அன்பை பகிர்வோம்,அன்பால் இணைவோம்

Showing posts with label browser. Show all posts
Showing posts with label browser. Show all posts

01 April 2016

இணைய உலாவியில் புத்தம் புதிய வசதி

கூகுளின் குரோம் இணைய உலாவி மற்றும் மொஸிலாவின் பயர்பாக்ஸ் உலாவி என்பவற்றிற்கு போட்டியாக காணப்பட்ட இன்டர்நெட் எக்ஸ்புளோரர் எனும் உலாவியினை இன்று அதிகளவானவர்கள் மறந்திருப்பார்கள்.காரணம் மைக்ரோசொப்ட் நிறுவனம் விண்டோஸ் 10 இயங்குதளத்தில் இன்டர்நெட் எக்ஸ்புளோரர் உலாவிக்கு விடைகொடுத்து எட்ஜ் எனும் புதிய உலாவியினை அறிமுகம் செய்திருந்தது.

இதனால் இன்டர்நெட் எக்ஸ்புளோரரின் பாவனை வெகுவாக குறைந்துள்ளது.இதற்கிடையில் தனது புதிய எட்ஜ் உலாவியில் பயனர்களுக்கு நன்மை பயக்கக்கூடிய வகையில் விளம்பரங்களை தடை செய்யும் வசதியினை தற்போது மைக்ரோசொப்ட் நிறுவனம் அறிமுகம் செய்யவுள்ளது.

இவ் வசதியானது நேரடியாகவும், நீட்சிகளைப் பயன்படுத்துவதன் ஊடாகவும் ஏனைய உலாவிகளில் கிடைக்கின்றமை சுட்டிக்காட்டத்தக்கது.

17 March 2016

Mozilla அறிமுகம் செய்யும் அதிவேகமான இணைய உலாவி

மோசில்லா நிறுவனம் பயனாளர்களுக்கு உதவிடும் வகையில் அதி வேகமாக செயற்படக்கூடிய இணைய உலாவியினை அறிமுகம் செய்யவுள்ளது.உலகின் முன்னணி இணைய உலாவிகளில் ஒன்றான Firefox உலாவியினை அறிமுகம் செய்த மோசில்லா (Mozilla) நிறுவனம் தற்போது Mozilla Servo எனும் அதி வேகமாக செயற்படக்கூடிய மற்றொரு இணைய உலாவியினை அறிமுகம் செய்யவுள்ளது.

இந்த புதிய உலாவியினை சம்சுங் நிறுவனத்துடன் இணைந்து மோசில்லா நிறுவனம் உருவாக்கி வருகிறது.

Rust எனப்படும் புதிய கணினி மொழியினைப் பயன்படுத்தி வடிவமைக்கப்பட்ட இந்த உலாவியானது எதிர்வரும் ஜுன் மாதம் பரிசோதனை ரீதியாக அறிமுகம் செய்யப்படவுள்ளது.

இவ் இணைய உலாவியானது 64bit Linux, 64bit OSX, Android, மற்றும் Gonk (Firefox OS) ஆகிய இயங்குதளங்களில் செயற்படக்கூடியதாக இருக்கும் எனவும், இது பயனர்களுக்கு இணைய தேடலில் புதிய அனுபவத்தினை வழங்கும் எனவும் மோசில்லா நிறுவனம் தெரிவித்துள்ளது.

25 July 2015

இணைய பயன்பாட்டின் சில இன்ட்ரஸ்டிங்கான ட்ரிக்ஸ்!

இந்த காலத்துல சாப்பாடு தண்ணி இல்லாமகூட வாழ்ந்துட்டு போகலாம். ஆனா, இண்டர்நெட், கூகுள் இல்லாத ஒரு வாழ்க்கையை நெனச்சுக்கூட பார்க்க முடியாது. அந்த வகையில இண்டர்நெட்டை உபயோகிப்பதில் இருக்கும் சில இன்ட்ரஸ்டிங்கான ட்ரிக்ஸ்களை பார்த்து, ட்ரை செய்து என்ஜாய் பண்ணுங்களேன்...

1. கண்ட்ரோல் + ஷிஃப்ட் + T யை அழுத்தினால் கடைசியாக நீங்கள் க்ளோஸ் செய்த டேப் ஓபன் ஆகும். நீங்கள் மேக் சிஸ்டம் யூஸ் செய்யும் பட்சத்தில், கமெண்ட் + ஷிஃப்ட் + T யை அழுத்தவும். இது க்ரோம் மற்றும் ஃபயர் ஃபாக்ஸ்சில் மட்டும் செயல்படும்.

