அன்பை பகிர்வோம்,அன்பால் இணைவோம்

Showing posts with label google chrome. Show all posts
Showing posts with label google chrome. Show all posts

02 July 2016

Google Chrome மெதுவாக இருக்கிறதா? இதோ நச்சுனு 4 வழிகள்

தற்போது அனைவராலும் பரவலாக பயன்படுத்தப்படும் 'பிரவுசர்' என்றால் அது Google Chrome தான்.

இணையப் பயன்பாட்டிற்கு பயன்படுத்தப்படும் பிரவுசர்களில் 99 சதவீத மக்களின் தேர்வு கூகுள் குரோமாக தான் இருக்கிறது. இதன் செயல்திறன் மற்ற பிரவுசர்களை விட சிறப்பாக இருப்பதால் பயன்பாட்டார்களால் பெரிதும் விரும்பப்படுகிறது.

ஆனால் சில சமயங்களில் இதுவே நமது பொறுமையை அதிகமாக சோதித்தி விடும். அந்த அளவு மெதுவாக இருக்கும். இதனை மீண்டும் பழையை நிலைக்கு கொண்டு வர சில வழிகள் இருக்கிறது.


உங்களது கூகுள் குரோமில் extensions உள்ள தேவையற்ற லிங்குகளைஅகற்றிவிடுங்கள். அதிக்கப்படியான லிங்குகள் பிரவுசர் செயல்பாட்டை குறைக்கும். இதற்கு More tools-> Extensions சென்று சரிசெய்யலாம் அல்லது Shift Esc மூலம் தோன்றும் Task manager box மூலம் சரி செய்யலாம்.
அதிகப்படியான extensions பயன்படுத்துவதை விட்டுவிட்டு சில பயனுள்ள extensions மட்டும் பயன்படுத்தலாம். Data Saver extension உங்கள் பிரவுசரில் எந்த அளவு மெமரி உள்ளது என்பதை காட்டும். இதேபோல் OneTab, Tab Suspender மற்றும் The GreatSuspender போன்ற பயனுள்ள extensions மட்டும் பயன்படுத்தலாம்.
குரோமில் உள்ள சில இணையத்தளங்களின் plug-ins-களை அகற்றி விடுங்கள். இது அந்த இணையத்தளங்களை சரியாக காட்டாவிட்டாலும், வேகத்தை அதிகரிக்கும். அதேபோல் சில வீடியோக்களை தானாகவே ஓடவிடும் plug-insகளை அகற்றிவிடுங்கள். இதனை chrome://plugins என டைப் செய்து சரி செய்யலாம்.
Browsing dataவில் உள்ள சிலவற்றை அடிக்கடி அழித்து வந்தால் கூகுள் குரோம் எப்போதும் வேகமாக இருக்கும். இதில் cache பகுதியை அழித்து வந்தால் பிரவுசர் வேகமாக செயல்படும். இதற்கு Chrome Settings-> advanced settings->Clearbrowsing data சென்று cache, cookies, browsing data என அனைத்தையும் அழிக்க முடியும்.

18 April 2016

கூகுள் குரோமின் புதிய பதிப்பு : பழைய இயங்குதளங்களில் செயல்படாது

உலகின் முன்னணி இணைய உலாவியான கூகுள் குரோமின் 50வது புதிய பதிப்பு அண்மையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.முன்னைய பதிப்பிலிருந்த சில குறைபாடுகள் நீக்கப்பட்டு, புதிய அம்சங்கள் உள்ளடக்கப்பட்ட நிலையில் தேடுதல் வேகம் கூடியதாகவும் இப் பதிப்பு காணப்படுகின்றது.

இந்த 50வது பதிப்பான Windows,Mac, மற்றும் Linux ஆகிய இயங்குதளங்களினைக் கொண்ட கணினிகளில் செயற்படக்கூடியதாக இருந்த போதிலும் Windows XP, Windows Vista, OS X 10.6 Snow Leopard, OSX 10.7 Lion, அல்லது OS X 10.8Mountain Lion ஆகிய இயங்குதளங்களில் செயல்படாது என்பது குறிப்பிடத்தக்கது.
காரணம் இவ் இயங்குதளங்களின் பாவனை தற்காலத்தில் வெகுவாக குறைந்துள்ள நிலையிலேயே அதிக பயன்பாட்டிலுள்ள புதிய இயங்குதளங்களில் செயல்படக்கூடியவாறு குரோம் 50 பதிப்பு வடிவமைக்கப்பட்டுள்ளது.

