அன்பை பகிர்வோம்,அன்பால் இணைவோம்

Showing posts with label TIPS. Show all posts
Showing posts with label TIPS. Show all posts

19 April 2016

பலரும் அறிந்திராத ஃபேஸ்புக் மெசன்ஜர் அருமையான விஷயம்.!!

ஃபேஸ்புக் நிறுவனம் தனது மெசன்ஜர் செயலிக்கு தனி கவனம் செலுத்தி வருகின்றது. அந்த வகையில் ஃபேஸ்புக் மெசன்ஜர் செயலியில் பல்வேறு மாற்றங்கள் வழங்கப்பட்டு வருகின்றன. அவ்வப்போது வழங்கப்படும் புதிய அப்டேட்களில் வாடிக்கையாளர்களுக்கு பயனுள்ள ஏதேனும் ஒரு அம்சம் நிச்சயம் இருக்க தான் செய்கின்றது எனலாம்.

மெசன்ஜர் செயலியை குறுந்தகவல் அனுப்ப மட்டுமே பயன்படுத்துபவர் என்றால் இந்த தொகுப்பு உங்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். மெசன்ஜர் செயலியில் பலரும் அறிந்திராத சில அம்சங்களை தான் இங்கு தொகுத்திருக்கின்றோம். 


ஃபேஸ்புக் மெசன்ஜரின் புதிய அம்சம் மூலம் பயனர்கள் தங்களது நண்பர்களுக்கு பணம் அனுப்ப முடியும். இதை செய்ய டெபிட் / கிரெடிட் கார்டு தகவல்களை மெசன்ஜர் செயலியில் பதிவு செய்தால் போதும். தற்சமயம் அறிவிக்கப்பட்டுள்ள இந்த அம்சம் விரைவில் பயன்பாட்டிற்கு வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

மெசன்ஜர் செயலியில் பாஸ்கெட் பால் கேம் விளையாட நண்பர் ஒருவருக்கு பாஸ்கெட் பால் ஸ்மைலியை அனுப்பி, அதனினை க்ளிக் செய்ய வேண்டும். களைப்பாக இருக்கும் போது கேம் விளையாடி மனதை மகிழ்ச்சியாக்கி கொள்ளலாம


மெசன்ஜர் செயலியின் புதிய அப்டேட் மூலம் டிராப் பாக்ஸ் ஃபைல்களை பகிர்ந்து கொள்ள முடியும்.

வீடியோ சாட் வீடியோ சாட் ஹெட்ஸ் எனும் புதிய அம்சம் மூலம் வீடியோ கால் செய்யும் போதும் சாட் ஹெட் இன்டர்ஃபேஸ் தெரியும்.

ஃபேஸ்புக் டெஸ்க்டாப் செயலி மூலம் கணினியில் ஃபேஸ்புக் செயலியை பதிவிறக்கம் செய்து நேரடியாக பயன்படுத்தலாம். எனினும் இந்த செயலியில் பல அம்சங்கள் மேம்படுத்தப்பட வேண்டும் என்பதும் குறிப்பிடத்தக்கது.

 ஃபேஸ்புக் நிறுவனத்தின் பிரத்யேக ஆண்ட்ராய்டு செயலியான ஹெல்லோ டையலர் அறிவீர்களா. இந்த செயலியை பயன்படுத்தி அழைப்புகளை மேற்கொள்ளும் போது மொபைலில் பதிவு செய்யப்படாத காண்டாக்ட்களை அறிந்து கொள்ள முடியும். இதற்கு அந்நிறுவனம் ஃபேஸ்புக் கணக்குகளை பயன்படுத்துகின்றது.

பின் ஃபேஸ்புக் மெசன்ஜர் செயலியில் உறையாடல்களை பின் செய்யும் வசதி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதனை எனேபிள் செய்ய க்ரூப் சாட் சென்று வலது பக்கம் க்ளிக் செய்து மோர் என்ற ஆப்ஷனில் பின் டூ க்ரூப்ஸ் என்ற ஆப்ஷனை தேர்வு செய்ய வேண்டும்.

நண்பர்களுக்கு நீங்கள் இருக்கும் இடத்தை பகிர்ந்து கொள்ள முடியும். இந்த அம்சம் கடந்த ஆண்டு மெசன்ஜர் செயலியில் அறிமுகம் செய்யப்பட்டது.

02 April 2016

வாட்ஸ் அப்பில் சுய விவரங்களை பாதுகாக்க சில வழிகள்...!

இன்று வரை 700 மில்லியன் மக்கள் ஒரு மாதத்தில் 'வாட்ஸ் அப்' பயன்படுத்தி வருகின்றனர். அதில், ஒரு மாதத்தில் மட்டும் 30 பில்லியன் செய்திகள் பரிமாறப்பட்டுகிறது. இந்த 'வாட்ஸ் அப்'பில் தான் பல்லாயிரக்கணக்கான மக்கள் தங்களது சுய விவரங்களை பரிமாறிக் கொள்கின்றனர். இங்கு சாதாரணமாக பேசிக்கொள்வது மட்டுமின்றி புகைப்படம், வீடியோ, வங்கி கணக்கு விவரங்கள், தொடர்புகளும் தனிப்பட்ட வகையில் பரிமாறப்படுகின்றன.

