அன்பை பகிர்வோம்,அன்பால் இணைவோம்

Showing posts with label safety. Show all posts
Showing posts with label safety. Show all posts

02 April 2016

வாட்ஸ் அப்பில் சுய விவரங்களை பாதுகாக்க சில வழிகள்...!

இன்று வரை 700 மில்லியன் மக்கள் ஒரு மாதத்தில் 'வாட்ஸ் அப்' பயன்படுத்தி வருகின்றனர். அதில், ஒரு மாதத்தில் மட்டும் 30 பில்லியன் செய்திகள் பரிமாறப்பட்டுகிறது. இந்த 'வாட்ஸ் அப்'பில் தான் பல்லாயிரக்கணக்கான மக்கள் தங்களது சுய விவரங்களை பரிமாறிக் கொள்கின்றனர். இங்கு சாதாரணமாக பேசிக்கொள்வது மட்டுமின்றி புகைப்படம், வீடியோ, வங்கி கணக்கு விவரங்கள், தொடர்புகளும் தனிப்பட்ட வகையில் பரிமாறப்படுகின்றன.

இங்கு பிரைவசி இல்லாததால், சமூக வளைதளங்களில் உலவும் தீய எண்ணமுடையவர்கள் அதை தவறாக பயன்படுத்த முடியும். அதனால் ESET நிறுவனம், தங்களது சுய விவரங்கள் தவறாக பயன்படுத்தப்படாதவாறு பாதுகாக்க சில முக்கிய குறிப்புகளை அளித்துள்ளனர்.

1.) வாட்சப் லாக்:

வாட்ஸ் அப்-ஐ லாக் செய்வதில் முக்கியமான விஷயம் முதலில் ஒரு பாஸ்வேர்டு அல்லது 'பின்' பயன்படுத்துதலே சிறந்தது. வாட்ஸ் அப்பிற்கென பிரத்தியேகமாக எந்த ஒரு லாக்கும் இல்லை. இதற்கென ஆப் லாக்கை பதிவிறக்கம் செய்து பயன்படுத்தி கொள்ளலாம். இதனால், மூன்றாவது மனிதர்கள் பயன்படுத்துவதை தவிர்க்க முடியும். ஆனாலும், செல்போன் தொலைந்து போகும் பட்சத்தில் அதை தவறாக பயன்படுத்துவதற்கு அதிக வாய்ப்பு உள்ளது. எனவே 'சாட் லாக்', 'வாட்ஸ் அப் லாக்', 'செக்யூர்சாட்' இவை மூன்றும் ஆண்ட்ராய்டு போன்களில் எளிதாக பயன்படுத்தலாம். எனவே இவற்றை பயன்படுத்தி யாரும் உங்களது தகவல்களை திருடாமல் பார்த்துக் கொள்ளலாம்.

2.) வாட்சப் புகைப்படங்கள், போட்டோ ரோலில் சேர்வதை தடுக்க:

புகைப்படங்களை பரிமாறும்பொழுது, அவை பொதுவாக உங்கள் போட்டோ ரோலில் சேகரிக்கப்படுகிறது. அதனால் அவை திருடப்பட வாய்ப்புகள் அதிகம். இவற்றை ஐபோனில் எளிதில் தடுக்கலாம். போன் செட்டிங்கில் உள்ள மெனுவில் சென்று, பிரைவசியில் உள்ள புகைப்படத்தை 'டீசெலைக்ட்' செய்ய வேண்டும். இதனால் அவை போட்டோ ரோலில் சேர்வது எளிதில் தடுக்கப்படுகிறது.

ஆண்ட்ராய்டு பயனாளர்கள், இதனை 'பைல் எக்ஸ்ப்லோரர் ஆப்' மூலம் தடுக்கலாம். இதில், நோ மீடியா எனும் பைலை உருவாக்குவதின் மூலம் தடுக்கப்படுகிறது. வாட்ஸ் அப் இமேஜை லாக் செய்வது ஒரு சிறந்த வழிமுறையாக இருக்கலாம். ஆனால், போன்கள் திருடப்படும்போது 100% பாதுகாப்பைத் தரும் என கூற முடியாது.

