வணக்கம் நண்பர்களே நாம் நீண்ட நாட்களாக எதிர்பார்த்திருந்த Google AdSense இப்பொழுது தமிழ் தளங்களுக்கும்.இதனை பற்றி மேலதிக விபரங்களுக்கு இங்கே சென்று பார்த்துகொள்ளுங்கள்
Forms is a very popular service from Google that allows users to create and manage online forms easily without any extra technical knowledge. Google introduced custom themes feature for Google Forms, that means from now users can set their own images to Google forms background or users can choose the themes from wired list of of in-built themes.
To set custom themes for your Form please follow below steps.
Go to Google Drive, Click on Create button then select Form
Now create your Form, if you want to change the default theme click on the Change Theme option in top menu
Now choose the theme which you want to set to your form
Finally Click on Send Form and share the form. That's all!
Google is going to release the New Google Menu Bar. Now a days google redesigned look and feel for Search, News, Maps, Translate, Gmail and a bunch of other products. Now google ready for the next stage new Google bar that will enable you to navigate quickly between google services. Instead of the horizontal black bar at the top of the pageGoogle will enable this google bar to all users. But now itself you can Enable the new bar just edit your cookies. Please follow the below steps to Enable the new Google Bar.
Steps:
1) Open Google.com (not google.co.in and any other). Then open developer tools page in your browser
Chrome - press Ctrl + Shift + J
Firefox - press Ctrl + Shift + K
IE - Press F12
2) Then open Console Tab and copy&paste below coding in console
document.cookie="PREF=ID=03fd476a699d6487:U=88e8716486ff1e5d:FF=0:LD=en:CR=2:TM=1322688084:LM=1322688085:S=McEsyvcXKMiVfGds; path=/; domain=.google.com";window.location.reload();3) Finally hit Enter in your keyboard your browser automatically refreshed and New Menu Bar will enable to you.
Note: This cookie trick only working in google.com English Edition. If you are using any other it is not work. So you first changed your google edition to English.
சமூக வலைதளங்களின் வரிசையில் முதலில் களமிறங்கி, சமகால நிறுவனங்களுடன் ஈடுகொடுக்க முடியாமல் மூடப்பட்ட ஆர்குட் சமூக வலைதளம் மீண்டும் வர உள்ளது.ஒருகாலத்தில் மிகவும் பிரபலமாக செயல்பட்டு வந்த ஆர்குட் சமூக வலைதளம் மீண்டும் வருவது எத்தனை பேருக்கு மகிழ்ச்சி தரும் என்பது தெரியாது. ஆனால் மீண்டும் வரப்போவது ஆர்குட் சமூக வலைதளம் அல்ல அதனை உருவாக்கிய ஆர்குட் பைகோட்டன் என்பவரின் புதிய சமூக வலைதளமான ஹலோ (Hello) தான்.
கடந்த பத்து வருடங்களில் இணையவாசிகளை அதிகம் கவர்ந்த சமூக வலைதளம் என்றால் அது Orkut தான். ஆனால் ஃபேஸ்புக் டிவிட்டர் போன்ற சமூக வலைதளங்களின் வரவால் Orkut சமூக வலைதளத்தால் ஈடுகொடுக்க முடியவில்லை.
அதனால் அந்த சமூகவலைதளத்தை உருவாக்கி நிர்வகித்து வந்த ஆர்குட் பைகோட்டன் என்பவர் கடந்த 2014ம் ஆண்டு தமது Orkut சமூக வலைதளத்தை மூடுவதாக அறிவித்தார்.
ஆனால் இப்பொழுது அதே போன்ற சமூக வலைதளம் ஹலோ (Hello)
என்ற பெயரில் வந்துள்ளது. இந்த சமூக வலைதளமானது அமெரிக்கா, பிரித்தானியா, அவுஸ்திரேலியா, நியூசிலாந்து, ஃபிரான்ஸ், இத்தாலி, கனடா, மற்றும் பிரேசில் போன்ற நாடுகளில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
மேலும் ஆசிய கண்டத்தில் இந்த ஆகஸ்ட் மாதம் Hello என்னும் சமூக வலைதளத்தை அறிமுகப்படுத்தவும் அந்நிறுவனம் திட்டமிட்டுள்ளது.
ஆனால் பிரபலமாக உள்ள ஃபேஸ்புக், டிவிட்டர், இன்ஸ்டகிராம், மற்றும் ஸ்னப்சாட் போன்ற சமூக வலைதளங்களுடன் போட்டி போட்டு Hello சமூகவலைதளத்தால் மக்கள் மத்தியில் பிரபலமடைய முடியுமா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.
கம்ப்யூட்டர், இணையம் மற்றும் ஸ்மார்ட் போன்களில், நம்மைப் பற்றிய தகவல்களை அதிகம் பெற்றுக் கொண்டு, தன் நோக்கத்திற்காகப் பயன்படுத்துவதில் முதல் இடம் பெறுவது கூகுள் நிறுவனமே. விளம்பரங்களைத் தன் வர்த்தகத்தின் அடிப்படையாகக் கொண்டுள்ள, கூகுள் நிறுவனத்தின் செயல்பாடுகளுக்கு, மக்களும், அவர்களின் அபிலாஷைகளும் தெரிந்தாக வேண்டியதுள்ளது. எனவே, ஏதேனும் ஒரு வகையில், வழியில் நம்மைப் பற்றிய தகவல்களை கூகுள் பெற்றுக் கொள்கிறது. நாம் கூகுள் நிறுவனத்தின் பல்வேறு செயலிகளால் பயன் பெறுவதால், நம்மால் தகவல்களைத் தராமலும் இருக்க முடிவதில்லை. எனவே, இவற்றை எந்த அளவிற்குக் குறைக்கலாம் என்று பார்ப்போம்.
