அன்பை பகிர்வோம்,அன்பால் இணைவோம்

09 September 2015

வாட்ஸ் அப் பயன் படுத்துபவர்களின் தகவல் திருடு போக வாய்ப்பு

உலகில் அதிகளவானவர்களால் பயன்படுத்தப்பட்டுவரும் பிரபல குறுஞ்செய்தி சேவையான வாட்ஸ் அப் பாவனையாளர்களின் தகவல்கள் திருட்டுப் போகலாம் என எச்சரிக்கப்பட்டுள்ளது.இச் சேவையினை மொபைல் சாதனங்களின் ஊடாகவும், இணைய உலாவியின் ஊடாகவும் பயன்படுத்த முடியும் என்பது தெரிந்ததே.

இவற்றுள் இணையத்தினூடாக வாட்ஸ் அப் சேவையினைப் பெற்றுவரும் சுமார் 200 மில்லியன் வரையான பயனர்களே இவ்வாறு பாதிப்புக்கு உள்ளாகலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஹேக்கர்களால் பரவ விடப்பட்டுள்ள மல்வேரே இவ் அச்சுறுத்தலுக்கு காரணம் எனவும், இது மொபைல் அப்பிளிக்கேஷன்களை தாக்காது எனவும் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இவ் அச்சுறுத்தல் தொடர்பாக வாட்ஸ் அப் சேவை கடந்த மாதத்தின் இறுதி தினங்களில் எச்சரிப்புக்குள்ளாகியிருந்தது.

இதேவேளை குறித்த பாதிப்பிலிருந்து தப்பிக்கொள்வதற்கு ஏனையவர்களும் உடனடியாக தமது வாட்ஸ் அப் மென்பொருளினை அப்டேட் செய்யுமாறு வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது. 

No comments:

Post a Comment

நண்பனிடம் சொல்லுங்க,,,,,,,,,
பிடிச்சிருந்தாலும்....இல்லை என்றாலும் ;)