இங்கு பிரைவசி இல்லாததால், சமூக வளைதளங்களில் உலவும் தீய எண்ணமுடையவர்கள் அதை தவறாக பயன்படுத்த முடியும். அதனால் ESET நிறுவனம், தங்களது சுய விவரங்கள் தவறாக பயன்படுத்தப்படாதவாறு பாதுகாக்க சில முக்கிய குறிப்புகளை அளித்துள்ளனர்.

1.) வாட்சப் லாக்:

வாட்ஸ் அப்-ஐ லாக் செய்வதில் முக்கியமான விஷயம் முதலில் ஒரு பாஸ்வேர்டு அல்லது 'பின்' பயன்படுத்துதலே சிறந்தது. வாட்ஸ் அப்பிற்கென பிரத்தியேகமாக எந்த ஒரு லாக்கும் இல்லை. இதற்கென ஆப் லாக்கை பதிவிறக்கம் செய்து பயன்படுத்தி கொள்ளலாம். இதனால், மூன்றாவது மனிதர்கள் பயன்படுத்துவதை தவிர்க்க முடியும். ஆனாலும், செல்போன் தொலைந்து போகும் பட்சத்தில் அதை தவறாக பயன்படுத்துவதற்கு அதிக வாய்ப்பு உள்ளது. எனவே 'சாட் லாக்', 'வாட்ஸ் அப் லாக்', 'செக்யூர்சாட்' இவை மூன்றும் ஆண்ட்ராய்டு போன்களில் எளிதாக பயன்படுத்தலாம். எனவே இவற்றை பயன்படுத்தி யாரும் உங்களது தகவல்களை திருடாமல் பார்த்துக் கொள்ளலாம்.

2.) வாட்சப் புகைப்படங்கள், போட்டோ ரோலில் சேர்வதை தடுக்க:

புகைப்படங்களை பரிமாறும்பொழுது, அவை பொதுவாக உங்கள் போட்டோ ரோலில் சேகரிக்கப்படுகிறது. அதனால் அவை திருடப்பட வாய்ப்புகள் அதிகம். இவற்றை ஐபோனில் எளிதில் தடுக்கலாம். போன் செட்டிங்கில் உள்ள மெனுவில் சென்று, பிரைவசியில் உள்ள புகைப்படத்தை 'டீசெலைக்ட்' செய்ய வேண்டும். இதனால் அவை போட்டோ ரோலில் சேர்வது எளிதில் தடுக்கப்படுகிறது.

ஆண்ட்ராய்டு பயனாளர்கள், இதனை 'பைல் எக்ஸ்ப்லோரர் ஆப்' மூலம் தடுக்கலாம். இதில், நோ மீடியா எனும் பைலை உருவாக்குவதின் மூலம் தடுக்கப்படுகிறது. வாட்ஸ் அப் இமேஜை லாக் செய்வது ஒரு சிறந்த வழிமுறையாக இருக்கலாம். ஆனால், போன்கள் திருடப்படும்போது 100% பாதுகாப்பைத் தரும் என கூற முடியாது.

3.) லாஸ்ட் சீனை மறைப்பது:

நீங்கள் கடைசியாக எப்போது ஆன்லைனில் இருந்தீர்கள் என மற்றவர்களுக்கு தெரியும். இது மற்றவர்கள் தவறாக பயன்படுத்த வழிவகை செய்யலாம். இந்த லாஸ்ட் சீன் மற்றவர்கள் அறியாதவாறு தடுக்க 'ஹைடு லாஸ்ட் சீனை' பயன்படுத்தலாம். ஆனால் இதை செய்தால் உங்கள் தொடர்புகளில் உள்ளவர்களின் லாஸ்ட் சீனையும் நீங்கள் தெரிந்துகொள்ள முடியாது.

4.) ப்ரொஃபைல் பிக்சரை தவறாக பயன்படுத்துவதை தடுக்க:

உங்கள் ப்ரொஃபைல் பிக்சரை நீங்கள் பயன்படுத்தும்போது அதை மற்றவர்கள் தவறாக பயன்படுத்த வாய்ப்பு அதிகம். அதோடு இந்த ப்ரொஃபைல் புகைப்படத்தை பயன்படுத்தி கூகுள் சர்ச் சில் உங்களது விவரங்களை பெற முடியும். அதனால், ப்ரைவசியில் உங்கள் புகைப்படத்தை தொடர்புகளில் மட்டும் பொருத்த வேண்டும்.

5.) போலி தகவல்களிடம் விழிப்போடு இருங்கள்:

வாட்ஸ் அப் எப்பொழுதும் நேரடியாக உங்களோடு தொடர்பு கொள்வதில்லை என்ற உண்மையை புரிந்து கொள்ளுங்கள். வாட்ஸ் அப் நேரடியாக உரையாடல்கள், ஆடியோ தகவல்கள், புகைப்படங்கள், மாற்றங்கள், வீடியோக்கள் எப்பொழுதும் மின்னஞ்சல் உதவியில்லாமல் உங்களுக்கு அனுப்பாது. குறிப்பிட்ட இலவச நன்கொடைகள் பற்றிய தகவல்கள் வந்தால் நிச்சியம் அது போலியாக தான் இருக்கும். இவை நம்பத்தகுந்தது அல்ல.

