அன்பை பகிர்வோம்,அன்பால் இணைவோம்

Showing posts with label INTERNET. Show all posts
Showing posts with label INTERNET. Show all posts

08 September 2016

இணையதள சேவையில் பி.எஸ்.என்.எல். புதிய திட்டம் அறிமுகம் நாளை முதல் செயல்பாட்டுக்கு வருகிறது

பி.எஸ்.என்.எல். நிறுவனம் புதிய வாடிக்கையாளர்களை கவரும் வகையில் நாளை (வெள்ளிக்கிழமை) கம்பியில்லா அகன்ற அலைவரிசை (பிராட்பேண்ட்) இணையதள வசதியை சலுகை கட்டணத்தில் ‘எக்ஸ்பீரியன்ஸ் அன்லிமிடெட் பிபி 249’ என்ற திட்டத்தை அறிமுகப்படுத்துகிறது. மாதம் 300 ஜி.பி. வரை பதிவிறக்கம் செய்ய ரூ.249 கட்டணம் மட்டுமே வசூலிக்கப்படுகிறது.

அதாவது 1 ஜி.பி.க்கு ஒரு ரூபாய்க்கும் குறைவான கட்டணமே வாடிக்கையாளர்களிடம் பெறப்படுகிறது. இதுகுறித்து கூடுதல் தகவல்களை பெற வாடிக்கையாளர்கள் அருகில் உள்ள பி.எஸ்.என்.எல். வாடிக்கையாளர்கள் சேவை மையத்தை அணுகலாம். அல்லது இலவச அழைப்பான 1800 345 1500 என்ற எண்ணிலும்,www.bsnl.co.in என்ற இணையதள முகவரியிலும் தெரிந்து கொள்ளலாம்.

01 April 2016

இணைய உலாவியில் புத்தம் புதிய வசதி

கூகுளின் குரோம் இணைய உலாவி மற்றும் மொஸிலாவின் பயர்பாக்ஸ் உலாவி என்பவற்றிற்கு போட்டியாக காணப்பட்ட இன்டர்நெட் எக்ஸ்புளோரர் எனும் உலாவியினை இன்று அதிகளவானவர்கள் மறந்திருப்பார்கள்.காரணம் மைக்ரோசொப்ட் நிறுவனம் விண்டோஸ் 10 இயங்குதளத்தில் இன்டர்நெட் எக்ஸ்புளோரர் உலாவிக்கு விடைகொடுத்து எட்ஜ் எனும் புதிய உலாவியினை அறிமுகம் செய்திருந்தது.

இதனால் இன்டர்நெட் எக்ஸ்புளோரரின் பாவனை வெகுவாக குறைந்துள்ளது.இதற்கிடையில் தனது புதிய எட்ஜ் உலாவியில் பயனர்களுக்கு நன்மை பயக்கக்கூடிய வகையில் விளம்பரங்களை தடை செய்யும் வசதியினை தற்போது மைக்ரோசொப்ட் நிறுவனம் அறிமுகம் செய்யவுள்ளது.

இவ் வசதியானது நேரடியாகவும், நீட்சிகளைப் பயன்படுத்துவதன் ஊடாகவும் ஏனைய உலாவிகளில் கிடைக்கின்றமை சுட்டிக்காட்டத்தக்கது.

10 August 2015

Internet யூஸ் பண்றீங்களா?கண்டிப்பா இதையும் செய்யுங்க

இன்டர்நெட் யூஸ் பண்ணாதவங்களே இப்போ இருக்க முடியாதுங்க... எந்த நேரத்திலும் சோசியல் நெட்வொர்க்கிங் சைட்ல இருந்துட்டே இருக்கிற நண்பர்கள் அதிகம். அதே மாதிரி ஜிமெயில் யூஸ் பன்றவங்க நிறைய பேர். கூகிள் தளம் பிரபலமானதுக்கு இந்த ஜிமெயில் சேவையும் ஒரு காரணம்...

25 July 2015

இணைய பயன்பாட்டின் சில இன்ட்ரஸ்டிங்கான ட்ரிக்ஸ்!

இந்த காலத்துல சாப்பாடு தண்ணி இல்லாமகூட வாழ்ந்துட்டு போகலாம். ஆனா, இண்டர்நெட், கூகுள் இல்லாத ஒரு வாழ்க்கையை நெனச்சுக்கூட பார்க்க முடியாது. அந்த வகையில இண்டர்நெட்டை உபயோகிப்பதில் இருக்கும் சில இன்ட்ரஸ்டிங்கான ட்ரிக்ஸ்களை பார்த்து, ட்ரை செய்து என்ஜாய் பண்ணுங்களேன்...

