அன்பை பகிர்வோம்,அன்பால் இணைவோம்

Showing posts with label chiepratetablet. Show all posts
Showing posts with label chiepratetablet. Show all posts

12 April 2016

ரூ.6000க்கு 7 இன்ச் டேப்ளெட் அறிமுகம்.!!

குறைந்த விலையில் இண்டர்நெட் சேவைகைளை வழங்குவதில் பெயர் பெற்ற டேட்டாவின்ட் நிறுவனம் 7 இன்ச் திரை கொண்ட டேப்ளெட் கருவியை இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது. அதன் படி டேட்டாவின்ட் i3G7 டேப்ளெட் இந்தியாவில் ரூ.5,999க்கு விற்பனை செய்யப்பட இருக்கின்றது.

டேட்டாவின்ட் i3G7 டேப்ளெட் கருவியில் இன்டெல் 64-பிட் குவாட்கோர் X3 பிராசஸர் மற்றும் வாய்ஸ் காலிங் அம்சம் சப்போர்ட் செய்யும் திறன் கொண்டிருக்கின்றது. மேலும் இதன் இண்டர்நெட் டெலிவரி ப்ளாட்ஃபார்ம் மூலம் 97 சதவீத இண்டர்நெட் பேண்ட்வித் குறைக்க முடியும்.

டேட்டாவின்ட் i3G7 டேப்ளெட் கணினியில் 8 ஜிபி இன்டர்னல் மெமரியும் மைக்ரோ எஸ்டி கார்டு மூலம் 32ஜிபி வரை நீட்டிக்கும் வசதியும் வழங்கப்பட்டுள்ளது. மேலும் ஆண்ட்ராய்டு லாலிபாப் 5.1 இயங்குதளம் கொண்டிருப்பதோடு வை-பை, ப்ளூடூத், மற்றும் மைக்ரோ யுஎஸ்பி போன்ற கனெக்டிவிட்டி ஆப்ஷன்களும் வழங்கப்பட்டுள்ளது.

மேலும் டேட்டாவின்ட் i3G7 டேப்ளெட் கருவியானது 3ஜி சிம் ஸ்லாட் சப்போர்ட் மற்றும் 4 மணி நேர டாக்டைம் வழங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

10 September 2014

Lenovo எஸ்5000 டேப்ளட் ரூ. 10,999 விலையில்

இந்தியாவில் லெனோவோ எஸ்5000 டேப்ளட் ரூ.10,999 க்கு விற்க அந்நிறுவனம் முடிவு. டேப்ளட்டில் இருக்க வேண்டிய அனைத்து ஆப்ஷன்களுடன் குறைந்த விலையில் அறிவிக்கப்பட்டிருப்பது இந்திய சந்தைகளில் விற்பனையாகும் மற்ற டேப்ளட்களுக்கு கடும் போட்டியாக அமையும்.