6.) தொலைபேசி தொலைந்தால் வாட்ஸ் அப்பை செயலிழக்கச் செய்யுங்கள்:

செல்போன் தொலைந்தால், வாட்ஸ் அப் தனது பயனாளர்களுக்கு எளிய மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதிகளை வழங்குகிறது. சிம் கார்டை லாக் செய்வது பற்றிய வசதிகளை அளிக்கறது. தொலைபேசி தொலைந்து போனால் உடனே அதே எண்ணில் மற்றொரு தொலைபேசியில் வாட்ஸ் அப் அக்கவுண்ட்டை திறந்தால் தானாகவே தொலைந்த வாட்சப் அக்கவுண்ட் செயலிழக்கப்படும். இதன் மூலம் வாட்ஸ் அப் அக்கவுண்ட் தானாகவே செயலிழக்கப்படும்.

7.) எதைப்பற்றி பேசுகிறோம் என்பதில் தெளிவாக இருங்கள்:

இது கடைசி, இதுவே முடிவல்ல என்பதை உணர்ந்து செயல்படுங்கள். சுய தகவல்களை எப்பொழுதும் பகிர்வதை தவிர்த்திடுங்கள். முகவரி, தொலைபேசி எண், வங்கி விவரம், கிரெடிட் கார்டு விவரம், பாஸ்வேர்டுகளை வாட்ஸ் அப்பில் பகிராதீர்கள்.

8.)வாட்ஸ் அப்பை 'லாக் அவுட்' செய்ய மறக்காதீர்கள்:

வாட்ஸ் அப் தற்போது நிறைய சேவையை வழங்கி வருகிறது. பல பயனாளர்களுக்கு வாட்சப் லாக் அவுட் செய்வது பற்றிய விவரம் தெரிவதில்லை. இதை தொலைபேசி மூலமோ பிரௌசர் மூலமோ செய்யலாம்.

உஷாராக இருங்கள்!

21 March 2016

ஐபோன் தான் வேண்டுமா, வாங்கும் முன் சில பரிசீலனைகள்.!!

பணம் இருக்கோ, இல்லையோ ஆசை வந்தால் கடன் வாங்கியாவது ஐபோன் ஒன்றை வாங்கி விடுகின்றனர். ஐபோன் மோகம் இவர்களை வாங்க தூண்டுகின்றது என்றாலும், ஒரு சிலர் பலகட்ட ஆய்வுகளை மேற்கொண்டு அதன் பின் தான் வாங்குவது குறித்து முடிவு செய்கின்றனர். 

அந்த வகையில் ஐபோன் குறித்த ஆய்வில் ஈடுப்பட்டு இணையத்தை துளாவி கொண்டிருப்போருக்கு இந்த தொகுப்பு பயன் தரும். ஐபோன் வாங்கும் முன் பரிசீலனை செய்ய வேண்டியவைகளை தான் இங்கு தொகுத்திருக்கின்றோம்

ஐபோன்களின் விலை அதிகம் என அனைவருக்கும் தெரியும், ஏற்கனவே ஐபோன் வைத்திருந்து இம்முறை அதனினே அப்கிரேடு செய்ய வேண்டும் எனில் ஒவ்வொரு ஆண்டும் இதே நிலை ஏற்படும். இதில் மெமரி அதிகம் வேண்டுமானால் செலவும் அதிகமாகும்

பழைய ஐபோன் ஒரு வேலை பழைய போனினை விற்க முடிவு செய்திருந்தால், கருவிக்கு வாரண்டி இருத்தல் அதிக விலைக்கு விற்பனை செய்ய முடியும். பழைய போனினை அதிக விலைக்கு விற்றாலும் கூடுதல் பணம் செலுத்த வேண்டிய சூழல் நிச்சயம் ஏற்படும்.

 உண்மையில் இம்முறை வாங்கும் ஐபோன் உங்களுக்கு எந்த வகையில் பயன் தரும் என்பதை உறுதி செய்து கொள்ள வேண்டும். ஒரு வேளை பழைய ஐபோன் அல்லது வேறு ஏதும் கருவியை பயன்படுத்தினால் பெரிய திரை, கூடுதல் புதிய அம்சங்களை பயன்படுத்த புதிய கருவியை வாங்கலாம்.
புதிய கருவியில் இருக்கும் அம்சங்களை பழைய கருவியில் பயன்படுத்த முடியுமா என்றும் பார்க்க வேண்டும். புதிய இயங்குதளங்களில் சில புதிய அம்சங்கள் வழங்கப்படும் நிலையில். புதிய கருவியில் கிடைக்கும் அம்சங்களை பழைய கருவியிலேயே பயன்படுத்தலாம். இந்த சூழலில் புதிய கருவி கட்டாயம் வாங்க வேண்டுமா என்பதையும் யோசிப்பது நல்லது.