15 November 2015

பழைய இயங்குதளங்களுக்கான சேவையை நிறுத்தவுள்ளது கூகுள் குரோம்

உலகிலேயே அதிகளவானவர்களால் பயன்படுத்தப்பட்டுவரும் கூகுளின் குரோம் இணைய உலாவிக்கான சேயைானது பழைய இயங்குதளங்களுக்கு வழங்கப்படுவது நிறுத்தப்படவுள்ளது.


இதன்படி எதிர்வரும் 2016 ஆம் ஆண்டு முதல் Windows XP, Vista , Mac 10.6, 10.7 மற்றும் 10.8 ஆகிய இயங்குதளங்களுக்கான சேவை நிறுத்தப்படவுள்ளது.

மைக்ரோசொப்ட் நிறுவனம் தனது புதிய இயங்குதளமான விண்டோஸ் 10 இனை அறிமுகம் செய்யப்பட்டபின்னர் அதிகளவான கணினிகள் உட்பட மொபைல் சாதனங்களில் அவ் இயங்குதளம் பயன்பாட்டில் வந்துள்ளது.

இதனைக் கருத்தில் கொண்டு இனி வரும் காலங்களில் புதிய இயங்குதளங்கள் ஊடான சேவையை வழங்க முடிவுசெய்யப்பட்டுள்ளது.

03 August 2015

Android சாதனத்தில் உள்ள Chrome, Firefox இணைய உலாவிகள் மூலமாக இணைய பக்கங்களை PDF வடிவில் சேமிப்பது எவ்வாறு?

நீங்கள் கூகுள் குரோம் அல்லது Firefox இணைய உலாவியை உங்கள் Android சாதனத்தில் பயன்படுத்துபவர் எனின் நீங்கள் விரும்பும் இணையப் பக்கங்களை PDF வடிவில் சேமித்துக்கொள்ள முடியும்.நீங்கள் விரும்பும் இணையப்பக்கங்களை PDF வடிவில் சேமித்துக்கொள்ள விரும்பினால் கீழுள்ள வழிமுறையை பின்பற்றுக.
Image result for android pdf
1. நீங்கள் PDF வடிவில் சேமிக்க விரும்பும் இணைய பக்கத்தை உங்கள் Android சாதனத்தில் உள்ள Google Chrome இணைய உலாவியை பயன்படுத்தி திறந்து கொள்க.
2. பின் Google Chrome இணைய உலாவியின் வலது மேல் மூலையில் தரப்பட்டுள்ள Menu Button ஐ சுட்டுக.
3. இனி தோன்றும் சாளரத்தில் Print என்பதை சுட்டுவதன் மூலம் தோன்றும் சிறிய சாளரத்தில் Save as PDF என்பதை தெரிவு செய்து Save என்பதை சுட்டுக.
4. பின்னர் சிறிது நேரத்தின் பின் தோன்றும் இடைமுகத்தில் குறிப்பிட்ட PDF கோப்பிற்கு பெயர் ஒன்றினை இட்டு Save என்பதை அழுத்துவதன் மூலம் அதனை PDF வடிவில் சேமித்துக் கொள்ளலாம்.
அவ்வளவுதான்.
இனி இணைய இணைப்பு இல்லாத போதும் கூட சேமிக்கப்பட்ட PDF கோப்பினை திறந்து தேவையான தகவல்களை மீட்டிப் பார்க்க முடியும்.
நீங்கள் பயன்படுத்துவது Firefox இணைய உலாவி எனின் பின்வரும் வழிமுறையை பின்பற்றுக.
1. PDF வடிவில் சேமிக்க விரும்பும் இணைய பக்கத்தை உங்கள் Android சாதனத்தில் உள்ள Firefox இணைய உலாவியை பயன்படுத்தி திறந்து கொள்க.
2. பின்னர் Menu Button ஐ சுட்டுவதன் மூலம் திறக்கும் சாளரத்தில்உள்ள Page என்பதை சுட்டுக.
3. இனி உங்களுக்கு Save as PDF என்ற வசதி கிடைக்கும்.
4. பின் அதனை சுட்டுவதன் மூலம் குறிப்பிட்ட இணைய பக்கத்தை PDF வடிவில் சேமித்துக் கொள்ள முடியும்.