2. 'S' பட்டனை அழுத்திக்கொண்டே, உங்களுக்கு விருப்பமான புகைப் படத்தின் மீது, உதாரணத்திற்கு 'S' பட்டனை அழுத்திக்கொண்டே ஒரு குழந்தை படத்தின் மேல் கர்சரை வைத்து, மவுஸின் வலது பக்க பட்டனை அழுத்தினால், உடனடியாக பலதரப்பட்ட குழந்தைகளின் படங்கள் வரிசைகட்டி நிற்கும்.

அல்லது விரும்பிய படத்தின் மீது கரர்ஸரை வைத்து அப்படியே அந்த படத்தை நகர்த்தி சர்ச் டேப்பில் இழுத்துப் போட்டால் அதே போன்ற படங்கள் வந்து நிற்கும்.

3. daskeyboard.com எனும் வலைத்தளத்துக்கு போய், ஹோம் பேஜின் அடியில் இருக்கும் கனெக்ட் கேட்டகிரியில் destroy this site என்பதை க்ளிக் செய்து அந்த வளைத்தளத்தை சுட்டு பொசுக்கலாம்.

4. google in 1998 என சர்ச் பாரில் டைப் செய்தால், காலச் சக்கரத்தில் பின்னோக்கி போனதுபோல, ரெட்ரோ டைப் கூகுள் சர்ச் ஓபன் ஆகும்.

5. data:text/html,%20<html%20contenteditable><Title>Notepad</Title> என்ற லிங்க்கை க்ளிக் செய்தால் பிரவுஸரையே நோட் பேடாக யூஸ் செய்ய முடியும்.

6. இதே விஷயத்தை இரவு நேரத்தில் அல்லது வெளிச்சம் இல்லாத சமயத்துல பண்ணனும்னா இந்த லிங்க்கை க்ளிக் செய்யவும்.

data:text/html;charset=utf-8,%20<title>Notepad%20(Nightmode)</title><body%20contenteditable%20style="font-family:%20DejaVu;font-weight:bold;background:#1E1E1E;color:#FFFFFF;font-size:1rem;line-height:1.4;max-width:80rem;margin:0%20auto;padding:2rem;"%20spellcheck="false">


7. “do a barrel roll” என கூகுள் சர்ச் பாரில் டைப் செய்து நடக்கும் மேஜிக்கை பாருங்கள்.

8. “Atari Breakout” என கூகுள் இமேஜ் பாரில் டைப் செய்து, கிளாசிக் விளயாட்டை விளையாடி மலரும் நினைவுகளில் மூழ்கலாம்.

9. யு ஆர் எல் பாரில் எந்த ஒரு வார்த்தையும் டைப் செய்து கூடவே கன்ட்ரோல் + எண்டர் பட்டனை அழுத்தினால் அந்த வார்த்தைக்கு பொருத்தமான வலைத் தளங்கள் வரிசை கட்டும். அதாவது டாட் காம் என டைப் செய்ய வேண்டிய அவசியமில்லை.

10. ஒரு லிங்க்கை புது டேபில் ஓபன் செய்ய, கண்ட்ரோல் கீயை பிரஸ் செய்துகொண்டே அந்த லிங்கை க்ளிக் செய்தால் அது புது டேபில் ஓபன் ஆகும்.

மேக் சிஸ்டம் யூஸ் செய்பவர்கள் ஆப்பிள் அல்லது கமெண்ட் கீயை பிரஸ் செய்து லிங்க்கை க்ளிக் செய்தால் புதுடேபில் ஓபன் ஆகும்.

நன்றி இந்துலேகா. சி

19 July 2015

கூகுள் குரோமை விட 112% அதிக வேகம் கொண்ட மைக்ரோசாப்ட் 'எட்ஜ்' பிரவுசர்

தற்போது இணையதளங்களில் உலவுவதற்கு வசதியாக இருக்கும் பிரவுசர்களில் கூகுள் குரோம் பிரவுசரே உலகெங்கிலும் பாப்புலராக இருந்து வருகிறது. வரும் 29-ந்தேதி புதிதாக வெளிவர உள்ள மைகரோசாப்டின் விண்டோஸ் 10 இயங்குதளத்தில் அதிவேக பிரவுசர் ஒன்று புதிதாக இணைக்கப்படுகிறது. அதற்கு 'எட்ஜ்' என பெயரிடப்பட்டுள்ளது. 

12 May 2015

குரோம் பிரௌசரில் "Do Search" வைரஸ் நீக்குவது எப்படி?