ஆண்ட்ராய்டு இயங்குதளம் ஆப்பிள் நிறுவனத்திற்கு போட்டியாக விளங்குகின்றது. இந்நிலையில் ஆண்ட்ராய்டு இயங்குதளத்தில் இருந்து ஆப்பிள் இயங்குதளம் பயன்படுத்த வேண்டுமானாலும் முயற்சி செய்யலாம். இவ்வாறு செய்யும் போது மின்னஞ்சல், காணனன்டாக்ட், மற்றும் இதர தரவுகளை புதிய இயங்குதளத்திற்கு பரிமாற்றம் செய்வது கடினம் கிடையாது.

18 March 2016

பழைய கணினிகளை மின்னல் வேகத்தில் இயக்க இதை தான் செய்யனும்.!!

உங்கள் கணினி அல்லது லேப்டாப் பழையதானால் சில நேரங்களில் அவை மெதுவாக செயலப்படும். புதிய ப்ரோகிராம்கள் பழைய கணினியில் செயல்படாமல் இருக்கலாம். இருப்பினும் கணினி மெதுவாக செயல்பட பல காரணங்கள் இருக்கும்.


நெட் பயன்படுத்தும் போது கோப்புகளை டவுன்லோட் செய்யும்போதும் கணினி மெதுவாக செயல்படும். நீங்கள் அதற்காக பணம் செலவு செய்யாமலே உங்கள் கணினியை வேகமாக செயல்பட வைக்க முடியும்.


டிஸ்க் கிளீன் செயல்படுத்தவும் இதற்கு திரையின் வலது ஓரத்திற்கு சென்று செட்டிங்கை தட்டவும். (அல்லது நீங்கள் mouse பயன்படுத்தினால் திரையின் கீழே வலது ஓரத்தில் குறிபார்த்து mouse பாயிண்டரை மேலே செலுத்தவும். பின்பு செட்டிங்கை கிலிக் செய்யவும்) பிறகு கண்ட்ரோல் பேனலை தட்டி சர்ச் பாக்ஸில் அட்மின் என்று டைப் செய்யவும். Administrative toolsஐ தட்டி அல்லது கிலிக் செய்து டிஸ்க் கிளீன் அப் என்பதை இருமுறை கிலிக் செய்யவும்.


உங்கள் வன்பொருளை டீஃப்ராக்மெண்ட் செய்யவும் ஸ்டார்ட் பொத்தானை கிலிக் செய்து டிஸ்க் டீஃப்ராக்மெண்டை திறக்கவும். சர்ச் பாக்ஸில் Disk Defragmenter என்று டைப் செய்யவும். பிறகு ரிஸல்ட் பட்டியலில் Disk Defragmenter என்பதை கிலிக் செய்யவும். இந்த முறைகளை பின்பற்றவும். இது முடிய பல மணி நேரம் ஆகலாம். இது அளவை மற்றும் வன்பொருளின் பிரிவின் டிகிரியை பொருத்தது. இந்த செயல் நடைபெறும் பொழுது நீங்கள் கணினியை பயன்படுத்தலாம்.



அங்கீகரிக்கப்பட்ட ஆண்டிவைரஸ் நிறுவவும் அங்கீகரிக்கப்பட்ட ஆண்டிவைரஸ் நிறுவலாம். ஆண்டிற்கு ரூ.300 முதல் ரூ.400க்குள் இருக்கும் ஆண்டிவைரஸ் மென்பொருளை பெற்று கொள்ளவது போதுமானது. இது அங்கீகாரமற்ற ப்ரோகிராம்கள் நிறுவுவதை தவிர்க்க உதவும். இதனால் வைரஸ் பாதிப்பில் இருந்து உங்கள் கணினி காக்கப்படும்.




சி கிலீனர் பயன்படுத்தவும் இது தற்காலிக கோப்புகளை அழிக்க உதவும். கேச்சே போன்ற கொப்புகள் உங்கள் கணினியை மெதுவாக செயல்பட வைக்கலாம். அவற்றை நீக்க இது உதவுகின்றது இந்த மென்பொருள் இலவசம் தான். இது எல்லா கணினிகளுக்கும் ஒத்துவரும்.


தேவையில்லாத ப்ரோகிராம்களை நிறுவி இருந்தால் நீக்கவும் உங்கள் கணினியில் அதிகமாக ப்ரோகிராம்கள் இருந்தாலும் கணினி மெதுவாக செயல்படும். ஆகையால் தேவையில்லாத ப்ரோகிராம்கள் நிறுவப்பட்டிருந்தால் அவற்றை நீக்கினால் போதும், கணினி வேகமாக செயல்படுவதை காண முடியும்.

27 February 2016

மொபைல் டிப்ஸ்

* மொபைல் போனுக்கு முதல் எதிரி ஈரம். எனவே தண்ணீர், வியர்வை அதனுள் செல்லாமல் பாதுகாக்கவும். 
* ஒருவரின் மொபைல் போனை எடுத்து, அவருக்கு வந்த செய்திகள், அழைப்புகளைப் பார்ப்பது அநாகரிகமான செயல். 
* பலர் கூடும் பொது இடங்களில், வைப்ரேஷன் மட்டும் வைத்து இயக்கவும். உங்கள் அழைப்புக்கான டோன் ஒலித்து, பிறரின் கவனத்தை ஈர்ப்பதனைத் தவிர்த்திடுங்கள். 
* செல்லமாகப் பேசுவது, கோபத்தில் திட்டுவது போன்ற பேச்சுக்களை தனியிடம் சென்று வைத்துக் கொள்ளுங்கள்.
 