19 July 2015

கூகுள் குரோமை விட 112% அதிக வேகம் கொண்ட மைக்ரோசாப்ட் 'எட்ஜ்' பிரவுசர்

தற்போது இணையதளங்களில் உலவுவதற்கு வசதியாக இருக்கும் பிரவுசர்களில் கூகுள் குரோம் பிரவுசரே உலகெங்கிலும் பாப்புலராக இருந்து வருகிறது. வரும் 29-ந்தேதி புதிதாக வெளிவர உள்ள மைகரோசாப்டின் விண்டோஸ் 10 இயங்குதளத்தில் அதிவேக பிரவுசர் ஒன்று புதிதாக இணைக்கப்படுகிறது. அதற்கு 'எட்ஜ்' என பெயரிடப்பட்டுள்ளது. 

09 January 2015

கூகுள் க்ரொமிற்கு போட்டியாக ஸ்பார்டனை களமிறக்கும் மைக்ரோசாப்ட்!

‘உலாவி’ (Browser) என்றவுடன் பலருக்கு ‘கூகுள் க்ரொம்’ (Google Chrome) பளிச்சென நினைவுக்கு வரும். சிலர் ‘ஃபயர்பாக்ஸ்’ (FireFox) விரும்பிகளாகவும் இருக்கலாம்.ஏனென்றால் மேற்கூறிய இரண்டு உலாவிகளும் அனைவரும் பயன்படுத்தும் வகையில் எளிமையானதாகவும், மிகுந்த செயல்திறன் கொண்டதாகவும் உருவாக்கப்பட்டுள்ளன.

21 December 2014

குரோம் உலவியில் செஸ் விளையாட்டு

கணினியில் அனைத்து விளையாட்டுளையும் இலவசமாக இணையத்தின் உதவியுடன் பதிவிறக்கி பயன்படுத்துவோம். அதுபோல செஸ் விளையாட்டும் இணையத்தில் கிடைக்கிறது. ஆனால் நாம் இதனை அப்ளிகேஷனாக பயன்படுத்தபோவது இல்லை. குரோம் உலவியின் துணையுடன் இந்த விளையாட்டை விளையாட போகிறோம்.

07 December 2014

கூகுள் குரோம் உலவியில்-துப்பாக்கி விளையாட்டு

இணைய பயன்பாடுகள் பெருகிகொண்டு வரும் இந்த நேரத்தில், ஆன்லைன் விளையாட்டுகளும் அதிகரித்து கொண்டே உள்ளன. அந்த வகையில் பல்வேறு நிறுவனங்கள் ஆன்லைன் மூலமாக விளையாட்டுகளை இலவசமாக வழங்கி வருகிறன. அதேபோல் கூகுள் நிறுவனமும் குரோம் உலவியின் மூலமாக விளையாட்டுகளை வழங்கி வருகிறது. 

05 October 2014

குரோம் பிரவுசர் பற்றி சில பயனுள்ள டிப்ஸ்

ஏதேனும் ஓர் இணைய தளத்தை, குரோம் பிரவுசர் வழியாகக் காண்கையில், அது முடக்கப்படுகிறதா? கிராஷ் ஆகித் தொடர்ந்து பயன்படுத்தாத நிலையில் உள்ளதா? அதே வேளையில், பயர்பாக்ஸ், இண்டர்நெட் எக்ஸ்புளோரர் போன்ற மற்ற பிரவுசர்களில் இந்த பிரச்னை இல்லாமல், சரியாகச் செயல்படுகிறதா?