முதலில் Do Searches என்றால் என்பதைத் தெரிந்துகொள்வோம். நீங்கள் ஏதாவது ஒரு இலவச மென்பொருளைத் தரவிறக்கும்பொழுது, அதனுடன் கூடவே இலவசமாக ஒட்டிக்கொண்டு தரவிறங்கும் ஒரு பிரௌசர் கடத்தி இது. 

12 January 2015

INTERNET EXPLORER - இன் தோற்றத்தை உங்கள் விருப்பத்திற்கு மாற்றுங்கள்

Microsoft நிறுவனத்தின் internet explorer ய் உங்கள் விருப்பத்திற்கு எப்படி மாற்றுவது என்று கிழே பாருங்கள் .Start சென்று 'Run' ல் 'gpedit.msc' என டைப் செய்து ஓகே கொடுங்கள். இப்பொழுது 'Group Policy' என்ற புதிய விண்டோ திறக்கும். இதில்,

09 January 2015

கூகுள் க்ரொமிற்கு போட்டியாக ஸ்பார்டனை களமிறக்கும் மைக்ரோசாப்ட்!

‘உலாவி’ (Browser) என்றவுடன் பலருக்கு ‘கூகுள் க்ரொம்’ (Google Chrome) பளிச்சென நினைவுக்கு வரும். சிலர் ‘ஃபயர்பாக்ஸ்’ (FireFox) விரும்பிகளாகவும் இருக்கலாம்.ஏனென்றால் மேற்கூறிய இரண்டு உலாவிகளும் அனைவரும் பயன்படுத்தும் வகையில் எளிமையானதாகவும், மிகுந்த செயல்திறன் கொண்டதாகவும் உருவாக்கப்பட்டுள்ளன.

26 November 2014

கூகுள் குரோமிற்கு நிகரான பாதுகாப்பு மிக்க இணைய உலாவி

கூகுள் நிறுவனத்தின் குரோம் இணைய உலாவிக்கு நிகரான பாதுகாப்பு மிகுந்த Aviator எனும் புதிய இணைய உலாவி ஒன்று உருவாக்கப்பட்டுள்ளது.இதில் ஹேக்கர்களால் உங்களால் மேற்கொள்ளப்பட்ட இணைய உலாவல்கள், கடவுச் சொற்கள், மின்னஞ்சல் பாவனை, வங்கி கணக்கு தொடர்பான தகவல்கள் என்பன திருடப்படுவதிலிருந்து பாதுகாப்பு தருகின்றது. 

11 November 2014

புதிய வசதியுடன் Firefox இணைய உலாவி அறிமுகம்

உலகில் அதிகளவானவர்களால் பயன்படுத்தப்படும் இணைய உலாவிகளில் ஒன்றான Firefox உலாவியின் புதிய பதிப்பினை Mozilla நிறுவனம் வெளியிட்டுள்ளது.33.1 வது பதிப்பாக வெளிவந்துள்ள இந்த உலாவியில் இணையத்தேடல்களை பாதுகாப்பானதாக மேற்கொள்ள முடிவதுடன் குக்கீஸ்களை (Cookies) ஒரே ஒரு பட்டனை அழுத்துவதன் மூலம் நீக்குவதற்கு Forget எனும் பொத்தான் தரப்பட்டுள்ளது.

29 August 2014

நமக்கு பிடித்த தளங்களின் புக்மார்க்குகளை பேக்கப் மற்றும் ரெஸ்டோர் செய்வது எப்படி?

நம் எல்லோருக்கும் browser களில் நமக்கு பிடித்த தளங்களை (ctrl+d) கொடுத்து BookMark சேவ் செய்ய தெரியும்.ஆனால் இதை தெரிந்து கொள்வது மிக அவசியம் ஏன் என்றால்,சில சமயம் நாம் OS Reinstall செய்ய வேண்டியது இருக்கும் அல்லது புதிய வேலையில்சேரும்போது நமக்கு வேண்டிய BookMark -களை இழக்க நேரிடும் ,அதை எப்படி Backup மற்றும் Restore செய்வது எப்படி என்று பார்ப்போம்.

13 August 2014

உங்கள் குழந்தைகளுக்கான இண்டெர்நெட் Browser

உங்கள் விட்டில் கணினி மற்றும் இண்டெர்நெட் வசதி இருப்பின், அதை குழந்தைகள் பயன்படுத்தும் போதும் உங்கள் மனதில் ஒருவித அச்சம் ஏற்படலாம். அது நாம் வைத்திருக்கும் கோப்புகள் பற்றியது அல்லது இணையத்தில் அவர்கள் முறையற்ற மற்றும் அவர்கள் வயதிற்கு மீறிய இணையதளங்களை பார்த்துவிடுவார்களோ என்பதாக தான் இருக்கும். உங்கள் பயம் தவறான இணையதளங்களை பற்றியதாக இருப்பின், உங்களுக்கான சரியான தீர்வு தான் இந்த பதிவு.