3.) லாஸ்ட் சீனை மறைப்பது:

நீங்கள் கடைசியாக எப்போது ஆன்லைனில் இருந்தீர்கள் என மற்றவர்களுக்கு தெரியும். இது மற்றவர்கள் தவறாக பயன்படுத்த வழிவகை செய்யலாம். இந்த லாஸ்ட் சீன் மற்றவர்கள் அறியாதவாறு தடுக்க 'ஹைடு லாஸ்ட் சீனை' பயன்படுத்தலாம். ஆனால் இதை செய்தால் உங்கள் தொடர்புகளில் உள்ளவர்களின் லாஸ்ட் சீனையும் நீங்கள் தெரிந்துகொள்ள முடியாது.

4.) ப்ரொஃபைல் பிக்சரை தவறாக பயன்படுத்துவதை தடுக்க:

உங்கள் ப்ரொஃபைல் பிக்சரை நீங்கள் பயன்படுத்தும்போது அதை மற்றவர்கள் தவறாக பயன்படுத்த வாய்ப்பு அதிகம். அதோடு இந்த ப்ரொஃபைல் புகைப்படத்தை பயன்படுத்தி கூகுள் சர்ச் சில் உங்களது விவரங்களை பெற முடியும். அதனால், ப்ரைவசியில் உங்கள் புகைப்படத்தை தொடர்புகளில் மட்டும் பொருத்த வேண்டும்.

5.) போலி தகவல்களிடம் விழிப்போடு இருங்கள்:

வாட்ஸ் அப் எப்பொழுதும் நேரடியாக உங்களோடு தொடர்பு கொள்வதில்லை என்ற உண்மையை புரிந்து கொள்ளுங்கள். வாட்ஸ் அப் நேரடியாக உரையாடல்கள், ஆடியோ தகவல்கள், புகைப்படங்கள், மாற்றங்கள், வீடியோக்கள் எப்பொழுதும் மின்னஞ்சல் உதவியில்லாமல் உங்களுக்கு அனுப்பாது. குறிப்பிட்ட இலவச நன்கொடைகள் பற்றிய தகவல்கள் வந்தால் நிச்சியம் அது போலியாக தான் இருக்கும். இவை நம்பத்தகுந்தது அல்ல.

6.) தொலைபேசி தொலைந்தால் வாட்ஸ் அப்பை செயலிழக்கச் செய்யுங்கள்:

செல்போன் தொலைந்தால், வாட்ஸ் அப் தனது பயனாளர்களுக்கு எளிய மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதிகளை வழங்குகிறது. சிம் கார்டை லாக் செய்வது பற்றிய வசதிகளை அளிக்கறது. தொலைபேசி தொலைந்து போனால் உடனே அதே எண்ணில் மற்றொரு தொலைபேசியில் வாட்ஸ் அப் அக்கவுண்ட்டை திறந்தால் தானாகவே தொலைந்த வாட்சப் அக்கவுண்ட் செயலிழக்கப்படும். இதன் மூலம் வாட்ஸ் அப் அக்கவுண்ட் தானாகவே செயலிழக்கப்படும்.

7.) எதைப்பற்றி பேசுகிறோம் என்பதில் தெளிவாக இருங்கள்:

இது கடைசி, இதுவே முடிவல்ல என்பதை உணர்ந்து செயல்படுங்கள். சுய தகவல்களை எப்பொழுதும் பகிர்வதை தவிர்த்திடுங்கள். முகவரி, தொலைபேசி எண், வங்கி விவரம், கிரெடிட் கார்டு விவரம், பாஸ்வேர்டுகளை வாட்ஸ் அப்பில் பகிராதீர்கள்.

8.)வாட்ஸ் அப்பை 'லாக் அவுட்' செய்ய மறக்காதீர்கள்:

வாட்ஸ் அப் தற்போது நிறைய சேவையை வழங்கி வருகிறது. பல பயனாளர்களுக்கு வாட்சப் லாக் அவுட் செய்வது பற்றிய விவரம் தெரிவதில்லை. இதை தொலைபேசி மூலமோ பிரௌசர் மூலமோ செய்யலாம்.

உஷாராக இருங்கள்!

07 February 2016

வாட்ஸ்ஆப் பயன்பாட்டாளர்களே உஷார்...