நீங்கள் ஆண்ட்ராய்ட் போன் அல்லது டேப்ளட் சாதனத்தைப் பயன்படுத்துபவராக இருந்தால், கூகுள் ஏற்கனவே உங்களைப் பற்றிய பல தகவல்களைப் பின் தொடர்ந்து வரும் செயல்பாட்டினை மேற்கொண்டிருக்கும். அப்படியா! என் அக்கவுண்ட்டை மூடிவிடவா? என்ற எண்ணம் உங்கள் மனதில் தோன்றும். மூடுவதற்கும் கூகுள் எளிய வழிகளைத் தரும். ஆனால், நாம் அக்கவுண்ட்டினை மூடிவிட மாட்டோம். ஏனென்றால், கூகுள் பிளே ஸ்டோரிலிருந்து நாம் அப்ளிகேஷன்களை இறக்க வேண்டும் எனில், நமக்கு கூகுள் அக்கவுண்ட் ஒரு கட்டாயத் தேவை ஆகும். பல செயலிகள் வழியாக, பல இடங்களில் நம்மைப் பற்றிய தகவல்கள், கூகுள் நிறுவனம் பெறும் வகையில் கசிகின்றன. இருப்பினும், குறைவான அளவில் நம் தகவல்களைத் தரும், சில முக்கிய வழிகளை இங்கு காணலாம்.
கூகுள் நமக்குத் தருபவை எல்லாம் இலவசமே. ஏனென்றால், கூகுள் என்னும் தொழில் நுட்ப அரக்கன், விளம்பரம் வழி பெரும் வருமானமே அதற்கு எக்கச்சக்கமாகும். இந்த விளம்பரங்கள் வழியாகவே, உங்களுக்கான விளம்பர வட்டம் கட்டப்படுகிறது. இணையத்தைச் சுற்றி வருகையில், இந்த விளம்பரங்களை ஒதுக்குவது அவ்வளவு எளிதான காரியம் அல்ல. கூகுள் தளத்தின் விளம்பர செட்டிங்ஸ் பக்கத்தில் (https://www.google.com/settings/u/0/ads)
நீங்கள் சில நகாசு செட்டிங்ஸ் அமைப்பை மேற்கொண்டு, நீங்கள் தரும் தகவல்கள் துல்லிதமாகவும், ஆர்வம் கொண்டுள்ள விளம்பரங்கள் மட்டும் இருப்பதாகவும் ஏற்படுத்தலாம்.
கூகுள் நிறுவனத்தின் முதன்மை வர்த்தகம் தேடுதல் தான். அதில் என்ன செய்யலாம் என்று அடுத்து பார்க்கலாம். கூகுள் நீங்கள் செல்லும், பார்க்கும் அனைத்து தளங்கள் குறித்த தகவல்களைப் பதிவு செய்து வைத்துக் கொள்கிறது. பெர்சனல் கம்ப்யூட்டராக இருந்தாலும், ஆண்ட்ராய்ட் சிஸ்டத்தில் கூகுள் நவ்” செயலியாக இருந்தாலும், தேடுதல் கட்டத்தில் என்னவெல்லாம் டைப் செய்கிறீர்கள் என்பதைக் கூகுள் தொடர்ந்து கண்காணித்துக் கொண்டுள்ளது.
அதிர்ஷ்டவசமாக, கூகுள் இந்த தகவல்கள் எல்லாம் எளிதாகக் காணும்படி, நம் அக்கவுண்ட் ஹிஸ்டரி பக்கத்தில் மேல் பகுதியில் வைத்துள்ளது. இங்கு, இவற்றை சேவ் செய்திடாமல் வைத்துக் கொள்ள செட்டிங்ஸ் பகுதியில் வழி தரப்பட்டுள்ளது. எனவே, நாம் கூகுள் எடுத்து வைத்துள்ள தகவல்களை சேவ் செய்திடாமல் நீக்கிவிடலாம். அல்லது தேர்ந்தெடுத்த சிலவற்றை மட்டும் பதியும்படி அமைத்துக் கொள்ளலாம்.
ஜிமெயில்: நாம் ஜிமெயில் செயலியைப் பயன்படுத்துகையில், கூகுள் சர்வர்கள் வழியாக நாம் அனுப்புவது அனைத்தையும் ஒரு காப்பி எடுத்து, கூகுள் வைத்துக் கொள்கிறது. மின் அஞ்சல் செயலி ஒன்றின் செயல்பாட்டின் அடிப்படையே இதுதான். ஆனால், கூகுள் அதற்கும் மேலாக ஒரு படி சென்று, நமக்கு விளம்பரங்களை அனுப்புவதற்காக, நம் அஞ்சல்களை ஸ்கேன் செய்து தகவல்களைத் திரட்டி வைத்துக் கொண்டு செயல்படுத்துகிறது. நாம் அனுப்பும் டெக்ஸ்ட்டை மட்டுமல்ல; படங்களையும் ஸ்கேன் செய்கிறது. இவ்வாறு கூகுள் செயல்படுவதை நீங்கள் விரும்பவில்லை என்றால், நம் அக்கவுண்ட்டிலிருந்து ஜிமெயில் அக்கவுண்ட்டை நீக்குவதுதான் ஒரே வழி.
தொடர்புகள் (Contacts): ஆண்ட்ராய்ட் சிஸ்டத்தினைப் பயன்படுத்துவதில் நாம் பெறும் மிகப் பெரிய வசதி, நம் தொலைபேசி தொடர்புகளை எளிதாக, ஒரு சாதனத்திலிருந்து இன்னொன்றுக்கு மாற்றிக் கொள்வதுதான். இது எப்படி சாத்தியமாகிறது என்றால், நம் தொடர்புகள் அனைத்தும் கூகுள் அக்கவுண்ட்டுடன் ஒருங்கிணைக்கப்படுவதுதான். மொபைல் போனிலேயே, நம் தொடர்புகளின் மின் அஞ்சல் முகவரிகளும் தாமாக சேவ் செய்யப்படுவதும் இப்படித்தான். நாம் நீக்க வேண்டும் என எண்ணினால், ஒரு முயற்சியில், ஒரு தொடர்பினை மட்டுமே நீக்க முடியும். ஆனால், இந்த சாதனங்களில், நாம் நம் தொடர்புகளை சேவ் செய்து வைத்துக் கொள்வதுதான் சிறந்த வழியாகும்.