10 July 2014

ஒரு கிளிக்கில் எல்லா browser History Files மற்றும் Temporary Files முழுவதையும் அழிக்க

பெரும்பாலான இணையப் பாவனையாளர்கள் இணையப் பயன்பாட்டிற்காக பல உலாவிகளைப்(Browsers) பயன்படுத்துவதுண்டு. இவை அனைத்தினதும் பயன்பாட்டினால் பெருமளவான Temporary Files, Cookies மற்றும் History Files ஆகியவை தேங்குகின்றன. இதனால் வன்தட்டில் இடம் குறைவதுடன் கணணியின் வேகத்தையும் குறைக்கின்றது. இவை அனைத்தையும் ஒரே கிளிக்கில் எவ்வாறு அழிப்பது என்று இப்போ பார்ப்போம்.

17 June 2014

Youtube வீடியோக்கள் விரைவாக Buffering ஆக

அதிகமான இணையதளப் பயனாளர்கள் விரும்பிப்பார்ப்பது யுடியூப் வீடியோக்கள்தான். குறைந்த வேகம் கொண்ட இணைய இணைப்பு உள்ளவர்கள் இதில் வீடியோ பார்ப்பதென்றால் சிறிது நேரம் கழித்துதான் பார்க்க முடியும்.காரணம் வீடியோ முழுவதும் Buffer ஆவதற்கு சிறிய நேரம் எடுத்துக்கொள்ளும். முழுமையான வீடியோவைப் பார்க்க வீடியோ முழுவதும் Buffer ஆகும்வரை காத்திருக்க வேண்டும்.

20 March 2014

ஆட் ஆன் தொகுப்பு ஆபத்தானதா?

பிரவுசர்களுக்கான ஆட் ஆன் தொகுப்புகள் நாள்தோறும் உருவாக்கப்பட்டு நமக்கு இணையத்தில் கிடைக்கின்றன. இந்த பழக்கத்தினை, மொஸில்லாவின் பயர்பாக்ஸ் தொடங்கி வைக்க, இப்போது அனைத்து பிரவுசர்களுக்கும் கூடுதல் வசதி தரும் இந்த தொகுப்புகள் வெளியாகி வருகின்றன.அவற்றோடு இணைந்து ஆபத்துக்களும் வரத் தொடங்கி உள்ளன. ஆட் ஆன் தொகுப்பு என்ற பெயரில், நம் கம்ப்யூட்டரில் மறைந்திருந்து,பெர்சனல் தகவல்களைத் திருடும் புரோகிராம்கள் பதிக்கப்பட்டு, நம் தகவல்கள் திருடப்படுகின்றன. அல்லது நேரடியாக வைரஸ் புரோகிராம்கள் இந்த போர்வையில், கம்ப்யூட்டரில் இறங்கி, நம் செயல்பாட்டினை முடக்குகின்றன.

07 March 2014

Android சாதனங்களுக்கான Opera உலாவியின் புதிய பதிப்பு வெளியீடு

கூகுளின் android இயங்குதளத்தினை அடிப்படையாகக் கொண்டு செயற்படும் மொபைல் சாதனங்களில் நிறுவி பயன்படுத்துவதற்கான தனது உலாவியின் புதிய பதிப்பினை வெளியிட்டது Opera.இப்புதிய பதிப்பானது அன்ரோயிட் 4.0 மற்றும் அதற்கு பிந்திய பதிப்புக்களில் செயற்படக்கூடியதாக காணப்படுகின்றது.இந்த உலவாவயினூடாக நேரடியாகவே வீடியோ அழைப்புக்களை ஏற்படுத்தக்கூடியதாக இருப்பது விசேச அம்சமாகும்.

