அன்பை பகிர்வோம்,அன்பால் இணைவோம்

Showing posts with label download. Show all posts
Showing posts with label download. Show all posts

26 December 2015

எந்த தளத்தில் இருந்தும் ஆன்லைன் வீடியோவை டவுன்லோட் செய்வது எப்படி?

ஆன்லைன் வீடியோக்களை டவுன்லோட் செய்ய நிறைய மென்பொருட்கள் இருக்கின்றன. ஆனால் அவற்றில் நிறைய Youtube, Dailymotion, Vimeo போன்ற வீடியோ தளங்களில் இருந்து மட்டுமே டவுன்லோட் செய்யும் வசதியை தருகின்றன. மற்ற தளங்களில் உள்ள வீடியோக்களை நம்மால் பெரும்பாலும் டவுன்லோட் செய்ய இயலாது. மாறாக மிக அதிகமான தளங்களில் இருந்து எப்படி வீடியோவை டவுன்லோட் செய்வது என்று பார்ப்போம்.

இதற்கு நீங்கள் Firefox உலவியை பயன்படுத்த வேண்டும். அதில் Download Helper என்ற Add-on ஐ பயன்படுத்தினால் எந்த வீடியோவை வேண்டும் என்றாலும் தரவிறக்கம் செய்யலாம்.

தரவிறக்க இணைப்பு – Video DownloadHelper

Add To Firefox என்பதை கிளிக் செய்தால் உங்கள் உலவியில் இது Add ஆகி விடும். அதன் பின்னர் ஒரு உலவியை close செய்து விட்டு ஓபன் செய்து குறிப்பிட்ட தளத்துக்கு சென்று வீடியோவை ஓடவிடுங்கள்.

உதாரணமாக கடல் படத்தில் “நெஞ்சுக்குள்ளே உம்ம முடிஞ்சுருக்கேன்” என்ற பாடல் MTV தளத்தில் தான் முழுமையாக உள்ளது. அதன் இணைப்பு – Nenjukulle (Full Song)

இதை உங்கள் Firefox உலவியில் திறந்து வீடியோ ஓடும் போது Address Bar பக்கத்தில் கீழே படத்தில் உள்ளபடி ஒரு Plugin ஒன்று பலூன் போல சுற்றிக்கொண்டிருக்கும். அதன் அருகில் ஒரு அம்புக்குறி இருக்கும்.


அம்புக்குறியை கிளிக் செய்தால் டவுன்லோட் செய்து விடலாம்.


இது Flv Format – இல் டவுன்லோட் ஆகும். வேறு ஏதேனும் Format வேண்டும் எனில் Download & Convert என்பதை தெரிவு செய்யுங்கள்.

மற்றபடி நீங்கள் Youtube, Dailymotion, Vimeo போன்ற தளங்களிலும் இதை பயன்படுத்தலாம். குறிப்பிட்ட தளத்தில் இருந்து டவுன்லோட் செய்ய முடியவில்லை என்றால் அந்த தகவலை நீங்கள் இந்த Plugin Developer களுக்கு தெரிவிக்கலாம். Submitting a site

16 November 2015

Install செய்த மென்பொருளை Uninstall செய்யாமல் வேறு டிரைவ்க்கு Move செய்வது எப்படி?

கணினியில் நிறைய மென்பொருள்களை பயன்படுத்தும் அனைவரும் எதிர்கொள்ளும் ஒரு பிரச்சினை, C Drive – இல் மிக அதிகமான Software -களை இன்ஸ்டால் செய்துவிட்டு அது Full ஆனவுடன் என்ன செய்வது என்று திகைப்பது. இதனால் கணினி மெதுவாக இயங்க தொடங்கும். குறிப்பிட்ட Software – ஐ uninstall செய்துவிட்டு மீண்டும் வேறு டிரைவில் install செய்வார்கள் பலர். அப்படி இல்லாமல் C Drive இல் இருந்து நேரடியாக வேறு Drive க்கு மாற்ற ஒரு வசதி இருந்தால் எப்படி இருக்கும். அப்படிப்பட்ட ஒரு வசதியை பற்றி பார்ப்போம். 



இதை Windows Vista மற்றும் Windows 7 பயனர்கள் மட்டுமே பயன்படுத்த முடியும். 

முதலில் SymMover என்ற இலவச மென்பொருளை டவுன்லோட் செய்து கொள்ளுங்கள். அதை இன்ஸ்டால் செய்த உடன், Start Menu- வில் சென்று ஓபன் செய்யவும். இப்போது கீழே உள்ளவாறு வரும். 