19 September 2014

கூகுள் க்ரோமில் இத்தனை சேவைகள் இருக்கா?

வழக்கமா இணையதளம் போனாலே பேஸ்புக், யூ ட்யூப் மட்டும் தான் பாக்குறோம் இணையத்துள இவை இரண்டையும் தவிற வேற என்னென்ன இருக்கு என்று யாருமே கண்டு கொள்வதில்லை. அங்க ஆராய்ச்சியாளர்கள் மண்டைய பிச்சுக்கிட்டு பல புதிய ஆப்ஷன்களை கண்டுபிடிக்கிறாங்க ஆனால் நாம அதை எல்லாம் கண்டுக்காம நமக்கு தேவையானதை மட்டும் தான் இங்கு பார்க்கின்றோம். 

14 September 2014

கூகுள் குரோமில் சூப்பரா சவுண்ட் கேட்கணுமா?

கூகுள் குரோமில் இணையத்தளங்களினூடாக பாடல்கள் மற்றும் வீடியோக்களை பார்த்து மகிழும்போது அவற்றிலிருந்து சிறந்த ஒலியை பெற்றுக்கொள்ள Audio EQ நீட்சி உதவுகின்றது.கூகுள் குரோம் இணைய உலாவியில் செயல்படக்கூடிய இந்நீட்சியனது HTML5 இணைய மொழிக்கு ஒத்திசைவாக்கம் உடையதாக காணப்படுகின்றது.

29 August 2014

நமக்கு பிடித்த தளங்களின் புக்மார்க்குகளை பேக்கப் மற்றும் ரெஸ்டோர் செய்வது எப்படி?

நம் எல்லோருக்கும் browser களில் நமக்கு பிடித்த தளங்களை (ctrl+d) கொடுத்து BookMark சேவ் செய்ய தெரியும்.ஆனால் இதை தெரிந்து கொள்வது மிக அவசியம் ஏன் என்றால்,சில சமயம் நாம் OS Reinstall செய்ய வேண்டியது இருக்கும் அல்லது புதிய வேலையில்சேரும்போது நமக்கு வேண்டிய BookMark -களை இழக்க நேரிடும் ,அதை எப்படி Backup மற்றும் Restore செய்வது எப்படி என்று பார்ப்போம்.

28 July 2014

குரோம் பிரவுசரால் லேப்டாப் பேட்டரிக்கு ஆபத்தா?

விண்டோஸில் பயன்படுத்தப்படும் குரோம் பிரவுசர் லேப் டாப்பில் உள்ள பேட்டரியின் வாழ்நாளை குறைத்து விடும் என சமீபத்தில் வெளியாகியுள்ள தகவல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.அய்யோ..அப்போ நான் என்ன பண்றது என்ற கேள்வி அனைவரின் மனதிலும் எழலாம். குரோம் பிரவுசர் மட்டும் பிரச்சனை என்றால் பின் மற்ற பிரவுசர்கள் என்ன செய்கின்றன.

19 April 2014

Google Chrome படங்களை பெரிதாக்கி பார்க்க பயனுள்ள நீட்சி

நாம் வழக்கமாக Google, Yahoo, Facebook, Twitter, Flickr போன்ற தளங்களில் உலாவும் பொழுது, அதில் உள்ள படங்கள் Thumbnail ஆக இருப்பதால் ஒவ்வொரு முறையும் அதை க்ளிக் செய்து பெரிதாக்கி பார்க்க வேண்டியுள்ளது.இதற்கு தீர்வாக அமைவது, கூகுள் க்ரோம் உலாவிக்கான Hover Zoom நீட்சி!

10 March 2014

Google chrome உலாவி பற்றி அறிய தகவல்கள்

இன்று நாம் அதிகம் பயன்படுத்தும் உலாவி எது என்று கேட்டால் அது குரோம் பிரவுசர் தான்.லினக்ஸ் மற்றும் மேக் சிஸ்டங்களில் இயங்கும் பதிப்புகளும் கிடைக்கின்றன.மொபைல் சாதனங்களிலும் இது தொடர்ந்து இடம் பெறும் பிரவுசராக உருவெடுத்துள்ளது. இதனை நாம் விரும்பும் வகையில் வசத்திற்குக் கொண்டு வர கீழே சில வழிகள் தரப்படுகின்றன.