வாட்ஸ்ஆப் மூலம் தனி நபர் பற்றிய வங்கிக் கணக்கு எண், இமெயில் முகவரி போன்ற தனிப்பட்ட விபரங்களை சேகரித்து, அதனை பயன்படுத்தி மோசடி செய்வது தெரிய வந்துள்ளது.இது குறித்த எச்சரிக்கையை தகவல் தொடர்பு துறை வெளியிட்டுள்ளது. அதில் கூறப்பட்டுள்ளதாவது:

உங்கள் நண்பரின் வாட்ஸ்ஆப் எண்ணில் இருந்து வருவது போன்று உங்களுக்கு ஒரு "லின்க் (link)" அனுப்பப்படும். அதனுள் சென்றால், உங்களுக்கு அந்த சலுகை தரப்படும், இந்த சலுகை கிடைக்கும் என ஆசை காட்டி, உங்களைப் பற்றிய தனிப்பட்ட தகவல்கள் கேட்பார்கள்.

போலி இணையதளங்களை பயன்படுத்தி, உங்கள் போனில் மார்வேர் மென்பொருள் மூலம் ஊடுருவி, உங்களைப் பற்றிய தகவல்களை வைத்து மோசடி செய்வார்கள். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.



சமீப காலமாக வாட்ஸ்ஆப் பயன்படுத்துவோரின் எண்ணிக்கை வெகுவாக அதிகரித்து வருகிறது. குறிப்பாக ஐரோப்பிய நாடுகள் மற்றும் இந்தியாவில் வாட்ஸ்ஆப் பயன்படுத்துவோர் அதிகம். உலகம் முழுவதிலும் சுமார் பல நுாறு கோடி பேர் வாட்ஸ்ஆப்., பயன்படுத்துகிறார்கள். அதிகரித்து வரும் வாட்ஸ்ஆப் பயன்பாட்டாளர்களை குறிவைத்தே இந்த மோசடி நடத்தப்படுவதாக கூறப்படுகிறது.

சில சமயம், பல்வேறு மொழிகளில் வாடிக்கையாளர்களிடம் பேசியும் அவர்களை கவர்ந்து, அவர்களைப் பற்றிய தகவல்கள் பெறப்படுகின்றனவாம். அல்லது, ஏதாவது ஒரு தகவலை அனுப்பி, அதனை 10 நபர்களுக்கு அனுப்பினால் உங்களுக்கு ஒரு குறிப்பிட்ட தொகை அல்லது சலுகை கிடைக்கும் எனவும் பயன்பாட்டாளர்களை சூழ்ச்சி வலையில் சிக்கி வைக்கிறார்களாம்.


தற்போது மொபைல் போன்கள் மூலம் வங்கி கணக்கு அப்ளிகேஷன்களை இயக்கும் வசதி வந்து விட்டதால், வாட்ஸ்ஆப் மோசடி நபர்கள் எளிதில் உங்கள் மொபைல் போனிற்குள் ஊடுரு, உங்கள் வங்கி கணக்கில் மோசடி செய்யும் வாய்ப்பு அதிகம் என பாதுகாப்பு துறை நிபுணர்கள் எச்சரித்துள்ளனர்.நன்றி தினமலர்.