அதில் + என்பதன் மீது கிளிக் செய்யவும். இப்போது உங்கள் கணினியில் நீங்கள் இன்ஸ்டால் செய்த மென்பொருட்கள் அனைத்தும் வரும். 


எத்தனை மென்பொருட்களை Move செய்ய வேண்டுமோ அத்தனையையும் தெரிவு செய்யவும். ஒவ்வொன்றாகத்தான் செய்ய முடியும். இப்போது கீழே படத்தில் உள்ள பச்சை நிற அம்புக் குறி போன்றதில் கிளிக் செய்ய வேண்டும். 


மென்பொருளின் சைஸ் பொறுத்து சில நிமிடங்களில் Move ஆகி விடும். 




இது உங்கள் D டிரைவில் SymMover என்ற Folder-இல் இருக்கும். Destination Folder மாற்ற விரும்பினால் கடைசியில் இருந்து இரண்டாவதாக உள்ள Settings Icon மீது கிளிக் செய்ய வேண்டும். அதில் Add என்பதை கிளிக் செய்து புதிய Destination தெரிவு செய்யலாம். 


Move ஆன பின்பும் உங்கள் மென்பொருள் பழையபடி இயங்கும்.
நன்றி karpom.com

24 August 2015

Download செய்ய முடியாத Video-க்களை Download செய்ய

இன்றைய இனையம் வளர்ச்சிஅடைந்துவிட்டநிலையில் தினம் தினம் இனையதளத்தில் நாம் பல வீடீயோக்களை கான்கிறோம்.அப்படி கானும் போது சில Videoக்கள் நமக்கு பிடித்துவிடும்.அதை Download செய்ய முயற்சிப்போம்.ஆனால் அங்கு Download Option இருக்காது.எனவே அதை Download பன்ன முடியாது என நினைப்போம்.இனி அப்படி நினைக்க.இதற்கு Mozilla FireBox உதவுகிறது.இங்கே சென்று Mozilla FireBox-ஐ தறவிறக்கிக் கொள்ளுங்கள்.

Download செய்யும் முறை

Mozilla FireBox-ஐ திறந்து தேவையான வீடீயோ இருக்கும் பக்கத்திற்கு செல்லவும்.
பிறகு அந்த பக்கத்தின் ஏதாவது ஒரு இடத்தில்(Link இல்லாத இடத்தில்) வலது க்ளிக் செய்து படத்தில் காட்டியுள்ளவாறு View Page Info என்பதை தேர்ந்தெடுக்கவும்.








View Page Info என்பதை தேர்ந்தெடுத்தவுடன் கீழே உள்ள படத்தில் காட்டியுள்ளபடி ஒரு Window தோன்றும்.அங்கு Media என்பதை க்ளிக் செய்யவும்
அதில் உங்களுக்கு தேவையான ஒரு வீடீயோ file-ஐ Download பன்னும் URL-ஐ காட்டும்.அந்த URL மீது வலது கிளிக் செய்து Copy செய்யலாம். 







Copy செய்த URL-ஐ Address Bar-ல் Paste செய்தால் வீடீயோவை கணிணியில் தறவிறக்கம் செய்யலாம்.

நீங்கள் Download செய்யும் File VideoPalayback என்ற பெயரில் Save ஆகலாம்.அப்படி ஆகினால் அதை VideoPalayback.flvஅல்லது VideoPalayback.avi அல்லது VideoPalayback.swf என மாற்றிவிடவும்


இதை Youtube Video-க்களுக்கும் பயன்படுத்தலாம் என்பது மற்றொரு சிறப்பு.

டிஸ்கி:file-ன் மீது கிளிக் செய்து Save As கொடுக்கலாம்.ஆனால் இது அனைத்து வீடீயோக்களுக்கும் பொருந்துவதில்லை.

31 July 2015

ஒரு இலவச மென்பொருளில் 47 பலன்கள்

ஒரு சில சமயங்களில் ஒரே வேலைக்கு நாம் பல மென்பொருட்களை நிறுவி இருப்போம். ஆனால் அதில் கூட நமக்கு திருப்தி இருக்குமா என்று தெரியாது. ஆனால் ஒரே மென்பொருள் நமக்கு 47 வகையான மென்பொருள் தரும் வசதிகளை தந்தால்? அது தான் DVD Video Soft. 



இதை இன்ஸ்டால் செய்ய உங்கள் கணினியில் .Net Framework 2 SP2 இருக்க வேண்டும். இன்ஸ்டால் செய்து முடித்தவுடன், கீழே உள்ள படம் வரும்.






