேண்டும். தேர்வுக்கட்டணம் 100 ரூபாய்.
கடைசி நாள் : 2018 பிப்., 21.