15 January 2013

லினக்ஸ் பயன்படுத்துவோருக்கான சில சிறந்த இணைய உலாவிகள்

WINDOWSக்கு அடுத்தபடியாக  LINUX தான் மக்களால் அதிகம் பயன்படுத்த படும் இயங்குதளம்.லினக்ஸ் பயன்படுத்துபவர்களும், அந்த சிஸ்டத்திற்கென உள்ள அனைத்து பிரவுசர்கள் குறித்து அறிந்திருப்பதில்லை. ஒன்றிரண்டு பிரவுசர்களை மட்டுமே பயன்படுத்தி வருகின்றனர். இவற்றில் முதல் இரண்டு இடங்களைப் பிடித்திருப்பது பயர்பாக்ஸ் மற்றும் குரோம் பிரவுசர்கள் மட்டுமே. லினக்ஸ் இயக்கத்தில் இயங்கக் கூடிய மற்ற பிரவுசர்கள் குறித்தும் இங்கு காணலாம்.

15 December 2012

நீங்கள் விரும்பும் Website ஐ அப்படியே PDF FILE ஆக மாற்ற

பல நேரங்களில் நாம் பார்த்துக் கொண்டிருக்கும் வெப்சைட்டை(WEBSITE) அப்படியே பி.டி.எப். பார்மட்டில்(PDF FORMET)ஒரு பைலாக மாற்றி வைத்துக் கொள்ளலாமே என்ற எண்ணம் ஏற்படும், இல்லையா?ஏனென்றால் பல எச்.டி.எம்.எல். பைல்கள் இணைந்த ஓர் இணைய தளத்தை காப்பி செய்வது சற்று சிரமமான வேலையாகும். இதற்கென ஓர் ஆட் ஆன் தொகுப்பு PDFIt என்கிற பெயரில் இணையத்தில் இலவசமாக கிடைக்கிறது.

07 December 2012

இணையத்தில் 3D- யில் உலாவலாம் வாருங்கள்

தொழில்நுட்பம் நாளுக்கு நாள்  வளர்ந்துகொண்டே தான் இருக்கிறது இப்பொழுது அனைவரும் 3D என்னும் புதிய அறிய தொழில்நுட்பத்தின் பிடியில் உள்ளனர் . சினிமா துறையிலும் சரி கணினித்துறையிலும் சரி இப்பொழுது 3D-யின் மோகம் அதிகரித்து கொண்டே போகிறது. நிறைய நபர்கள் 3D யில் வேலை பார்ப்பதை இப்பொழுது விரும்புகிறார்கள். இப்பொழுது 3D டெஸ்க்டாப் என்ற ஒரு மென்பொருளை பற்றி இணையத்தில் படித்தேன் இதை பற்றி அனைவரும் அறிந்திருப்பார்கள். அதை பற்றி படித்து கொண்டிருந்தபோது தான் இந்த 3D உலாவியைபற்றி தெரிந்துகொண்டேன்.

05 December 2012

Google Chrome அலங்கரிக்க சில நீட்சிகள் ( ADD ONS)

Google  நிறுவனம் பற்றி அறியாதவர்கள் யாரும் இருக்க மாட்டர்கள் இந்த நிறுவனமானது தினம் தினம் புதிய மற்றும் ஏராளமான வசதிகளை அறிமுகப்படுத்தி கொண்டே தான் இருக்கிறது. இந்த பதிவு அதிகமாக பயன்படுத்த படும் GOOGLE CHROME பற்றியது தான். நம்மில் பலரும் இந்த உலாவியை தான் பயன்படுத்துகிறோம். இந்த உலாவியை அழகாக்க பல நீட்சிகள் இணையத்தில் இலவசமாக கிடைக்கிறது அவற்றில் சிலவற்றை பற்றி பார்ப்போம்.

03 December 2012

அனைத்து Internet Browser களுக்குமான Tips and Tricks

நாம் பயன்படுத்தும் அனைத்து பிரவுசர்களும், மேம்போக்காகத் தெரிவதைக் காட்டிலும், கூடுதலாகவே பல வசதிகளை நமக்குத் தருவதாய் அமைந்துள்ளன. நீங்கள் பயர்பாக்ஸ் நண்பராகவோ, அல்லது இன்டர்நெட் எக்ஸ்புளோரரின் பக்தராகவோ, குரோம் பிரவுசரின் தீவிர ரசிகராகவோ இருக்கலாம்.அனைத்து பிரவுசர்களும் இந்த கூடுதல் வசதிகளைத் தருவதாகவே அமைந்துள்ளன. இங்கு அதற்கான டிப்ஸ்கள் தரப்படுகின்றன. இவற்றைப் பயன்படுத்து வது உங்கள் கைகளில்தான் இருக்கின்றன. இந்த டிப்ஸ்களில் அறிமுகப்படுத்தப்படும் பல ஆட் ஆன் புரோகிராம்களும் இலவசமாகவும், எளிதில் பயன்படுத்தும் தன்மை கொண்டதாகவும் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.