இதன் சில முக்கியமான சிறப்பம்சங்கள்: 

1. வீடியோ மற்றும் ஆடியோகளை வெவ்வேறு வகையான Format களில் Convert செய்ய உதவுகிறது. இன்னும் ஒரு படி மேலே போய் உங்கள் போன் நிறுவனத்துக்கே தருகிறார்கள், அத்தோடு உங்கள் போன் மாடல் தெரிவு செய்யும் வசதியும் உள்ளது. (Mobile என்ற வசதியில்)

2. DVD களை Burn & Rip செய்யும் வசதி. (CD,DVD,BD வசதியில்)

3. Youtube வீடியோக்களை தரவிறக்கம் செய்யும் வசதி. (Youtube என்ற வசதியில்-Free Youtube Download) ஒரே கிளிக் மூலம் நிறைய வீடியோக்களை தரவிறக்கும் வசதி தரும்.

4. சின்ன சின்ன வீடியோ எடிட்டிங் செய்யும் வசதியை தந்துள்ளது. (DVD& Video வசதியில்)

5. Screen Record செய்யும் வசதி.

6. உங்களிடம் 3D கண்ணாடி உள்ளதா? 3D-யில் Image & Video போன்றவற்றை உருவாக்க 3D என்ற வசதி பயன்படும்.

7. iPod, iPhone என்று தனி வசதி தரப்பட்டு உள்ளது. (Apple Devices வசதி)

அந்த மென்பொருளின் சில சிறப்பம்சங்களை மட்டுமே கூறி உள்ளேன். அசத்தலான இதை தரவிறக்கம் செய்து, மற்றவற்றை நீங்கள் பயன்படுத்தி பாருங்கள்.

Install செய்யும் போது, கீழே வரும் Window வரும் போது, “DVDVideo Soft Toolbar” என்பதை Unclick செய்து விடுங்கள்.
அன்பை தேடி தளத்திற்காக கற்போம் பிரபு.

19 March 2015

ஆன்டிரய்டு போனில் யூட்யூப் வீடியோக்களை பதிவிறக்கம் செய்வது எப்படி?

ஸ்மார்ட்போனில் பல அப்ளிகேஷன்களை பயன்படுத்துவீங்க, எல்லா அப்ளிகேஷனும் உங்களுக்கு உதவியாகவும் இருக்கும், சிலது விளையாட்டாகவும் இருக்கும், இருந்தும் படங்களை டவுன்லோடு செய்ய முடியுமா, யூட்யூபில் இருந்து வீடியோக்களை டவுன்லோடு செய்ய தெரியுமா?

11 March 2015

கணிதம் கற்றுக் கொள்ள இலவச மென்பொருள்

நண்பர்களே குழந்தைகளுக்கு கணித பாடம் மட்டும் சில குழந்தைகளுக்கு அவ்வளவு சீக்கிரத்தில் பிடிபடாது? இதற்கு காரணம் என்னவென்றால் மன திண்மை இல்லாததே காரணம் உதாரணத்திற்கு 2+1 = என்ன வென்று கண்டுபிடிக்க வேண்டும் என்றால் மூன்றில் இருந்து 6 வயது குழந்தைகள் விரல் விட்டு எண்ணி சொல்வார்கள். இதே 6 வயதுக்கு மேற்பட்ட குழந்தைகள் உடனே 3 என்பார்கள் இது எப்படி மனதிற்குள்ளேயே 2 + 1 என்பதை கூட்டி விடை 3 என்று கூறுவார்கள். 

04 March 2015

யூடியூப் வீடியோக்களை தரவிறக்கம் செய்ய

யூடியூப் வீடியோக்களை தரவிறக்கம் செய்ய பல்வேறு இலவச மென்பொருள்களும், நீட்சிகளும் இணையத்தில் கொட்டிகிடக்கிறன. இவற்றில் ஒரு சிலவை மட்டுமே சரியானதாக இருக்கும். அந்த வகையில் தற்போது SnowFox YouTube Downloader என்னும் மென்பொருள் இலவசமாக லைசன்ஸ் கீயுடன் அந்த நிறுவனம் அளிக்கிறது. இந்த மென்பொருளுடைய சந்தை விலை $19 ஆகும். இந்த மென்பொருளை இலவசமாக பெற வேண்டுமெனில் உங்களுக்கு முகநூலில் (Facebook) கணக்கு இருக்க வேண்டும்.