30 December 2015

Facebook Privacy Settings பகுதியில் நீங்கள் செய்ய வேண்டியவை

இன்று இணையத்தில் கிட்டத்தட்ட அனைவரும் பேஸ்புக் பயன்படுத்துகிறார்கள். நம்முடைய தகவல்களை எல்லாம் பேஸ்புக்கிடம் நாம் தருகிறோம். அத்தகைய பேஸ்புக் பாதுகாப்பானதா? என்னென்ன செய்தால் பாதுகாப்பாக இருக்கலாம்? இதைத் தான் இன்றைய பதிவில் காணப் போகிறோம்.
இவை அனைத்தும் Facebook Privacy Settings பகுதியில் இருப்பவை. எனவே Home >> Privacy Settings பகுதிக்கு வரவும்.
உங்கள் பதிவுகளை யாருடன் பகிர்கிறீர்கள்? (Control Your Default Privacy)
தினமும் பேஸ்புக் பயன்படுத்தும் நபர்கள் மிக முக்கியமாக கவனிக்க வேண்டிய விஷயம் இது. பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்று நினைப்பவர்கள் உங்கள் பதிவுகளை Friends என்ற அளவில் பகிர வேண்டும். செய்திகளை, படங்களை பகிரும் போது ஒரு குறிப்பிட்ட வட்டத்தில் மட்டும் பகிர Post என்பதற்கு அருகில் Public என்று இருப்பதை கவனித்து அதை மாற்றி போஸ்ட் செய்யலாம்.
இதை எல்லா பதிவுகளுக்கும் செய்ய Privacy Settings >> Control Your Default Privacy பகுதியில்  Friends என்பதை தெரிவு செய்ய வேண்டும். இங்கே செய்யும் மாற்றங்கள் நீங்கள் பதிவிடும் போதும் அப்படியே இருக்கும்.
குறிப்பிட்ட நண்பர்களுடன் மட்டும் பகிர Custom என்பதை தெரிவு செய்யலாம்.
யார் உங்களை பார்க்கிறார்கள்? (How You Connect)
உங்கள் நண்பர்கள் உங்கள் Timeline க்கு வரும் போது நீங்கள் எழுதிய செய்திகள், படங்கள், உங்களைப் பற்றிய தகவல்கள் (மின்னஞ்சல் முகவரி, முகவரி, மற்ற பல) அனைத்தையும் அறிய முடியும். இதையே உங்கள் நண்பர் அல்லாத ஒருவர் வந்தும் பார்க்க முடியும். அதை தவிர்த்து உங்களைப் பற்றிய தகவல்களை உங்கள் நண்பர்களுடன் மட்டுமே நீங்கள் பகிர வேண்டும்.
இதற்கு Privacy Settings பகுதியில் How You Connect என்பதில் Edit Settings கொடுத்து கீழே உள்ள மாற்றங்கள் செய்யவும்.
இதில் அலைபேசி மற்றும் மின்னஞ்சல் முகவரிக்கு மட்டும் நான் Friends என்று கொடுத்து உள்ளேன். மற்ற இரண்டும் நீங்கள் உங்கள் விருப்பப்படி செய்யலாம்.
Photo Tagging மற்றும் Timeline – இல் பகிர்தல்
இது எல்லோருக்கும் பெரிய பிரச்சினை. கண்டபடி நம்மை பல போட்டோக்களில் Tag செய்வது, நமக்கு சம்பந்தம் இல்லாத செய்திகளை நம் Wall- இல் பகிர்வது என்பதையே சிலர் பேஸ்புக்கில் தொழிலாய் கொண்டுள்ளனர் அவர்களிடம் இருந்து இந்த பிரச்சினையை வரும் முன் தடுக்கும் விதமாக சில Settings Change செய்யலாம். கீழே படத்தில் உள்ளபடி Timeline and Tagging பகுதியில் செய்யவும்.
Apps, Games and Websites settings : 
1. Photo Tag க்கு அடுத்து மிகப் பெரிய பிரச்சினை இது தான். வரிசையாக இவர் இந்த Game விளையாட அழைக்கிறார், அவர் அந்த Application பயன்படுத்த அழைக்கிறார் என்பவை நமக்கு எரிச்சலை தரும். இவற்றை தடுக்க.
2. உங்கள் பெயரை Search Engine-களில் யாரேனும் தேடினால் உங்கள் Timeline அவர்களுக்கு தோன்றும்.(Prabu Krishna on Facebook என்று தேடினால் நான் வருவேன்). இவ்வாறு வரக்கூடாது என்று நினைத்தால் Public search >> Edit Settings என்பதில் Enable public search என்பதை Unclick செய்து விடவும்.
3. பேஸ்புக் நமது தகவல்களை எந்த ஒரு Third Party தளத்துக்கும் விளம்பரத்துக்காக தரவில்லை என்று சொல்லுகிறது. ஆனால் இது எதிர்காலத்தில் நடந்தால் என்ன செய்ய வேண்டும் என்று உங்களிடம் கேட்கிறது. இவ்வாறு உங்கள் பெயர் பயன்படுத்தப்படுவதை தவிர்க்க Ads >> Edit setting >> Edit third party ad settings என்பதில் If we allow this in the future, show my information to என்பதில் No One என்று கொடுத்து விடுங்கள்.
4. பேஸ்புக்கில் இருக்கும் போது Sidebar – இல் உங்கள் நண்பர் அதை லைக் செய்துள்ளார், இதை லைக் செய்துள்ளார் என்று இருக்கும். இவை Facebook ads இவற்றில் உங்கள் பெயர் வருவதை தடுக்க Ads and friends >> Edit social ads setting பகுதியில் Pair my social actions with ads for  என்பதை No One என்று கொடுத்து விடுங்கள்.THANKS.KARPOM.COM

08 October 2015

USB சாதனங்களைப் பாதுகாக்கு​ம் நவீன மென்பொருள்

கணிணியின் துணைச் சாதனங்களின் பயன்பாட்டில் இன்று USB சாதனங்களே பெரும் பங்கு வகிக்கின்றன.