* திரையில் உள்ள லிக்விட் கிறிஸ்டல் டிஸ்பிளே (LCD) மீது அழுத்தத்தைப் பிரயோகித்தால் திரை கெட்டுவிட வாய்ப்பு உள்ளது. எனவே பாக்கெட்டில் போனை வைத்திடுகையில் ஏதேனும் கூர்மையான அல்லது பாதிப்பு ஏற்படுத்தக் கூடிய பொருள் மொபைல் போனுடன் உரசிக் கொண்டிருக்கிறதா என்பதைக் கவனித்துச் செயல்படவும். போம் கவர்கள் அல்லது பிளாஸ்டிக் கவர்கள் இந்த வகையில் பாதுகாப்பு தரலாம்.

07 December 2015

MS Powerpoint – தரும் சில Keyboard Shortcut வசதிகள்

Powerpoint என்பது நாம் அடிக்கடி பயன்படுத்தும் ஒரு மிக முக்கியமான Presentation Program. இதை பயன்படுத்தும் நமக்கு ஏராளமான Keyboard Shortcut கள் பயன்படுத்தும் வசதியை MS Office வழங்கி உள்ளது. அவற்றில் முக்கியமான சிலவற்றை இங்கே காண்போம். 

கீழே உள்ள அனைத்தும் Slideshow வின் போது பயன்படுத்தப்படுபவை. MS Office 2007 பயன்படுத்தும் நபர்களுக்கு இவை அனைத்துமே வேலை செய்யும். 


Shortcut செயல்
F5 Presentation – ஐ ஆரம்பிக்க
N, Enter, Page down, right, left or space அடுத்த Slide அல்லது அடுத்து Animation க்கு செல்ல
P, Page Up, left, UP ou backspace முந்தைய Slide அல்லது முந்தைய Animation க்கு செல்ல
Hold Enter புதிய Silde உருவாக்க
W or, Slideshow – வை தொடர அல்லது ஒரு வெள்ளை Screen காமிக்க
B or . Slideshow – வை தொடர அல்லது ஒரு கருப்பு Screen காமிக்க
S slideshow – வை Pause அல்லது resume செய்ய
ESC or – slideshow – வை முடிக்க
E Screen – இல் குறிப்புகள் கொடுத்து இருந்தால் அவற்றை கிளியர் செய்ய
H Hide செய்யப்பட்டள்ள அடுத்த Slide -க்கு செல்ல
T ஒத்திகை பார்க்கும் போது New Timing Interval வைக்க
O ஒத்திகை பார்க்கும் போது Original Timing Interval வைக்க
M ஒத்திகை பார்க்கும் போது அடுத்து Slide க்கு Mouse Cursor -ஐ பயன்படுத்த
R Slide – களின் Time மற்றும் Narration போன்றவற்றை Record செய்ய
1 + Enter [1 ஐ அழுத்திய படி Enter Press செய்யவும்] முதல் Slide க்கு செல்ல
A or = Mouse Cursor – ஐ மறைக்க அல்லது தெரிய வைக்க
Ctrl+S குறிப்பிட்ட Slide – ஐ தெரிவு செய்ய
Ctrl+P Mouse Cursor – ஐ பேனா முனை போல மாற்ற
Ctrl+A Mouse Cursor – ஐ Default Arrow ஆக மாற்ற
Ctrl+h pointer மற்றும் navigation button – ஐ மறைக்க
Ctrl+u pointer மற்றும் navigation button – ஐ 15 நொடிகளுக்கு பின் மறைக்க
Ctrl+T Windows taskbar – காண்பிக்க
shift+f10 Right Click மெனுவை காண்பிக்க
Tab Slide – இன் முதல்/அடுத்த Hyperlink க்கு செல்ல
Shift +Tab Slide – இன் முந்தைய/கடைசி Hyperlink க்கு செல்ல
Select Hyperlink & Press Enter Hyperlink – ஐ ஓபன் செய்ய
Shift+f5 தற்போதைய Slide-இல் இருந்து Presentation -ஐ ஆரம்பிக்க.

09 October 2015

ஜிமெயிலில் புதிய வசதி

ஜிமெயிலில் சின்னதாகப் பல வசதிகள் உண்டு. இவற்றில் பலவற்றை நீங்கள் கவனிக்காமல் கூட இருக்கலாம். இப்போது இந்தப் பட்டியலில் புதிதாக ஒரு அம்சம் அறிமுகமாகி இருக்கிறது. அது இமெயில்களை பிளாக் செய்யும் வசதி.

ஏதேனும் ஒரு காரணத்திற்காக குறிப்பிட்ட ஒருவரிடமிருந்து நீங்கள் இமெயில் பெற விரும்பாவிட்டால், அவரின் மெயிலை வரும் முன் தடுத்துவிடலாம்.