18 February 2015

சாவியை நகலெடுப்பதற்கும் ஒரு Application

ஸ்மார்ட் போன்களில் விதவிதமான செயலிகள் (ஆப்ஸ்) அறிமுகமாகிவரும் நிலையில், இப்போது சாவியை நகலெடுப்பதற்கும் ஒரு செயலி அறிமுகமாகியுள்ளது.நியூயார்க் நகரைச் சேர்ந்த கீமீ (KeyMe) எனும் நிறுவனம் இந்தச் செயலியை அறிமுகம் செய்திருக்கிறது. 

14 February 2015

அனைத்து மென்பொருள்கள் பதிவிறக்கம் - நேரடி தரவிறக்க சுட்டி

சாதரணமாக் நாம் மென்பொருள்களை பதிவிறக்கம் செய்ய வேண்டுமெனில் ஏதாவது ஒரு வலைமனையில் இருந்து பதிவிறக்கம் செய்வோம். இல்லையெனில் நேரடியாக குறிப்பிட்ட வலைமனைக்கே சென்று அந்த குறிப்பிட்ட மென்பொருளை பதிவிறக்கம் செய்வோம். இதனால் பல்வேறு பட்ட மென்பொருள்களை பதிவிறக்கம் செய்ய நினைப்பவர்களால் சரியாக மென்பொருள்களை பதிவிறக்கம் செய்ய முடியாது.

23 January 2015

வீடியோக்களை அதி வேகத்தில் பதிவிறக்கம் செய்ய

நாம் நிறைய வீடியோகளை இணைத்தில் காண்கிறோம்.அதில் சிலவற்றதை மற்றுமே நாம் கணினியில் சேமித்து கொள்ள விரும்புகிறோம்.நாம் ஒரு பாடலை யுடியூப்பில் காண்கிறோம் அந்த பாடல் நமக்கு மிகவும் பிடித்திரிக்கிறது அதை நம் கணினியில் சேமித்து கொள்ள விரும்புகிறீர்கள் அல்லவா அதற்கு தான் இந்த பதிவு.

22 December 2014

190-க்கும் மேற்பட்ட தளங்களில் உள்ள வீடியோக்களை தரவிறக்கம் செய்ய

இன்றைய இணைய உலகில் நூற்று கணக்கான வீடியோ பகிர்வு தளங்கள் உள்ளன. அவை யாவும் வீடியோக்களை இணையம் மூலமாக பிறரிடம் பகிர்ந்து கொள்ள உதவுகிறன. இதில் மிகவும் பிரபலமான வீடியோ பகிர்வு தளம் யூடியூப் தளம் ஆகும். இது தவிர இன்னும் பல்வேறு வீடியோ பகிர்வு தளங்கள் உள்ளன. ஒரு சில குறிப்பிட்ட தளங்களில் மட்டுமே குறிப்பிட்ட வீடியோ தரவிறக்கம் செய்யும் வசதி இருக்கும். 

06 December 2014

கணினியில் குப்பையாக தேங்கி இருக்கும் Junk பைல்களை நீக்கம் செய்ய

கணினியை தினமும் பயன்படுத்தும் போது பல்வேறு விதமான பைல்கள் கணினியில் குப்பையாக தேங்கி நிற்கும். இதுபோன்ற பைல்களை கணினியை விட்டே அகற்ற எதாவதொரு கிளினர் மென்பொருளை பயன்படுத்தி வருவோம். நாம் அனைவரும் அறிந்த கிளினர் என்றால் அது சிகிளினர் மட்டுமே ஆகும். இது தவிர இன்னும் சில மென்பொருள்களும் இணையத்தில் இலவசமாக கிடைக்கிறன.

26 November 2014

கூகுள் குரோமிற்கு நிகரான பாதுகாப்பு மிக்க இணைய உலாவி

கூகுள் நிறுவனத்தின் குரோம் இணைய உலாவிக்கு நிகரான பாதுகாப்பு மிகுந்த Aviator எனும் புதிய இணைய உலாவி ஒன்று உருவாக்கப்பட்டுள்ளது.இதில் ஹேக்கர்களால் உங்களால் மேற்கொள்ளப்பட்ட இணைய உலாவல்கள், கடவுச் சொற்கள், மின்னஞ்சல் பாவனை, வங்கி கணக்கு தொடர்பான தகவல்கள் என்பன திருடப்படுவதிலிருந்து பாதுகாப்பு தருகின்றது. 