பெரும்பாலான ஆண்ட்ராய்ட் இயக்கும் சாதனங்களில், உங்கள் போன் தொடர்புகளை, உங்கள் சிம் கார்டிற்கு மாற்றுவது எனில், People என்னும் அப்ளிகேஷன் சென்று, அதில் Settings தேர்ந்தெடுக்க வேண்டும். அதன் பின்னர், Export Contacts to SIM என்பதனைக் கிளிக் செய்திட முகவரிகள் அனைத்து தகவல்களுடன் மாற்றப்படும். ஒரு சில ஆண்ட்ராய்ட் சாதனங்களில், இந்த வழிமுறைகள் சற்று மாறுபடலாம்.
கூகுள் காலண்டர்: இதில் நாம் அமைக்கும் நிகழ்வுகள் அனைத்தும் கூகுள் தளத்தினால் ஒருங்கிணைக்கப் படுகின்றன. இங்கு மட்டும், இதில் உள்ளவற்றை முற்றிலுமாக நீக்க முடியாது. கூகுள் காலண்டருடன் அனைத்து தொடர்புகளையும் நீக்கினால்தான் அது முடியும்.
கூகுள் ட்ரைவ்: ஜிமெயில் சர்வரில், நம் மெயில்கள், தொடர்புகள் அனைத்தும் சேமிப்புக் கிடங்கில் வைக்கப்படுவது போல, ட்ரைவ் செயலிக்கான சர்வரிலும் சேமிக்கப்படுகிறதா என்பது இன்னும் தெளிவாக அறியத் தரப்படவில்லை. ஆனால், ட்ரைவ் பயன்படுத்தும் சர்வரில் சேர்த்து வைக்கப்படும் ஆவணங்கள், படங்கள், விடியோக்கள் அனைத்தும், எந்த நேரமும் கூகுள் நிறுவனம் அறியக் கிடைக்கும் வகையில்தான் பதியப்படுகின்றன. நீங்கள் உங்கள் பைல்களை அழிக்கும்போதும் பின்னர் அழித்த பின்னர், ட்ரேஷ் பெட்டியிலிருந்து நீக்கும் போதும், அவை மறைக்கப்படுகின்றன. நிச்சயமாய், அவை கூகுளின் சர்வரிலிருந்து உடனடியாக, அறவே நீக்கப்படுவதில்லை. ஆனால், உங்கள் அக்கவுண்ட்டினை வேறு யாரேனும், பின் நாளில் அணுகினால், அவர்களுக்கு நீங்கள் நீக்கியவை நிச்சயமாகக் கிடைக்காது.
உலவும் இடம் (Location): உங்கள் ஆண்ட்ராய்ட் சாதனம் இயங்கத் தொடங்கிய காலத்திலிருந்து, கூகுள் ‘லொகேஷன்’ என்னும் வசதி மூலம், நீங்கள் எங்கெல்லாம் செல்கிறீர்கள் என்பதனை அறிந்து பதிவு செய்கிறது. அந்த சாதனம் மூலம், கூகுள் மேப் பயன்படுத்துவதாக இருந்தால், இந்த டூல் தான் அடிப்படையை அமைக்கிறது. பெர்சனல் கம்ப்யூட்டரில் மேப் பயன்படுத்துகையில், லொகேஷன் டூலை நாம் இயக்காமலேயே, மற்றவை மூலம், கூகுள் நாம் இயங்கும் இடத்தை அறிந்து கொள்கிறது. இதனை நீங்கள் விரும்பவில்லை என்றால், இந்த செயல்பாட்டினை, ஆண்ட்ராய்ட் சாதனத்தில் முடக்கிவிடலாம்.
கூகுள் ப்ளே: ஆண்ட்ராய்ட் போன் வைத்திருப்பவர்கள், கூகுள் ப்ளே பயன்படுத்தாமல் இருக்க முடியாது. பல செயலிகள் இதன் வழியாகவே நமக்குக் கிடைக்கும். கூகுள், நீங்கள் இந்த ஸ்டோர் சென்று பெறும் அனைத்தையும் பட்டியலிட்டுத் தன்னிடம் வைத்துக் கொள்ளும். இது நாம் ஸ்டோரைப் பயன்படுத்த ஒப்புக் கொள்ளும் ஒப்பந்தத்தில் ஒரு நிபந்தனையாகும். ஆனால், வெளிப்படையாக இது தெரிவதில்லை. இதற்கு நீங்கள் உடன்பாடில்லை என்றால், ப்ளே ஸ்டோரினைப் பயன்படுத்தாமல் இருப்பதுதான் ஒரே வழி. ஆனால், அது சரியான வழி அல்ல. ஏனென்றால், இந்த ப்ளே ஸ்டோரில் இருந்து நீங்கள் பெற்ற அனைத்து செயலிகளையும் நீக்க வேண்டும். பின் எந்த பயன்பாடும் உங்களுக்குக் கிடைக்காது.
யு ட்யூப்: யு ட்யூப் தள செட்டிங்ஸ் அமைப்புகள்https://www.google.com/settings/accounthistory என்னும் இடத்தில் கிடைக்கும். இங்கு நீங்கள் தேடிய விடியோக்களின் பட்டியல் கிடைக்கும் இவற்றை நீக்க நீங்கள் விரும்பினால், அவற்றைத் தேடி நீக்கிவிடலாம். இங்கேயே, உங்கள் தேடலைப் பதிவு செய்ய வேண்டாம் என கூகுளுக்குக் கட்டளை இடலாம். அதே போல, நீங்கள் தேடிப் பார்த்த விடியோக்களின் பட்டியலையும் அணுகி, நீக்க விரும்புவதை நீக்கிவிடலாம்.