26 February 2013

FACE BOOK வைத்திருப்போருக்கு மிகவும் பயன்படும் குரோம் நீட்சி

Face Book இல் நாம் சாதாரணமாக படங்களைப் பார்க்கும்போது அவை சிறியவையாகவே காணப்படுகின்றன. இவற்றை பெரிதாக்கிப் பார்ப்பதற்கு நாம் அப் படத்தினை புதிய பக்கத்தில் திறந்தே பெரிதாக்கிப் பார்க்கின்றோம். ஆனால் அப்படிச் செய்யாமல் அதே பக்கத்தில் வைத்தே பெரிதாக்கிப் பார்க்கலாம். இதற்காக ஒரு நீட்சி ஒன்று உள்ளது. இதனை நீங்கள் தரவிறக்கி நிறுவிக்கொண்டால் போதும். கீழே உள்ளது போன்று இனிமேல் படங்களை பெரிதாக்கிப் பார்க்கலாம்.

22 January 2013

கூகிள் குரோம் அப்புறமா படிங்க பயனுள்ள நீட்சி

நாம்  இணையத்தில் ஏதாவது பயனுள்ள வலைப்பூக்களை பார்த்து, ’அட நல்ல விஷயமாக இருக்கிறதே! அவசியம் பிறகு சமயம் கிட்டும் பொழுது படிக்க வேண்டும்’ என பல சமயங்களில் யோசித்ததுண்டு, ஆனால் சமயம் கிட்டும் பொழுது அந்த வலைப்பூ முகவரியை மறந்து போய் விடுவதும் நிகழ்கிறது.இந்த பணியை எளிதாக்க கூகுள் க்ரோம் (Google Chrome) உலாவியில் பயன்படுத்தும்படியான ஒரு உபயோகமான நீட்சி Read Later Fast ஆகும்.

05 December 2012

Google Chrome அலங்கரிக்க சில நீட்சிகள் ( ADD ONS)

Google  நிறுவனம் பற்றி அறியாதவர்கள் யாரும் இருக்க மாட்டர்கள் இந்த நிறுவனமானது தினம் தினம் புதிய மற்றும் ஏராளமான வசதிகளை அறிமுகப்படுத்தி கொண்டே தான் இருக்கிறது. இந்த பதிவு அதிகமாக பயன்படுத்த படும் GOOGLE CHROME பற்றியது தான். நம்மில் பலரும் இந்த உலாவியை தான் பயன்படுத்துகிறோம். இந்த உலாவியை அழகாக்க பல நீட்சிகள் இணையத்தில் இலவசமாக கிடைக்கிறது அவற்றில் சிலவற்றை பற்றி பார்ப்போம்.

26 November 2012

Google Chrome பிரவுசர் - திறன் கூட்டும் சில வழிகள்

கூகுளின் குரோம் தேவையற்ற இன்டர்பேஸ் வழிகள் எதுவும் இல்லாதது. அதன் திடமான இயக்கமும், வேகமும் நிச்சயமாக அதற்கான பெருமையைத் தேடித்தருவதாகவே உள்ளது. இத்துடன் இதனை இன்னும் அதிக பயனுள்ளதாக அமைக்க, கீழ்க்காணும் சில ட்ரிக்குகளை மேற்கொள்ளலாம்.

12 October 2012

google chrome - மேலும் ஒரு மிகப் பயனுள்ள நீட்சி!

கூகிள் க்ரோம்(google chrome) உலாவியில், நாம் இணையத்தில் ஆங்கில கட்டுரைகளை படித்துக் கொண்டிருக்கும் பொழுது, ஏதாவது ஒரு குறிப்பிட்ட வார்த்தைக்கு பொருள் தெரியவில்லை எனில் அதற்காக மற்றொரு டேபில், இதற்க்கான பொருளை தேடவேண்டிய அவசியம் இனி இல்லை.