அன்பை பகிர்வோம்,அன்பால் இணைவோம்

22 September 2011

புதிய வசதிகளுடன் கூடிய கூகுள் பிளஸ் அறிமுகம்

பேஸ்புக்கின் வளர்ச்சியை தடுக்கவும் பேஸ்புக் சவால்களை சமாளிக்கவும் கூகுள் அறிமுகப்படுத்திய தளம் தான் கூகுள் பிளஸ்.
இந்த தளம் இது நாள் வரை சோதனை பதிப்பிலேயே இருந்தது. அதனால் வாசகர்கள் இந்த வசதியை நேரடியாக பெற முடியாது. அதில் இருக்கும் யாரேனும் Invite கொடுத்தால் தான் இந்த வசதியை உபயோகிக்கும் நிலை இருந்தது.
சுமார் 12 வாரங்களாக இந்த தளம் சோதனை பதிப்பிலேயே இருந்தது. சோதனை பதிப்பில் இருந்தாலும் குறைந்த கால கட்டத்தில் அதிக பயனாளிகளை பெற்ற சமூக இணைய தளம் அந்தஸ்தை பெற்று விட்டதை அனைவரும் அறிந்திருப்போம்.

சோதனை தளமாக இருந்ததால் பல வாசகர்கள் இந்த சேவையை பயன்படுத்த முடியாத நிலை ஏற்ப்பட்டது. அதனை கருத்தில் கொண்டு கூகுள் பிளஸ் சேவை தற்பொழுது அனைவருக்கும் வெளியிடப்பட்டுள்ளது.
உங்களுக்கு யார் invite தேவையில்லை கூகுளில் ஒரு அக்கௌன்ட் இருந்தாலே போதும் நீங்கள் கூகுள் பிளஸ் வசதியை உபயோகிக்க முடியும்.
கூகுள் பிளஸ் சேவையை பெற www.google.com/+இந்த தளத்திற்கு செல்லுங்கள்.அங்கு கேட்கப்படும் சில விவரங்களை கொடுத்து கூகுள் தளத்தில் சேர்ந்து நண்பர்களுடன் அரட்டை அடித்தும் உங்களின் தகவல்களையோ அனுபவத்தையோ மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.
புதிய வசதிகள்:
Hangouts: more places, more people, more to do: Hangout எனப்படும் வீடியோ காலிங்கில் மேலும் சில வசதிகளை புகுத்தி உள்ளது கூகுள் நிறுவனம். மொபைலில் ஹாங்கவுட் வசதி ஆனால் Android V2.3 உபயோகிப்பவர்கள் மட்டுமே இந்த வசதியை தற்பொழுது பெற முடியும்.
விரைவில் ios மொபைல்களுக்கும் வர இருக்கிறது. மேலும் சில வசதிகளை இந்த Hangout பிரிவில் சேர்த்துள்ளது கூகுள் நிறுவனம்.
+Search : Find the people and posts you care about: கூகுள் பிளஸ் தேடியந்திரத்தில் மேலும் சில வசதிகளை அறிமுகப்படுத்தி உள்ளது கூகுள் நிறுவனம். உங்களுக்கு எது வேண்டுமோ அதை தேடி கொள்ளலாம்.
உதாரணமாக சமையல் பற்றி ஏதாவது டிப்ஸ் வேண்டுமா அந்த பதிவுகளை மட்டும் தனியாக பிரித்து கொடுக்கும் அல்லது ஏதேனும் மருத்துவக்குறிப்பு வேண்டுமா தேடினால் கிடைக்கும்.
இப்படி உங்களுக்கு பிடித்த டாப்பிக்கில் சுலபமாக தேடி கொள்ளலாம் மற்றும் இதில் சுவாரஸ்யமான தகவல் என்ன வென்றால் கூகுள் பிளஸ் வெளிவந்து சுமார் 90 நாட்கள் ஆகியுள்ளது. அதற்குள் கூகுள் பிளஸ் 91 புதிய வசதிகளை வாசகர்களுக்கு அளித்துள்ளதாம்.
இந்த புதிய வசதிகளை வெளியிட்ட திகதி வாரியாக பார்க்க இந்த லிங்கில்Google New Features  செல்லவும்.

No comments:

Post a Comment

நண்பனிடம் சொல்லுங்க,,,,,,,,,
பிடிச்சிருந்தாலும்....இல்லை என்றாலும் ;)