இதற்காக மெயிலின் வலப்பக்கத்தில் பதில் அளிக்கும் வசதி அருகே உள்ள கீழ்நோக்கிய அம்புக்குறியை கிளிக் செய்தால் வரிசையாக பல அம்சங்களின் பட்டியல் வரும். அதில் உள்ள, பிளாக் செய்யவும் வசதியை தேர்வு செய்தால் இனி அந்த நபரின் இமெயில் உங்கள் இன்பாக்ஸுக்கு வராது. அதற்கு முன்னரே தடுக்கப்பட்டு ஸ்பேம் ஃபோல்டருக்குள் அனுப்பி வைக்கப்படும். விளம்பர மெயில் போன்ற தொல்லைகளில் இருந்து தப்பிக்க இந்த வசதி கைகொடுக்கும்.

இதற்கு முன்னரும் கூட ஜிமெயிலில் உள்ள வடிகட்டல் வசதியைப் பயன்படுத்தி வேண்டாத மெயில்களைத் தடுக்கலாம். ஆனால் இதை மிக எளிதாக செய்யக்கூடிய வகையில் புதிய அம்சம் அமைந்துள்ளது.

ஆனால் பழைய மெயில்களுக்கு இது பொருந்தாது. புதிதாக வரும் மெயில்களில் இந்த வசதியைத் தேர்வு செய்து இயக்கினால் மட்டுமே பிளாக் செய்வது சாத்தியம். இதே போல ஆண்ட்ராய்டுக்கான ஜிமெயில் செயலியில் இமெயில் சந்தாக்களில் இருந்து விலகிக்கொள்ளும் அம்சமும் அறிமுகமாயிருக்கிறது.

02 October 2015

மொபைல் நம்பர் இல்லாமல் வாட்ஸ் ஆப் பயன்படுத்துவது எப்படி..?

இன்று உலகளவில் பலரும் வாட்ஸ்ஆப் செயளியை பயன்படுத்தி வருகின்றனர். இதன் பயனாளிகள் அதிகமாகி வரும் நிலையில் அதற்கேற்ற விழிப்புணர்வும் அதிகம் தேவைப்படுகின்றது. இதை கருத்தில் கொண்டு வாட்ஸ்ஆப் பயன்படுத்த பல யோசனைகளை பற்றி நீங்கள் படித்திருப்பீர்கள்.

மொபைல் நம்பர் இல்லாமல் வாட்ஸ் ஆப் பயன்படுத்த முடியும் என்பது உங்களுக்கு தெரியுமா. சிம் கார்டு இல்லாமல் மொபைல் நம்பர் பயன்படுத்தாமல் வாட்ஸ்ஆப் பயன்படுத்த முடியும்.

மொபைல் நம்பர் இல்லாமல் வாட்ஸ் ஆப் பயன்படுத்துவதற்கு :

1. முதலில் வாட்ஸ்ஆப் செயளியை அன்இன்ஸ்டால் செய்து மீண்டும் இன்ஸ்டால் செய்யுங்கள்

2. சரிபார்க்கும் போது உங்களது மொபைல் நம்பரை பதிவு செய்ய கேட்கும்

3. இந்த சமயத்தில் உங்களது மொபைலை ப்ளைட் மோடில் வைத்துவிடுங்கள், இது உங்களது மொபைலில் இருந்து குருந்தகவல்கள் வெளியேறாமல் பார்த்து கொள்ளும்.

4. இதை மேற்கொள்ளும் முன் உங்களது ஆன்டிராய்டு கருவியில் ஸ்பூப் Spoof இன்ஸ்டால் செய்திருக்க வேண்டும்.

5. வாட்ஸ்ஆப் சரிபார்க்க இந்த முறை, வேறு முறையை பயன்படுத்த வேண்டும். ” Verification through SMS” சரிபார்த்து இம்முறை உங்களது மின்னஞ்சல் முகவரியை கொடுக்க வேண்டும்.

6. அடுத்து கொஞ்ச நேரம் கூட காத்திருக்காமல் கேன்சல் பட்டனை அழுத்த வேண்டும், க்ளிக் செய்தவுடன் முழு செயல்முறையும் நிறைவு பெற்றுவிடும்.

7. இப்பொழுது உங்களது போனில் ஸ்பூப் செயளியை ஓபன் செய்து கீழி கொடுக்கப்பட்டுள்ளவாறு டைப் செய்யுங்கள்

To: +447900347295

From: +தேசிய குறியீட்டு எண்(Country code), மொபைல் நம்பர்(mobile number) Message: உங்கள் மின்னஞ்சல் முகவரி(Your email address)

8. ஸ்பூப் ஆப் சரிபார்க்கும் பதிவு எண்களை பெற்றுவிடும், இதன் பின் எவ்வித மொபைல் நம்பரும் இல்லாமல் வாட்ஸ்ஆப் பயன்படுத்த முடியும்.

14 September 2015

எச்சரிக்கை பதிவு பேஸ்புக்கில் நடக்கும் ஏமாற்று வேலை உஷார்!

ஒரு சில பதிவுகள் நம்முடைய பேஸ்புக் பக்கத்தை தொடர்ந்து வலம் வந்து கொண்டிருக்கிறது.அதிலும் இந்த பதிவிற்கு "1 என கமெண்ட் செய்யுங்கள், என்ன நடக்கிறதென்று பாருங்கள்" என்று வாசகங்கள் தாங்கிய இணைப்புகளை அதிகம் பார்த்திருக்கிறீர்கள்.