இவ்வாறு USB மூலம் பிரத்தியேகமாக இணைக்கப்படும் சாதனங்களை கணிணியின் செயற்பாடு நிறுத்தப்படும் வேளை உரிய முறையில் கையாள வேண்டும்.

அதாவது முதலில் குறிப்பிட்ட USB சாதனங்களை கணிணியின் இணைப்பிலிருந்து துண்டிக்கப்பட்ட பின்னரே கணிணியினை நிறுத்த வேண்டும் அவ்வாறில்லாவிடின் கணிணிக்கும், துணைச் சாதனங்களுக்கும் சேதங்களை ஏற்படுத்தலாம்.
Protect USB
எனவே இவ்வாறு தவறுதலாகவேனும் USB சாதனங்களின் இணைப்பினை துண்டிக்காது கணிணியை நிறுத்தும் போது, எச்சரிக்கை விடுப்பதற்கு USB Guard எனும் மென்பொருள் பயன்படுகின்றது.

இது கணிணியை USB சாதனங்களை துண்டிக்காது கணிணியை நிறுத்தும் போது குறித்த செயற்பாட்டினை தடுக்கின்றது. மேலும் இம்மென்பொருள் இலவசமாகக் கிடைக்கின்றது.

14 September 2015

எச்சரிக்கை பதிவு பேஸ்புக்கில் நடக்கும் ஏமாற்று வேலை உஷார்!

ஒரு சில பதிவுகள் நம்முடைய பேஸ்புக் பக்கத்தை தொடர்ந்து வலம் வந்து கொண்டிருக்கிறது.அதிலும் இந்த பதிவிற்கு "1 என கமெண்ட் செய்யுங்கள், என்ன நடக்கிறதென்று பாருங்கள்" என்று வாசகங்கள் தாங்கிய இணைப்புகளை அதிகம் பார்த்திருக்கிறீர்கள்.

நீங்களும் ஆர்வத்தில் லைக் மற்றும் கமெண்ட் பொத்தான்களை கிளிக் செய்வீர்கள். ஆனால் எதும் நடக்காது. பின்னர் தான் நீங்கள் இது ஏமாற்று வேலை என்று உணர்வீர்கள்.
பேஸ்புக்கில் நடக்கும் ஏமாற்று வேலை:

ஆனால் நீங்களும், உங்களைப் போன்றவர்களும் பலமுறை தவறாக கிளிக் செய்ததாலும், கமெண்ட் செய்ததாலும், அந்தப் பதிவு வைரலாகி இருக்கும்.

நீங்கள் லைக், கமெண்ட் செய்திருக்கிறீர்கள்கள் என்று உங்கள் நண்பர்களின் டைம்லைனிலும் தோன்றும் அவர்களும் இதை முயற்சி செய்து பார்ப்பார்கள்.

இது மட்டுமல்லாது மக்களின் உணர்ச்சிகளைத் தூண்டும் விதமான பதிவுகளும் உலா வருகிறது.

"என்னுடைய சகோதரிக்கு இதயத்தில் புற்றுநோய், எனது தோழிக்கு கேன்சர், உதவுங்கள்!" என்ற வாசகத்தோடும், மருத்துவமனையில் இருக்கும் ஒரு பெண்ணின் படமும் இருப்பது போன்றும் பதிவுகள் அடிக்கடி வரும்.

இதற்கான காரணங்கள் என்ன?

அதிகப்படியான லைக் மற்றும் கமெண்டுகளை மையமாக வைத்தே ஃபேஸ்புக்கின் நிரலாக்கம் அமைந்திருக்கிறது. இதனாலே ஃபேஸ்புக்கும் இது போன்ற பதிவுகளை பிரபலப்படுத்தும். இதனால் இத்தகைய பதிவுகள் அதிகரிக்கின்றன.



ஃபேஸ்புக்கில் ஒரு பக்கமோ, பதிவோ அதிகப்படியான லைக்குகள் பெற்றால் அதில் எவ்வித நிதி சம்பந்தமான பயனும் இல்லை. எனவே இது போன்ற ஏமாற்று வேலைகளை நம்பி இருக்க வேண்டாம்.