அன்பை பகிர்வோம்,அன்பால் இணைவோம்

Showing posts with label linux. Show all posts
Showing posts with label linux. Show all posts

14 June 2014

இலவச லினக்ஸ் இயங்குதளத்தை USB மூலம் நிறுவ

லினக்ஸ் திறந்த மூல இயங்குதள மென்பொருள் என்பதால் பல வடிவங்களில் இணையத்தில் தரவிறக்க கிடைக்கின்றன.இவை பெரும்பாலும் இணையத்தில் ISO கோப்புகளாக தரவிறக்கத்திற்கு கிடைக்கின்றன. இவற்றை நீங்கள் தரவிறக்கி CD அல்லது DVD யில் எழுதி கணினியில் நிறுவுவதற்கோ , சோதித்து பார்ப்பதற்கோ உபயோகப்படுத்த வேண்டி இருக்கும். இதனால் பல CD/DVD கள் வீணாவது தவிர்க்க இயலாதது. இவ்வாறு அல்லாமல் எப்படி USB யில் லினக்ஸ் பதிப்புகளை நிறுவி Live USB யாக பயன்படுத்துவது எப்படி என்று பார்ப்போம்.

15 January 2013

லினக்ஸ் பயன்படுத்துவோருக்கான சில சிறந்த இணைய உலாவிகள்

WINDOWSக்கு அடுத்தபடியாக  LINUX தான் மக்களால் அதிகம் பயன்படுத்த படும் இயங்குதளம்.லினக்ஸ் பயன்படுத்துபவர்களும், அந்த சிஸ்டத்திற்கென உள்ள அனைத்து பிரவுசர்கள் குறித்து அறிந்திருப்பதில்லை. ஒன்றிரண்டு பிரவுசர்களை மட்டுமே பயன்படுத்தி வருகின்றனர். இவற்றில் முதல் இரண்டு இடங்களைப் பிடித்திருப்பது பயர்பாக்ஸ் மற்றும் குரோம் பிரவுசர்கள் மட்டுமே. லினக்ஸ் இயக்கத்தில் இயங்கக் கூடிய மற்ற பிரவுசர்கள் குறித்தும் இங்கு காணலாம்.

09 July 2012

தமிழில் உபுண்டு Install செய்வது எப்படி?How to install ubuntu in tamil

விண்டோஸ் ஆப்பரேட்டிங் சிஸ்டம் இன்று உலகில் பரவலாகப் பெரும்பாலானவர்களால் பயன்படுத்தும் சிஸ்டமாக இருந்தாலும், உபுண்டு சிஸ்டம் பயன்படுத்துவதும் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. தொடக்கத்தில் தொழில் நுட்ப ஆய்வாளர்கள் மட்டுமே விரும்பிப் பயன்படுத்திய சிஸ்டமாக உபுண்டுஇருந்து வந்தது. பின்னர் சாதாரணப் பயனாளரும் இதனைப் பயன்படுத்தலாம் என்ற நிலை உருவாகிப் பலரின் விருப்பமான சிஸ்டமாக உபுண்டு உருவானது. 

13 September 2011

வளர்ந்து வரும் லினக்ஸ் சாம்ராஜ்யம்


இருபது ஆண்டுகளுக்கு முன்னால், லினஸ் டோர்வால்ட்ஸ் தன்னுடைய புதிய ஆப்பரேட்டிங் சிஸ்டம் திட்டம் குறித்து, யூசர்நெட் என்ற அஞ்சல் குழுவில் அறிவித்த போது, அது உலகை வென்று வாகை சூடும் என எண்ணிப் பார்த்திருக்க மாட்டார். 1991 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 25ல் இது பற்றி எழுதுகையில், சும்மா பொழுது போக்காகத்தான் இதனை உருவாக்குகிறேன் என்று குறிப்பிட்டிருந்தார். 80386 ப்ராசசர் இயக்கம் பற்றித் தெரிந்து கொள்வதற்காகத்தான், லினக்ஸ் ஆப்பரேட்டிங் சிஸ்டத்தினை வடிவமைத் ததாகவும் பின் நாளில் எழுதினார். ஆனால் நடந்தது வேறு. இன்று புதியதாக உருவாகும் அனைத்து ப்ராசசர்களும் லினக்ஸ் இயங்கும் வகையிலேயே அமைக்கப்படுகின்றன. லினக்ஸ் எந்த வகைக் கம்ப்யூட்டரையும், பெர்சனல் கம்ப்யூட்டர், நெட்புக், ஸ்மார்ட்போன் முதல் மெயின்பிரேம் வரை, மற்றும் பிற, என அனைத்து வகை கம்ப்யூட்டிங் பணிகளையும் எளிதாகவும், விரை வாகவும் மேற்கொள்ள உதவிடும் ஆப்பரேட்டிங் சிஸ்டமாக இன்று உருவெடுத்துள்ளது. டெல், எச்.பி. ஆரக்கிள், ஐ.பி.எம். என அனைத்து முன்னணி பெர்சனல் கம்ப்யூட்டர் நிறுவனங்களும் லினக்ஸ் சிஸ்டத்திற்குத் தொடக்கம் முதல் ஆதரவு அளித்தன. வர்த்தக ரீதியாக லினக்ஸ் சிஸ்டத்தினை எடுத்துக் கொண்ட ரெட் ஹேட் (Red Hat) நிறுவனம், இன்று 730 கோடி டாலர் மதிப்புள்ள நிறுவனமாக இயங்கி வருகிறது. 

10 September 2011

லினக்ஸ் எனக்குத் தேவையா ?


விண்டோஸ் ஆப்பரேட்டிங் சிஸ்டம் இன்று உலகில் பரவலாகப் பெரும்பாலானவர்களால் பயன்படுத்தும் சிஸ்டமாக இருந்தாலும், லினக்ஸ் சிஸ்டம் பயன்படுத்துவதும் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. தொடக்கத்தில்  தொழில் நுட்ப  ஆய்வாளர்கள்  மட்டுமே விரும்பிப் பயன்படுத்திய சிஸ்டமாக லினக்ஸ் இருந்து வந்தது. பின்னர் சாதாரணப் பயனாளரும் இதனைப் பயன்படுத்தலாம் என்ற நிலை உருவாகிப் பலரின் விருப்பமான சிஸ்டமாக லினக்ஸ் உருவானது.  அதற்கான சில காரணங்களை இங்கு காணலாம்.