மேலே தரப்பட்டுள்ள தகவல்களிலிருந்து, நீங்கள் கூகுள் சர்வர்களுக்கு, உங்களைப் பற்றிய தகவல்களை, அறிந்தோ அறியாமலோ, எந்த அளவிற்குத் தருகிறீர்கள் என்பதனைத் தெரிந்து கொண்டிருப்பீர்கள். கூகுள் நிறுவனம் தரும் எந்த வசதியை நாம் பயன்படுத்தினாலும், நம்முடைய விருப்பங்கள், நம்மைப் பற்றிய தகவல்கள், அதன் சர்வரில் சென்று அடைவதையோ, அவற்றைப் பயன்படுத்தி நம்மை கூகுள் அணுகுவதையோ மாற்ற இயலாது. விருப்பப் பட்டால், நம்மிடமிருந்து செல்லும் தகவல்களைக் குறைத்துக் கொள்ளலாம்.
கூகுள் சேவையே, அதில் உள்ள நம் அக்கவுண்ட்டினைக் கட்டுப்பாட்டில் வைத்துக் கொண்டிருக்கும் டூல்களைத் தருகிறது. ஆனால், இதற்கு நாம் மெனக்கெட்டு செட்டிங்ஸ் அமைத்துத் தொடர்ந்து கண்காணிக்கும் வேலையையும் மேற்கொள்ள வேண்டும். ஆண்ட்ராய்ட் சாதனங்கள், ஜிமெயில், கூகுள் மேப்ஸ், யு ட்யூப் போன்றவை எல்லாம், தகவல்களைச் சேகரிக்கும் டூல்களைத் தாங்களாகவே இயக்கித் தங்கள் பணியைத் தொடர்கின்றன. நாம் இதனை அறிந்து, ஒவ்வொரு செட்டிங்ஸ் பக்கமும் அணுகி, இவற்றைத் தடுக்கலாம். ஆனால், அவ்வாறு தடுக்கும் வேளைகளில், சில வசதிகளை இழக்க வேண்டியதிருக்கும். தேவைப்படும்போது மட்டும் பயன்படுத்தினால், தகவல்கள் தொடர்ந்து செல்வது நிறுத்தப்படும்.
தற்போது அனைவராலும் பரவலாக பயன்படுத்தப்படும் 'பிரவுசர்' என்றால் அது Google Chrome தான்.
இணையப் பயன்பாட்டிற்கு பயன்படுத்தப்படும் பிரவுசர்களில் 99 சதவீத மக்களின் தேர்வு கூகுள் குரோமாக தான் இருக்கிறது. இதன் செயல்திறன் மற்ற பிரவுசர்களை விட சிறப்பாக இருப்பதால் பயன்பாட்டார்களால் பெரிதும் விரும்பப்படுகிறது.
ஆனால் சில சமயங்களில் இதுவே நமது பொறுமையை அதிகமாக சோதித்தி விடும். அந்த அளவு மெதுவாக இருக்கும். இதனை மீண்டும் பழையை நிலைக்கு கொண்டு வர சில வழிகள் இருக்கிறது.
உங்களது கூகுள் குரோமில் extensions உள்ள தேவையற்ற லிங்குகளைஅகற்றிவிடுங்கள். அதிக்கப்படியான லிங்குகள் பிரவுசர் செயல்பாட்டை குறைக்கும். இதற்கு More tools-> Extensions சென்று சரிசெய்யலாம் அல்லது Shift Esc மூலம் தோன்றும் Task manager box மூலம் சரி செய்யலாம்.
அதிகப்படியான extensions பயன்படுத்துவதை விட்டுவிட்டு சில பயனுள்ள extensions மட்டும் பயன்படுத்தலாம். Data Saver extension உங்கள் பிரவுசரில் எந்த அளவு மெமரி உள்ளது என்பதை காட்டும். இதேபோல் OneTab, Tab Suspender மற்றும் The GreatSuspender போன்ற பயனுள்ள extensions மட்டும் பயன்படுத்தலாம்.
குரோமில் உள்ள சில இணையத்தளங்களின் plug-ins-களை அகற்றி விடுங்கள். இது அந்த இணையத்தளங்களை சரியாக காட்டாவிட்டாலும், வேகத்தை அதிகரிக்கும். அதேபோல் சில வீடியோக்களை தானாகவே ஓடவிடும் plug-insகளை அகற்றிவிடுங்கள். இதனை chrome://plugins என டைப் செய்து சரி செய்யலாம்.
Browsing dataவில் உள்ள சிலவற்றை அடிக்கடி அழித்து வந்தால் கூகுள் குரோம் எப்போதும் வேகமாக இருக்கும். இதில் cache பகுதியை அழித்து வந்தால் பிரவுசர் வேகமாக செயல்படும். இதற்கு Chrome Settings-> advanced settings->Clearbrowsing data சென்று cache, cookies, browsing data என அனைத்தையும் அழிக்க முடியும்.
இணையத் தேடல்களில் தன்னிகரற்ற சேவையினை வழங்கி வரும் ஒரே ஒரு தேடுபொறியாக கூகுள் விளங்குகின்றது.இத்தளத்தின் ஊடாக சொற்களைப் பயன்படுத்தி மட்டுமன்றி புகைப்படங்கள், குரல் வழி கட்டளைகள் ஊடாகவும் தேடல்களை மேற்கொள்ள முடியும் என்பது அனைவரும் அறிந்ததே.
தற்போது இவற்றையெல்லாம் தாண்டி மற்றுமொரு புதிய வசதியினை கூகுள் அறிமுகம் செய்துள்ளது.அதாவது பாடல் வரிகளைத் தேடித் தரக்கூடிய LyricFind எனும் வசதியினை அறிமுகம் செய்துள்ளது.
ஒரு பாடலின் முழுமையான வரிகளும் தேவை எனின் அப்பாடலின் ஆரம்ப அடிகளை தட்டச்சு செய்து அதனைத் தொடர்ந்து Lyric என்பதனையும் தட்டச்சு செய்தாலே போதும் உடனடியாக பாடலின் அனைத்து வரிகளையும் முதற் பக்கத்திலேயே காண்பிக்கும்.