நீங்களும் ஆர்வத்தில் லைக் மற்றும் கமெண்ட் பொத்தான்களை கிளிக் செய்வீர்கள். ஆனால் எதும் நடக்காது. பின்னர் தான் நீங்கள் இது ஏமாற்று வேலை என்று உணர்வீர்கள்.
பேஸ்புக்கில் நடக்கும் ஏமாற்று வேலை:

ஆனால் நீங்களும், உங்களைப் போன்றவர்களும் பலமுறை தவறாக கிளிக் செய்ததாலும், கமெண்ட் செய்ததாலும், அந்தப் பதிவு வைரலாகி இருக்கும்.

நீங்கள் லைக், கமெண்ட் செய்திருக்கிறீர்கள்கள் என்று உங்கள் நண்பர்களின் டைம்லைனிலும் தோன்றும் அவர்களும் இதை முயற்சி செய்து பார்ப்பார்கள்.

இது மட்டுமல்லாது மக்களின் உணர்ச்சிகளைத் தூண்டும் விதமான பதிவுகளும் உலா வருகிறது.

"என்னுடைய சகோதரிக்கு இதயத்தில் புற்றுநோய், எனது தோழிக்கு கேன்சர், உதவுங்கள்!" என்ற வாசகத்தோடும், மருத்துவமனையில் இருக்கும் ஒரு பெண்ணின் படமும் இருப்பது போன்றும் பதிவுகள் அடிக்கடி வரும்.

இதற்கான காரணங்கள் என்ன?

அதிகப்படியான லைக் மற்றும் கமெண்டுகளை மையமாக வைத்தே ஃபேஸ்புக்கின் நிரலாக்கம் அமைந்திருக்கிறது. இதனாலே ஃபேஸ்புக்கும் இது போன்ற பதிவுகளை பிரபலப்படுத்தும். இதனால் இத்தகைய பதிவுகள் அதிகரிக்கின்றன.



ஃபேஸ்புக்கில் ஒரு பக்கமோ, பதிவோ அதிகப்படியான லைக்குகள் பெற்றால் அதில் எவ்வித நிதி சம்பந்தமான பயனும் இல்லை. எனவே இது போன்ற ஏமாற்று வேலைகளை நம்பி இருக்க வேண்டாம்.

09 September 2015

வாட்ஸ் அப் பயன் படுத்துபவர்களின் தகவல் திருடு போக வாய்ப்பு

உலகில் அதிகளவானவர்களால் பயன்படுத்தப்பட்டுவரும் பிரபல குறுஞ்செய்தி சேவையான வாட்ஸ் அப் பாவனையாளர்களின் தகவல்கள் திருட்டுப் போகலாம் என எச்சரிக்கப்பட்டுள்ளது.இச் சேவையினை மொபைல் சாதனங்களின் ஊடாகவும், இணைய உலாவியின் ஊடாகவும் பயன்படுத்த முடியும் என்பது தெரிந்ததே.

இவற்றுள் இணையத்தினூடாக வாட்ஸ் அப் சேவையினைப் பெற்றுவரும் சுமார் 200 மில்லியன் வரையான பயனர்களே இவ்வாறு பாதிப்புக்கு உள்ளாகலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஹேக்கர்களால் பரவ விடப்பட்டுள்ள மல்வேரே இவ் அச்சுறுத்தலுக்கு காரணம் எனவும், இது மொபைல் அப்பிளிக்கேஷன்களை தாக்காது எனவும் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இவ் அச்சுறுத்தல் தொடர்பாக வாட்ஸ் அப் சேவை கடந்த மாதத்தின் இறுதி தினங்களில் எச்சரிப்புக்குள்ளாகியிருந்தது.

இதேவேளை குறித்த பாதிப்பிலிருந்து தப்பிக்கொள்வதற்கு ஏனையவர்களும் உடனடியாக தமது வாட்ஸ் அப் மென்பொருளினை அப்டேட் செய்யுமாறு வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது. 

10 August 2015

Internet யூஸ் பண்றீங்களா?கண்டிப்பா இதையும் செய்யுங்க

இன்டர்நெட் யூஸ் பண்ணாதவங்களே இப்போ இருக்க முடியாதுங்க... எந்த நேரத்திலும் சோசியல் நெட்வொர்க்கிங் சைட்ல இருந்துட்டே இருக்கிற நண்பர்கள் அதிகம். அதே மாதிரி ஜிமெயில் யூஸ் பன்றவங்க நிறைய பேர். கூகிள் தளம் பிரபலமானதுக்கு இந்த ஜிமெயில் சேவையும் ஒரு காரணம்...

16 July 2015

விண்டோஸ் சில புதிய குறிப்புகள்

விண்டோஸ் இயக்கத்துடன் தான் நம் பொழுது முழுவதும் செல்கிறது. இருப்பினும், விண்டோஸ் இயக்கத்தில் நாம் இன்னும் அறியாத பல விஷயங்கள் உள்ளன. இவை அவ்வப்போது நாம் பணியாற்றிக் கொண்டிருக்கையில் தெரியவருகின்றன. அவ்வாறு கண்டறிந்த பத்து செயல்பாடுகளை இங்கு காணலாம்.

12 July 2015

வாட்ஸ் அப் - உங்கள் செய்தி படிக்கப்பட்டதா?