24 November 2014

கூகுள் புத்தகங்களை பதிவிறக்கம் செய்ய மென்பொருள்

மின்னனு புத்தகங்கள் பெரும்பாலும் பதிவிறக்கம் செய்ய அனைவரும் நாடுவது கூகுள் தளம் ஆகும். இந்த தளத்தில் உள்ள மின்னனு புத்தகங்களை பதிவிறக்கம் செய்ய எந்த ஒரு இணைப்பு சுட்டியும் இருக்காது. எனவே இந்த புத்தகங்களை நம்மால் பதிவிறக்கம் செய்ய முடியாது. கணிப்பொறி வாயிலாக காண முடியுமே தவிர பதிவிறக்கம் செய்ய முடியாது.

22 November 2014

அனைத்து வீடியோக்களையும் தரவிறக்கம் செய்ய ஒரே மென்பொருள்

தற்போதைய காலகட்டத்தில் எந்த ஒரு செய்தியையும் தெளிவாக பார்க்க வேண்டுமெனில் அது வீடியோவாக இருப்பின் சிறப்பாக இருக்கும். அவ்வாறு உள்ள வீடியோக்களை இணையத்தின் உதவியுடன் காண முடியும். அவ்வாறு காணும் வீடியோக்களை பதிவிறக்கம் செய்வது என்பது கடினமான செயல் ஆகும். வீடியோக்களை காண நாம் அனைவரும் அதிகமாக அனுகுவது யூடியூப் தளம் ஆகும்.

24 October 2014

Dailymotion வீடியோக்களை தரவிறக்கம் செய்ய Firefox நீட்சி

ஏதாவது ஒரு வீடியோ கோப்பு வேண்டுமெனில் நாம் முதலில் நாடுவது யூடுப் தளம் ஆகும். மேலும் ஒரு சில வீடியோக்கள் இந்த தளத்தில் கூட கிடைக்காது அதுபோன்ற வீடியோக்களும் மற்ற வீடியோ தளங்களில் கிடைக்கும் இதில் புகழ்பெற்ற தளம்தான் Dailymotion ஆகும். இந்த தளத்தில் தினமும் என்னற்ற வீடியோக்கள் பதிவேற்றம் செய்யப்படுகிறன.

22 October 2014

யூடியூப் வீடியோக்களை தரவிறக்கம் செய்ய இலவச மென்பொருள்

யூடியூப் வீடியோக்களை தரவிறக்கம் செய்ய பல்வேறு இலவச மென்பொருள்களும், நீட்சிகளும் இணையத்தில் கொட்டிகிடக்கிறன. இவற்றில் ஒரு சிலவை மட்டுமே சரியானதாக இருக்கும். அந்த வகையில் தற்போது SnowFox YouTube Downloader என்னும் மென்பொருள் இலவசமாக  அந்த நிறுவனம் அளிக்கிறது. இந்த மென்பொருளுடைய சந்தை விலை $19 ஆகும்.

19 October 2014

பூமியின் எந்த இடத்தையும் பெரிதாக்கி பார்க்க

நாசா வேர்ல்டு விண்ட்(WORLD WIND) மென்பொருள் பூமியில் எந்த இடத்திலும் செயற்கைக்கோளின் ஏற்றக்கோணத்தில் இருந்து பெரிதாக்கி பார்க்க உதவுகிறது. லாண்ட்சாட் செயற்கைக்கோள் படங்கள் மற்றும் ஷட்டில் ரேடார் டோபோகிராபி மிஷன் தரவு பார்க்க நமக்கு வழி வகை புரிகிறது.

04 October 2014

குழந்தைகள் எளிதாக ஆங்கில வார்த்தைகளை அறிந்துகொள்ள

ஆங்கிலத்தில் ஆயிரம் வார்த்தைக்கு மேல் அறிந்துகொள்ள அருமையான சாப்ட்வேர் இது. 2 எம்.பி. கொள்ளளவு கொண்ட இதனை பதிவிறக்கம் செய்ய இங்கு கிளிக் செய்யவும்.இதை இன்ஸ்டால் செய்ததும் உஙகளுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும்.

05 September 2014

சாதனை படைத்தது பேஸ்புக் அப்பிளிக்கேஷன்

தற்போது பில்லியன் கணக்கானவர்களால் பயன்படுத்தப்பட்டு வரும் சமூகவலைத்தளமான பேஸ்புக், மொபைல் அப்பிளிக்கேஷன்களை அறிமுகப்படுத்தியுள்ளமை தெரிந்த விசயமே.இந்நிலையில் அன்ரோயிட் இயங்குதளத்தில் செயற்படக்கூடிய மொபைல் சாதனங்களுக்காக உருவாக்கப்பட்டு Google Play Store தளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ள அப்பிளிக்கேஷன் ஆனது தரவிறக்கத்தில் சாதனை படைத்துள்ளது.