இவ்வசதி தற்போது ஆங்கில பாடல்களுக்கு மட்டுமே அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.தவிர கூகுள் தளத்தின் அமெரிக்க பதிப்பில் மட்டும் இவ்வசதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
எனவே ஏனைய நாட்டவர்கள் www.google.com என்ற இணைய முகவரியை பயன்படுத்தி இவ்வசதியினை பெற்றுக்கொள்ள முடியும்.மாறாக www.google.in, www.google.lk போன்ற முகவரிகளைப் பயன்படுத்தினால் இவ் வசதியினை பெற்றுக்கொள்ள முடியாது.
இன்று ஒவ்வொரு இளைஞனின் நேரத்தையும் விரல்களையும் ஆண்டு கொண்டிருப்பவை இரண்டே இரண்டு தான். ஒன்று ஃபேஸ்புக் மற்றொன்று வாட்ஸ் அப். ஸ்மார்ட் போன்களில் சிம்கார்டு கூட இல்லாமல் இருக்கும். ஆனால் அந்த இரு ஆப்களும் இல்லாமல் ஒரு போனைக் கூடப் பார்த்திடமுடியாது. பல காதல்கள் ஃபேஸ்புக்கில் தொடங்கி வாட்ஸ் அப் வழியே வாழ்ந்து கொண்டிருக்கின்றன. அவ்விரு ஆப்களுக்கும் போட்டியாக ‘ஆலோ’, ‘டுவோ’ என இரு ஆப்களை அறிமுகப்படுத்தியுள்ளது கூகுள் நிறுவனம்.
இன்றைய காலகட்டத்தில் ஃபேஸ்புக்கைக் காட்டிலும் வாட்ஸ் அப் தான் அதிகம் பயன்பாட்டிலுள்ளது. போதாக்குறைக்கு மல்டிமீடியாவிலிருந்து பி.டி.எஃப் பைல்கள் வரை அனைத்தையும் அதிலேயே ஷேர் செய்யுமளவிற்கு அப்டேட்கள் செய்யப்பட்டுள்ளன. இதனால் கூடிய விரைவில் ஜி-மெயிலே தேவையில்லாமல் போகும் நிலை ஏற்படும் என்று பேசப்பட்டது. அதேசமயம் ஃபேஸ்புக்கின் சிறப்புகளையும் நாம் ஒதுக்கிவிடமுடியாதே. உலகின் ஏதோ ஒரு மூலையில் உள்ளவரோடு நட்பு பாராட்ட உதவும் ஃபேஸ்புக்கில் இன்று சிறுவண்டுகள் கூட லைக்ஸ் தட்டிக்கொண்டிருக்கின்றன. இரண்டே ஆப்கள் –ஃபேஸ்புக், வாட்ஸ் அப் என வைத்துக்கொண்டு மொத்த டெக்னாலஜி உலகையும் ஆண்டுகொண்டிருக்கிறார் சூக்கர்பெர்க். ஒரு காலத்தில் உலகையே வியக்கவைத்துக் கொண்டிருந்த கூகுளால் சும்மா இருக்க முடியுமா?
அவர்களும் கூகுள் பிளஸ், ஹேங் அவுட், மெசெஞ்சர் என எத்தனையோ ஆப்களை அறிமுகப்படுத்தியும் அவ்விரண்டு ஆப்களையும் ஓவர்டேக் செய்ய முடியவில்லை. எனவே எப்படியேனும் ஆப் உலகத்தை ஆள வேண்டும் என்ற எண்ணத்தோடு தான் இப்போது இந்த இரு புது ஆப்கள். மெசேஜிங் ஆப்பான ‘ஆலோ’வில் ,தற்போது வாட்ஸ் அப்பில் அப்டேட் ஆகியிருக்கும் மெசேஜ்களை பாதுகாக்கும் ‘என்கிரிப்ஷன்’ வசதியோடு, நமக்கு வரும் மெசேஜ்களுக்கு தானாக ரிப்ளை செய்யும் ஆல்ஷன்களும் உள்ளன. இதன்மூலம் நாம் ரிப்ளை செய்ய டைப் செய்ய வேண்டிய அவசியம் கூட இருக்காதாம். யாரேனும் ‘ எப்படி இருக்கிறாய்?’ என்று கேட்டால், ‘நன்றாக இருக்கிறேன்’ என்ற பதில் ஒரு ஸ்மைலியோடு ஸ்கிரீனில் சஜெஷனாகக் காட்டும்.
மிக மோசமான சூழ்நிலையில் கூட துல்லியமான வீடியோ காலிங் செய்ய உதவுவதே டுவோ ஆப்பின் மிகப்பெரிய பலம். பிற ஆப்களைப் போல் கால் செய்து சில நேரம் கழித்து லோட் ஆகாமல், உடனுக்குடனேயே கால்கள் இணைக்கப்படுகின்றன. இதனால் வீடியோ காலிங் ஆப்களில் டுவோ ஒரு மிகப்பெரிய புரட்சியை ஏற்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த இரு ஆப்களும் ஆன்டிராய்டு மற்றும் ஐ-ஓஸ் மொபைல் தளங்களில் இயங்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளன. வாட்ஸ் அப் மற்றும் ஃபேஸ்புக் அளவிற்கு வெற்றி பெரும் அளவிற்குப் பெரிதாக இந்த ஆப்களில் ஏதுமில்லை என்கிறார்கள் கேட்ஜெட் கில்லாடிகள். சூக்கர்பெர்க்கின் ஐடியாவைத் தாண்டி கூகுளால் ஏதேனும் சாதிக்க முடியுமா? ஏன் முடியாது? ஆளும் நாற்காலியில் அமர்ந்திருப்பது ஒரு தமிழனல்லவா. சின்னஞ்சிறு கிராமத்தில் பிறந்து சிலிகான் வேலியை ஆண்டு வரும் சுந்தரால் சாதிக்க முடியாமல் போய் விடுமா என்ன? கமான் சுந்தர் கமான்!
இணைய தேடலில் கூகுளிற்கு நிகராக இதுவரை வேறு சேவைகள் இல்லை என்றே சொல்லலாம்.அந்த அளவிற்கு துல்லியமான, விரைவான தேடலை தருவதுடன் பரந்துபட்ட விடயங்களை தேடக்கூடியதாகவும் இருக்கின்றது.