1. கண்ட்ரோல் + ஷிஃப்ட் + T யை அழுத்தினால் கடைசியாக நீங்கள் க்ளோஸ் செய்த டேப் ஓபன் ஆகும். நீங்கள் மேக் சிஸ்டம் யூஸ் செய்யும் பட்சத்தில், கமெண்ட் + ஷிஃப்ட் + T யை அழுத்தவும். இது க்ரோம் மற்றும் ஃபயர் ஃபாக்ஸ்சில் மட்டும் செயல்படும்.

2. 'S' பட்டனை அழுத்திக்கொண்டே, உங்களுக்கு விருப்பமான புகைப் படத்தின் மீது, உதாரணத்திற்கு 'S' பட்டனை அழுத்திக்கொண்டே ஒரு குழந்தை படத்தின் மேல் கர்சரை வைத்து, மவுஸின் வலது பக்க பட்டனை அழுத்தினால், உடனடியாக பலதரப்பட்ட குழந்தைகளின் படங்கள் வரிசைகட்டி நிற்கும்.

அல்லது விரும்பிய படத்தின் மீது கரர்ஸரை வைத்து அப்படியே அந்த படத்தை நகர்த்தி சர்ச் டேப்பில் இழுத்துப் போட்டால் அதே போன்ற படங்கள் வந்து நிற்கும்.

3. daskeyboard.com எனும் வலைத்தளத்துக்கு போய், ஹோம் பேஜின் அடியில் இருக்கும் கனெக்ட் கேட்டகிரியில் destroy this site என்பதை க்ளிக் செய்து அந்த வளைத்தளத்தை சுட்டு பொசுக்கலாம்.

4. google in 1998 என சர்ச் பாரில் டைப் செய்தால், காலச் சக்கரத்தில் பின்னோக்கி போனதுபோல, ரெட்ரோ டைப் கூகுள் சர்ச் ஓபன் ஆகும்.

5. data:text/html,%20<html%20contenteditable><Title>Notepad</Title> என்ற லிங்க்கை க்ளிக் செய்தால் பிரவுஸரையே நோட் பேடாக யூஸ் செய்ய முடியும்.

6. இதே விஷயத்தை இரவு நேரத்தில் அல்லது வெளிச்சம் இல்லாத சமயத்துல பண்ணனும்னா இந்த லிங்க்கை க்ளிக் செய்யவும்.

data:text/html;charset=utf-8,%20<title>Notepad%20(Nightmode)</title><body%20contenteditable%20style="font-family:%20DejaVu;font-weight:bold;background:#1E1E1E;color:#FFFFFF;font-size:1rem;line-height:1.4;max-width:80rem;margin:0%20auto;padding:2rem;"%20spellcheck="false">


7. “do a barrel roll” என கூகுள் சர்ச் பாரில் டைப் செய்து நடக்கும் மேஜிக்கை பாருங்கள்.

8. “Atari Breakout” என கூகுள் இமேஜ் பாரில் டைப் செய்து, கிளாசிக் விளயாட்டை விளையாடி மலரும் நினைவுகளில் மூழ்கலாம்.

9. யு ஆர் எல் பாரில் எந்த ஒரு வார்த்தையும் டைப் செய்து கூடவே கன்ட்ரோல் + எண்டர் பட்டனை அழுத்தினால் அந்த வார்த்தைக்கு பொருத்தமான வலைத் தளங்கள் வரிசை கட்டும். அதாவது டாட் காம் என டைப் செய்ய வேண்டிய அவசியமில்லை.

10. ஒரு லிங்க்கை புது டேபில் ஓபன் செய்ய, கண்ட்ரோல் கீயை பிரஸ் செய்துகொண்டே அந்த லிங்கை க்ளிக் செய்தால் அது புது டேபில் ஓபன் ஆகும்.

மேக் சிஸ்டம் யூஸ் செய்பவர்கள் ஆப்பிள் அல்லது கமெண்ட் கீயை பிரஸ் செய்து லிங்க்கை க்ளிக் செய்தால் புதுடேபில் ஓபன் ஆகும்.

நன்றி இந்துலேகா. சி

19 July 2015

கூகுள் குரோமை விட 112% அதிக வேகம் கொண்ட மைக்ரோசாப்ட் 'எட்ஜ்' பிரவுசர்

தற்போது இணையதளங்களில் உலவுவதற்கு வசதியாக இருக்கும் பிரவுசர்களில் கூகுள் குரோம் பிரவுசரே உலகெங்கிலும் பாப்புலராக இருந்து வருகிறது. வரும் 29-ந்தேதி புதிதாக வெளிவர உள்ள மைகரோசாப்டின் விண்டோஸ் 10 இயங்குதளத்தில் அதிவேக பிரவுசர் ஒன்று புதிதாக இணைக்கப்படுகிறது. அதற்கு 'எட்ஜ்' என பெயரிடப்பட்டுள்ளது.