அதிக எண்ணிக்கையில் மக்களால் பயன்படுத்தப்படும் இன்ஸ்டண்ட் மெசஞ்சராக வாட்ஸ் அப் தொடர்ந்து முதல் இடத்தைப் பிடித்துள்ளது அனைவரும் அறிந்ததே.

02 July 2015

கூகுள் ட்ரைவ் டிப்ஸ்

கூகுள் தரும் பல வசதிகளில், நமக்கு மிகச் சிறப்பாக உதவுவது அதன் தேடுதல், மெயில் ஆகியவற்றை அடுத்து பைல்களைச் சேமிக்க உதவும் கூகுள் ட்ரைவ் (Google Drive) ஆகும். இதன் மூலம், கூகுள் தரும் பல வசதிகளை ஒன்றிணைக்கலாம். சரியான டூல்களை செம்மைப் படுத்தி, செட்டிங்குகளை அமைத்தால், கூகுள் ட்ரைவ் வசதியை நமக்கு சில வேலைகளை மேற்கொண்டு செய்து தரும் வசதியாக மாற்றி விடலாம். அதற்கான டிப்ஸ்களை இங்கு பார்ப்போம்.

19 June 2015

வாட்ஸ் அப் ட்ரிக்ஸ்

வாட்ஸ் அப் செயலியை நீங்கள் தினமும் பயன்படுத்தினாலும் அவைகளில் உங்களுக்கு தெரிந்திராத சில அம்சங்களை தான் இங்கு தொகுத்திருக்கின்றோம்.வாட்ஸ் அப் செயலியில் உங்களுக்கு தெரிந்திராத சில அம்சங்களை பாருங்கள்..

23 April 2015

அறிந்து கொள்ள வேண்டிய பேஸ்புக் குறிப்புகள்

பேஸ்புக் பயன்படுத்தாதவர்கள் யாரும் இருக்க முடியாத என்ற நிலை உருவாகிவிட்டது. இன்று பேஸ்புக் எதுவும் சாத்தியமாகிவிட்டது என்றும் கூறலாம். அந்த வகையில் பேஸ்புக் பயன்படுத்தும் சிலர் பொழுதுபோக்கிற்காக மட்டும் பேஸ்புக் கனக்கு வைத்திருப்பார்கள். அந்த வகையில் நீங்களும் பேஸ்புக் கனக்கை பொழுபோக்கிற்காக பயன்படுத்தினால், அடுத்து வரும் சில குறப்புகளை கொண்டு பேஸ்புக்கில் பொழுதை கழிக்கலாம்.

21 February 2015

மடிக் கணினியை பாதுகாக்கும் வழிமுறைகள்

மடிக்கணினி பயன்படுத்துபவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டுள்ளது. பள்ளி மாணவர்கள், வியாபாரம் தொடர்பாக வெளிநாடு செல்பவர்கள் (Business mans), சாப்ட்வேர் இன்ஜினியர்கள், கல்லூரி மாணவர்கள், ஆசிரியர்கள், நிறுவனங்கள், பாமர மக்கள் என அனைத்து தரப்பினருமே லேப்டாப்பை பயன்படுத்திக் கொண்டுள்ளனர். 

09 February 2015

ட்விட்டர் மணி ஆர்டர்(பணம் அனுப்பும் வசதி )

சமீபத்தில் ஐ.சி.ஐ.சி.ஐ., வங்கி, தன் வாடிக்கையாளர்கள் குடும்பத்தினருக்கும் நண்பர்களுக்கும் பணம் அனுப்ப ஒரு எளிய விரைவான சேவையை அறிமுகப்படுத்தியிருக்கிறது. ஐ.சி.ஐ.சி.ஐ., பேங்க்பே (icicibankpay) என்ற இந்த சேவையைப் பயன்படுத்த அந்த வங்கியின் @icicibank என்ற ட்விட்டர் ஹேண்டிலை ஒருவர் தன் ஸ்மார்ட் போன் மூலம் பின்தொடர்ந்தால் போதும்.

16 January 2015

Windows Task Manager -இன் பயன்பாடுகள்

வழக்கமாக விண்டோஸ் கணினிகளில் Task Manager ஐ நாம் திறக்கும் போது 'Not Responding' என பிழைச் செய்தி வரும்பொழுது, 'End Task' செய்வதற்கு மட்டுமே அதிகமாக பயன்படுத்துகிறோம். அதன் இன்னும் சில அவசியமான பயன்பாடுகளை இங்கு பார்க்கலாம். 

15 January 2015

ஜூன் மாதம் முதல் வாட்ஸ் அப்-ல் வாய்ஸ் கால்

டெக்ஸ்ட் மெசேஜ்கள் பறிமாறிக்கொள்ள பயன்படும் ஒரு முன்னணி அப்ளிகேஷன் வாட்ஸ் அப். இதைப்போன்ற சேவையை வழங்கும் kakao talk, viber அப்ளிகேஷன்களை விட whatsapp செயலிதான் அதிக வாடிக்கையாளர்களைக் கொண்டுள்ளது. ஏறத்தாழ மாந்தோறும் 46 கோடி மக்கள் இதனைப் பயன்டுத்தி வருகின்றனர்.