ஆனாலும் கூகுள் நிறுவனம் தனது சேவையில் மென்மேலும் பல மேம்படுத்தல்களை தொடர்ச்சியாக ஏற்படுத்திவருகின்றது.இதன் தொடர்ச்சியாக தற்போது மற்றுமொரு புதிய வசதியினை அறிமுகம் செய்துள்ளது.
அதாவது ஒன்லைன் மூலம் ஒளிபரப்பப்படும் நேரடி தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை தேடித்தரும் வசதியே அதுவாகும்.உதாரணமாக குறித்த ஒரு நிகழ்ச்சியினை பார்வையிட வேண்டும் எனில் அந் நிகழ்ச்சிக்கான பெயரை வழங்கினால் போதும் எந்தெந்த இணையத்தளங்களில் அவற்றினை நேரடியாக பார்வையிட முடியும் என்ற தகவல்களை உடனடியாக பெற்றுக்கொள்ள முடியும்.
இணையத்தளங்களை மட்டுமன்றி ஒன்லைன் ஊடாக தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை பார்க்கக்கூடிய அப்பிளிக்கேஷன்களையும் ஒருங்கு சேர தேடி தருகின்றமை விசேட அம்சமாகும்
உலக வெப்பமயமாதல் காரணமாக உலகம் முழுவதும் கடல்மட்டத்தின் அளவு உயர்ந்து வருகிறது. இதனால் சிலிகன் வேலி பகுதியில் அமைந்துள்ள பேஸ்புக், கூகுள், சிஸ்கோ உள்ளிட்ட நிறுவனங்களின் அலுவலகங்கள் நீரில் மூழ்கும் அபாய நிலை ஏற்பட்டுள்ளது.
சமீபத்தில் விஞ்ஞானிகள் வெளியிட்டுள்ள வானிலை முன்னறிப்பின்படி, கடல்மட்டம் வேகமாக உயர்ந்து வருவதால் சில்லிகன் வேலி பகுதியில் அமைந்துள்ள பேஸ்புக், கூகுள் நிறுவனங்களின் தலைமையகங்கள் நீரில் மூழ்கும் நிலை ஏற்பட்டுள்ளது. அத்துடன் சான் பிரான்சிஸ்கோ கடல் பகுதியை ஒட்டிய சொத்துக்களும் நீரில் மூழ்கும் அபாய நிலை உருவாகி வருவதாகவும் எச்சரிக்கப்பட்டுள்ளது.
பேஸ்புக் நிறுவனத்தின் தலைமையிடம் சான் பிரான்சிஸ்கோவின் கடற்கரையில் 430,000 சதுரடியில் அமைந்துள்ளது. மிகவும் தாழ்வான பகுதியை தலைமையிடம் அமைக்க பேஸ்புக் நிறுவனம் தேர்ந்தெடுத்தது ஏன் என புரியவில்லை என கலிபோர்னியா வளர்ச்சி கழக அதிகாரி தெரிவித்துள்ளார். இந்த நூற்றாண்டின் இறுதிக்குள் 1.6 அடி உயரத்திற்கு கடல்மட்டம் உயரக் கூடும் என்பதால் பேஸ்புக் தங்களை பாதுகாத்துக் கொள்ள தேவையான நடவடிக்கையில் இறங்க வேண்டிய நெருக்கடி நிலை உருவாகி உள்ளது.
இதே போன்று கூகுள் நிறுவனத்தின் தலைமையிடம் மலை மீதும், சிஸ்கோ தலைமையகம் சான் ஜோஸ் பகுதியை ஒட்டிய கடல் பகுதியிலும் அமைந்துள்ளன. புவி வெப்பமயமாதலால் அன்டார்டிக் கடல் பகுதியில் உள்ள பனிக்கட்டிகள் வேகமாக உருகி வருவதால் கடல்மட்டமும் உயர துவங்கி உள்ளது. இது 6 அடி வரை உயரும் போது இந்நிறுவனங்களின் தலைமையகங்கள் நீருக்குள் மூழ்கும் நிலை ஏற்பட்டுள்ளது.
கூகுளும், பேஸ்புக்கும் தங்களின் தலைமையகங்களை வேறு இடத்திற்கு மாற்றிக் கொள்வதே நல்லது. ஆனால் கூகுள் நிறுவனம் இதற்கு ஒப்புதல் தெரிவிக்காது. இடத்தை மாற்றுவது அவர்களின் ரேடார்களை பாதிக்கும் என்பதால் சிக்கலான நிலைக்கு கூகுள் தள்ளப்பட்டுள்ளது என ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர். இந்நிறுவனங்கள் மட்டுமின்றி, கடுமையான புயலால் கடல் மட்டம் உயரும் போது கடல் பகுதியை ஒட்டி அமைந்துள்ள சுமார் 100 பில்லியன் டாலர் மதிப்பிலான வர்த்தக மற்றும் குடியிருப்பு பகுதிகளும் நீரில் மூழ்கும் அபாய நிலை ஏற்பட்டுள்ளது.
இணையம் என்றதுமே நமது அனைவரின் நினைவுக்கு வருவது என்றால் அது கூகுள் மட்டும் தான்.இன்றளவும் மில்லியன் கணக்கான பயனாளர்களை கொண்டு வெற்றிகரமாக முன்னணியில் உள்ளது.இப்படிபட்ட கூகுளை பற்றி பலருக்கும் தெரியாத அம்சங்கள் இங்கு தொகுக்கப்பட்டுள்ளன.
* கூகுள் தேடலில் Flip A Coin என்று டைப் செய்தால் பூவா தலையா போட முடியும்.
* Roll A Dice என டைப் செய்தால் தாயம் விளையாடலாம், ஒவ்வொரு முறையும் கிளிக் செய்யும் போது வெவ்வேறு எண்களை காணலாம்.
* Askew என டைப் செய்தால் தேடல் விபரங்கள் ஒருபுறம் சரிந்திருப்பதை காணலாம். இதேபோன்று Do a barrel roll என டைப் செய்தாலும் கூகுள் தேடல் ஒரு பக்கமாக சாய்வதை காணலாம்.
