அன்பை பகிர்வோம்,அன்பால் இணைவோம்

24 December 2019

மத்திய ரயில்வேயில் அப்ரண்டிஸ் வேலை! 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட காலியிடங்கள்!!


மத்திய ரயில்வே துறையில் அப்ரண்டிஸ் பணிக்கு 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட காலியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு யார் யார் விண்ணப்பிக்கலாம், என்ன படித்திருக்க வேண்டும் என்பது பற்றிய விபரங்களை இங்கு காணலாம்.

Central Railway எனப்படும் மத்திய ரயில்வே துறையில் இருந்து டிசம்பர் 21 ஆம் தேதியிட்ட வேலைவாய்ப்பு அறிவிப்பு Central Railway Recruitment 2020 வெளியாகியுள்ளது. அதன்படி, மொத்தம் 2,562 அப்ரண்டிஸ் பயிற்சி பணிக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. இதற்கான ஆன்லைன் விண்ணப்பப்பதிவு நேற்று (டிச.23) தொடங்கியுள்ளது. ஜனவரி 22 விண்ணப்பிப்பதற்கான கடைசி நாள் ஆகும்.

வேலைவாய்ப்பு அறிவிப்பு சுருக்கம்: Central Railway Recruitment 2020
1நிறுவனம்மத்திய ரயில்வே
2அமைப்புமத்திய அரசு
3அதிகாரப்பூர்வ இணையதளம்Www.Rrccr.Com
4பணிஅப்ரண்டிஸ் பயிற்சி
5பணி முறைஅப்ரண்டிஸ்
6பணியிடம்மும்பை
7காலியிடங்கள்2,562
8கல்வித்தகுதி10, ஐடிஐ
9விண்ணப்பம் தொடங்கிய நாள்23 டிசம்பர் 2019
10விண்ணப்பம் முடியும் நாள்22 ஜனவரி 2020
11விண்ணப்பிக்கும் முறைஆன்லைன்
12தேர்வு நடைபெறும் நாள்-

பிட்டர், வெல்டர், கார்பெண்டர், பெயிண்டர், டெய்லர், எலெக்ட்ரிசியன், மெக்கானிக் டீசல், டர்னர், மெஷினிஸ்ட் என பலதரப்பட்ட துறைகளில் அப்ரண்டிஸ் பயிற்சி பணியில் சேரலாம். விண்ணப்பதாரர்கள் 50 சதவீத மதிப்பெண்களுடன் 10 ஆம் வகுப்பு தேர்ச்சியும், சம்பந்தப்பட்ட துறையில் ஐடிஐ படிப்பும் முடித்திருக்க வேண்டும்.

Central Railway Recruitment 2020: Age Limit
வயது வரம்பு:
1-1-2020 அன்றைய தேதியின்படி விண்ணப்பதாரர்கள் குறைந்தபட்சம் 15 வயது நிரம்பியவராக இருக்க வேண்டும். அதிகபட்சமாக 24 வயதுக்கு உட்பட்டவராக இருக்க வேண்டும். உச்சவயது வரம்பு பிரிவினருக்கு ஏற்றவாறு மாறுபடுகிறது. மாற்றுத்திறனாளிகளுக்கு அரசு விதிமுறைகளின்படி 10 ஆண்டுகள் வயது வரம்பில் தளர்வு அளிக்கப்படுகிறது.

Central Railway Recruitment 2020: Application
விண்ணப்பக்கட்டணம்:
அப்ரண்டிஸ் பயிற்சிக்கான விண்ணப்பக்கட்டணம் 100 ரூபாய் ஆகும். SC / ST / PWD / மகளிர் விண்ணப்பதாரர்களுக்கு விண்ணப்பக்கட்டணம் கிடையாது. ஆன்லைன் வழியாக மட்டுமே விண்ணப்பக்கட்டணம் செலுத்த முடியும்.

மேற்கண்ட Central Railway Recruitment 2020 பணியில் சேருவதற்கு விருப்பமும் தகுதியும் உள்ள விண்ணப்பதாரர்கள், rrccr.com என்ற இணையளத்தில் விண்ணப்பம் பெற்று அதனை பூர்த்தி செய்து, ஜனவரி 22 ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். இது பற்றிய முழுமையான விபரங்களுக்கு மத்திய ரயில்வே துறை வெளியிட்டுள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பைப் பார்க்கவும்.
Central Railway Recruitment 2020