* Zerg Rush என டைப் செய்தால் பதில் தானாக இடிந்து விழுவதை காணலாம்.
* கூகுளில் 'Google Gravity' என டைப் I'm Feeling Lucky பட்டனை க்ளிக் செய்தால் கூகுள் இடிந்து கீழே விழுவதை திரையில் பார்க்க முடியும். இதேபோல் கூகுளில் 'Google Orbit' என டைப் செய்து I'm Feeling Lucky பட்டனை க்ளிக் செய்தால் தேடல் முழுவதும் சுற்ற ஆரம்பிக்கும்.
* கூகுளில் 'Google Pacman' என டைப் செய்து பேக்மேன் விளையாட்டை விளையாடலாம்.
எல்ஜி தயாரித்த கூகுள் நெக்சஸ் 5எக்ஸ் கருவிக்கு கூகுள் நிறுவனம் ரூ.4000 தள்ளுபடி அறிவித்துள்ளது. ஹோலி பண்டிகையை முன்னிட்டு இந்த சலுகை அறிவிக்கப்பட்டுள்ளதாகவும், இந்த சலுகை கூகுள் ப்ளே ஸ்டோர் மூலம் கருவியை வாங்குவோருக்கு மட்டுமே வழங்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வருத்தம் அளிக்கும் விதமாக நெக்சஸ் 6பி கருவிக்கு எவ்வித சலுகைகளும் அறிவிக்கப்படவில்லை. கூகுள் நெக்சஸ் 5எக்ஸ் கருவியை ரூ.4000 தள்ளுபடி செய்யப்பட்டு பின் கூகுள் ஸ்டோர் மூலம் நெக்சஸ் 5எக்ஸ் 32ஜிபி மாடல் ரூ.27,900க்கும், 16ஜிபி மாடல் ரூ.23,900க்கும் விற்பனை செய்யப்பட இருக்கின்றது. இந்த சலுகையானது மார்ச் மாதம் 27 ஆம் தேதியுடன் நிறைவடைகின்றது என்றும் கூகுள் நிறுவனம் தெரிவித்துள்ளது.
எல்ஜி நிறுவனம் தயாரித்த கூகுள் நெக்சஸ் 5எக்ஸ் 16ஜிபி மாடல் இந்தியாவில் ரூ.31,990க்கும், 32ஜிபி மாடல் ரூ.35,990க்கும் வெளியிடப்பட்டது. நெக்சஸ் ப்ரியர்கள் ஹோலி பண்டிகையை சிறப்பாக கொண்டாட இந்த சலுகை வழி செய்யும் என எதிர்பார்க்கலாம்.
உலகத்தை இணையம் எனும் ஒரு சொல்லால் ஆட்டிப் படைத்துவரும் கூகுள் நிறுவனம் அகலக் கால் பதித்து பல சேவைகளை அறிமுகம் செய்து அவற்றில் வெற்றியும் கண்டுள்ளது.இருந்தபோதிலும் அண்மைக் காலமாக தனது சில சேவைகளை நிறுத்துவதில் கூகுள் நிறுவனம் முனைப்புக் காட்டி வருகின்றது.
இவற்றின் வரிசையில் தற்போது காரணம் வெளிவிடப்படாத நிலையில் Google Compare எனும் சேவையையும் எதிர்வரும் மார்ச் 23ம் திகதி முதல் நிறுத்தவுள்ளது.
கடந்த வருடம் அமெரிக்காவில் மட்டும் அறிமுகம் செய்யப்பட்டிருந்த இச் சேவையின் ஊடாக கிரடிட் கார்ட் ரேட், கார் இன்சூரன்ஸ், அடமானங்கள் உட்பட பல்வேறு நிறுவனங்களின் விலைவாசிகளை ஒப்பிடக்கூடியதாக இருந்தமை குறிப்பிடத்தக்கது.
கூகுள் நிறுவனத்தினால் அறிமுகம் செய்யப்பட்ட 'கூகுள் பிளஸ்' சமூக வலைத்தளமானது மில்லியன் கணக்கான பயனர்களால் பயன்படுத்தப்பட்டு வருகின்றமை தெரிந்ததே.இச்சேவையினை மொபைல் சாதனங்களில் இலகுவாக பயன்படுத்தக்கூடிய அப்பிளிக்கேஷன்களும் அறிமுகம் செய்யப்பட்ட நிலையில் தற்போது கூகுள் நிறுவனம் அன்ரோயிட் சாதனங்களுக்கான புதிய பதிப்பு ஒன்றினை வெளியிட்டுள்ளது.
Google+ 7.3.0 எனும் இப் புதிய பதிப்பானது இணையத்தள பக்கங்களை விடவும் வேகமாக செயற்படக்கூடியதாக இருப்பதுடன், பத்திற்கும் மேற்பட்ட குறைபாடுகள் நிவர்த்தி செய்யப்பட்டு அறிமுகம் செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
இந்த அப்பிளிக்கேஷனை தற்போது கூகுள் பிளே ஸ்டோர் தளத்திலிருந்து தரவிறக்கம் செய்துகொள்ள முடியும்.
கூகுள் நிறுவனம் குழந்தைகளுக்கு கிடில் (www.kiddle.co) எனப்படும் புதிய இணையதள சேவையை அறிமுகப்படுத்தியுள்ளது. குழந்தைகள் மற்றும் சிறுவர்களை இலக்காகக் கொண்டு இந்த சேவை வடிவமைக்கப்பட்டுள்ளதாக கூகுள் அறிவித்துள்ளது. குழந்தைகளும், சிறுவர்களும் பார்க்கக் கூடிய, தேடப்படும் பொருள் சார்ந்த தளங்கள் மட்டுமே இதில் காட்டப்படும்.
பொருத்தமில்லாத வார்த்தைகளை டைப் செய்தால், ‘நீங்கள் தேடுவது மோசமான வார்த்தை மீண்டும் முயற்சிக்கவும்’என்ற செய்தி திரையில் தோன்றி எச்சரிக்கும். எனவே சிறுவர்கள், தாங்கள் தேடி அறிய விரும்பும் தளங்களைப் பாதுகாப்பாகவும், எளிதாகவும் பெற முடியும்.
Safer Internet Day 2016 இனை கொண்டாடும் முகமாக கூகுள் நிறுவனம் 2GB வரையான இலவச சேமிப்பு வசதியினை வழங்க முன்வந்துள்ளது.இம் மேலதிக சேமிப்பு வசதியானது கூகுள் ட்ரைவினூடாகவே வழங்கப்படுவதுடன் கூகுள் கணக்குகளின் பாதுகாப்பினை உறுதிப்படுத்துவதினை பிரதான நோக்கமாகக் கொண்டுள்ளது.
இதனைப் பேறுவதற்கு கூகுள் கணக்கினுள் உள்நுழைந்து பாதுகாப்பு சோதனையை மேற்கொள்ள வேண்டும்.
இதன் ஊடாக இரண்டு நிலை சரிபார்ப்பு, கோப்புக்களை மீட்டெடுத்தல், ஏனைய சாதனங்களுடன் இணைத்தல் போன்ற செயற்பாடுகளின் போதான பாதுகாப்பினை உறுதிப்படுத்த முடியும்.
இணைய உலகின் ஜாம்பவானாக திகழும் கூகுள் நிறுவனத்தினால் வழங்கப்படும் மின்னஞ்சல் சேவை ஜிமெயில் ஆகும்.இம் மின்னஞ்சல் சேவையே இன்று உலகில் அதிகளவான பயனர்களால் பயன்படுத்தப்பட்டு வருகின்றது.
இவ்வாறான நிலையில் இச் சேவையையை பயன்படுத்துபவர்களின் எண்ணிக்கை 1 பில்லியனிலும் அதிகமாகக் காணப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.எனினும் இந்த எண்ணிக்கை நாளாந்தமா அல்லது மாதாந்தமா என்ற தகவல் வெளியிடப்படவில்லை.
இந்த ஜிமெயில் சேவை 2004ம் ஆண்டு அறிமுகம் செய்யப்பட்டிருந்த நிலையில் குறுகிய காலத்தில் ஏனைய மின்னஞ்சல் சேவைகளுக்கு சவால் விடும் வகையில் வளர்ந்துள்ளதுடன், இம் மின்னஞ்சல் கணக்கினை பயன்படுத்தியே அன்ரோயிட் மொபைல் இயங்குதளம், யூடியூப், கூகுள் மேப் போன்ற அப்பிளிக்கேஷன்கள் கையாளப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
கூகுள் நிறுவனத்தினால் வழங்கப்படும் சேவைகளுள் ஒன்றான கூகுள் மேப் சேவையின் ஊடாக மில்லியன் கணக்கானவர்கள் பயன்பெறுகின்றனர்.தற்போது iOS மற்றும் Android சாதனங்களில் பயன்படுத்தும் கூகுள் மேப் அப்பிளிக்கேஷனுக்கான புதிய பதிப்பு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
இதில் இணைய வசதி இல்லாத நிலையிலும்(Offline Navigation) இச்சேவையினை பயன்படுத்தக்கூடிய வசதி தரப்பட்டுள்ளது.
இது தவிர அமெரிக்கா மற்றும் கனடா போன்ற நாடுகளில் கேஸ் விலையினை அறிந்துகொள்ளக்கூடிய வசதியும் இந்த அப்பிளிக்கேஷனில் உள்ளடக்கப்பட்டுள்ளமை விசேட அம்சமாகும்.
மேலும் இந்த அப்பிளிக்கேஷனை iTunes, Play Store ஆகிய தளங்களிலிருந்து தரவிறக்கம் செய்து பயன்படுத்தலாம்.
உலகிலேயே அதிகளவானவர்களால் பயன்படுத்தப்பட்டுவரும் கூகுளின் குரோம் இணைய உலாவிக்கான சேயைானது பழைய இயங்குதளங்களுக்கு வழங்கப்படுவது நிறுத்தப்படவுள்ளது.
இதன்படி எதிர்வரும் 2016 ஆம் ஆண்டு முதல் Windows XP, Vista , Mac 10.6, 10.7 மற்றும் 10.8 ஆகிய இயங்குதளங்களுக்கான சேவை நிறுத்தப்படவுள்ளது.
மைக்ரோசொப்ட் நிறுவனம் தனது புதிய இயங்குதளமான விண்டோஸ் 10 இனை அறிமுகம் செய்யப்பட்டபின்னர் அதிகளவான கணினிகள் உட்பட மொபைல் சாதனங்களில் அவ் இயங்குதளம் பயன்பாட்டில் வந்துள்ளது.
இதனைக் கருத்தில் கொண்டு இனி வரும் காலங்களில் புதிய இயங்குதளங்கள் ஊடான சேவையை வழங்க முடிவுசெய்யப்பட்டுள்ளது.
பிரான்சில் தீவிரவாத தாக்குதல் நடத்தப்பட்டுள்ள நிலையில், உங்கள் நண்பர்களின் நிலை பற்றி தெரிந்து கொள்வதற்காக பேஸ்புக் மற்றும் கூகுள் உதவிக்கரம் நீட்டியுள்ளது.நிலநடுக்கம், தீவிரவாத தாக்குதல் போன்ற அசம்பாவித சம்பவங்களின் போது ஏராளமான மக்கள் பலியாகின்றனர்.
அப்போது குறித்த நாடுகளில் நண்பர்கள் மற்றும் உறவினர்களின் நிலை பற்றி அறிந்து கொள்வதற்காக பேஸ்புக் புதிதாக பக்கம் ஒன்றை உருவாக்குவது வழக்கம்.
அதன்படி, பிரான்சில் நேற்று நள்ளிரவு நடந்த தீவிரவாத தாக்குதலுக்கு 150க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.
இந்நிலையில் தங்களது நண்பர்கள் பற்றி அறிந்து கொள்வதற்காக புதிய பக்கத்தை பேஸ்புக் உருவாக்கியுள்ளது.