அன்பை பகிர்வோம்,அன்பால் இணைவோம்

Showing posts with label youtube. Show all posts
Showing posts with label youtube. Show all posts

25 February 2016

Youtube வீடியோக்களை DVD ஆக மாற்ற…

இணையத்தில் நாம் அதிகம் வீடியோ பார்க்கும் தளம் என்று சொன்னால் அது கூகிளின் Youtube தளமாகத்தான் இருக்கும்.இத்தளத்தில் துறைவாரியாக படங்களை பிரித்து நம் கண்ணுக்கும் காதுக்கும் விருந்தளித்து வருகிறார்கள். இத்தளத்தில் உள்ள நம்மை கவர்ந்த வீடியோக்களை தரவிறக்கம் செய்ய எத்தனையோ மென்பொருள்கள் இணையத்தில் கிடைக்கிறது.

அதைத் தரவிறக்கி அப்படியே கணினியில் உள்ள Video Player மூலம் பார்த்துக்கொண்டிருப்போம்.

ஆனால் அதையே கணினி அல்லாத DVD Player -ல் பார்ப்பதற்கு அதற்குத் தகுந்த பார்மட்டிற்கு மாற்ற வேண்டும்.

உங்களிடம் உள்ள யூடியூப் வீடியோக்களை DVD ஆக மாற்றுவதற்கென்றே ஒரு இலவச மென்பொருள் உள்ளது.

மென்பொருளின் பெயர்: Wondershare DVD creator

மென்பொருளைத் தரவிறக்கச் சுட்டி: http://download.wondershare.com/dvd-creator_full619.exe

உங்கள் விரும்பிய யூடியூப் வீடியோக்களை தரவிறக்கம் செய்து வைத்துக்கொள்ளுங்கள்.

பிறகு இந்த மென்பொருளில் உள்ள Import என்ற விருப்பத்தினைப் பயன்படுத்தி உங்களுக்குத் தேவையான youtube வீடியோக்களை ஏற்றிகொள்ளுங்கள்.
வீடியோவை தேர்வு செய்த்தும் உங்களுக்கு கீழ்கண்டவாறு ஒரு பெட்டித் தோன்றும்.

உங்கள் வீடியோபடம் தேர்வானதும் கீழிருக்கும் பட்டையில் வீடியோபடத்திற்கான அளவினைக் காணலாம். மேலும் DVD-யின் கொள்ளளவையும் எத்தனை ஜி.பி. என நிர்ணயித்துக்கொள்ளலாம்.
Menu -வில் எட்டுவித slide-களில் எதையாவது உங்களுக்கு பிடித்தமானதை தேர்வு செய்துகொள்ளுங்கள்.

தேர்வு செய்த்தை Preview பார்க்கும் வசதி இருப்பதால் ஒரு முறை முன்னோட்டம் பார்த்துக்கொள்ளலாம்.

உங்கள் டிவிடிக்கு பெயர் ஒன்றையும் கொடுத்துக்கொள்ளுங்கள்.
இறுதியாக Burn என்பதைச் சொடுக்கவும்.

சற்று நேரத்தில் நீங்கள் தேர்வு செய்த சாதாரண, SD, HD வடிவ வீடியோக்கள் DVD ஆக மாற்றம் பெற்று இருக்கும். இப்போது உங்கள் DVD தயார்!
உங்கள் டிவிடி யை ஒரு முறை இயக்கிப் பார்த்து சோதனை செய்துகொள்ளுங்கள்

28 January 2016

யூடியூப் பகிர்வு: உறவும் முரணும்... கவனிக்கத்தக்க குறும்படம்!

பல நேரங்களில் நாம் எதிர்பார்த்திராத சூழ்நிலைகளில்தான் நாம் பலமுறை சிக்கிக்கொள்ள நேரிடுகிறது பிரச்சனையின் தீவிரத்தைப் பொறுத்து வலிகள் கூடலாம் குறையாலாமே ஒழிய அதன் இழப்புகள் சமயத்தில் ஈடுகட்ட முடியாத அளவுக்கும் இருக்கத்தான் செய்கிறது. ஆனால் அதுவே முடிவு இல்லை என்றுகூறுகிறது 'முரண்' எனும் இக்குறும்படம். | இணைப்பு கீழே |

வாழ்வில் திடீரென விவாகரத்தை எதிர்கொள்கிறாள் ஓர் இளம்பெண். இது அவளுக்கு பேரிடியாக அமைகிறது. அவளால் அதைத் தாங்கிக் கொள்ளமுடியவில்லை. அவனுடன் ஏற்கெனவே வந்த அதே காபிஷாப்புக்கு தன் தோழிகளுடன் வருகிறாள். அங்கு முதன்முதலில் தன் காதல் கணவனை சந்தித்த நினைவுகளைக் கூறி வெதும்புகிறாள்.

எங்கோ இருக்கும் தன் கணவனை நினைத்து ''என் வாழ்க்கை ஏன் இப்படி ஆனது? வினய் ஒருமுறையாவது என்னிடம் பேசு'' என்று கதறுகிறாள்.

ஒரு பெண்ணின் வாழ்வில் தென்றலைப் போல நுழைந்த காதல் எப்படி புயலாகிப்போனது. கடைசியில் அந்தப் புயலை எதிர்கொள்ளமுடியாமல் வீழ்ந்த எத்தனையோப் பெண்களில் ஒருத்தியாகத்தான் அவளும் இன்று!

''வாழ்க்கையில் நாம் தேர்ந்தெடுக்கும் முடிவுகளை அலசிப் பார்த்தால் நாம் எல்லோரும் கையாள்கிற விதங்கள் வேறுபாட்டோடும் முரணாகவும் இருப்பதற்கே வாய்ப்புகள் அதிகம்'' என்பதை அவர்களின் அருகிலுள்ள மனிதர்களை வைத்தே மிக எளிதாகக் காட்டிச் செல்கிறது குறும்படம். நாம் எடுக்கும் முடிவுகள் வெறும் நம்மை சார்ந்தது மட்டுந்தானா என்ற கேள்வியை எழுப்புகிறது.

இக்குறும்படத்தை பார்த்து முடிந்தபிறகு நமது சிந்தனை சிறகுகள் மெல்ல படபடக்கத் தொடங்குகின்றன.

வினய் விஜயகுமார் கச்சிதமான வசனத்தில், ரவிஷங்கர் வாழ்வுக்கு நெருக்கமான ஒளிப்பதிவில் விஜயலட்சுமி ஜிஎஸ், அனுஷா ப்ரவீண், ஸ்ரீவித்யா அனந்தராமகிருஷ்ணன், ப்ரவீண் நெப்பாலி, ஜனனி விஸ்வநாதன், பேபி அனிக்கா உள்ளிட்டோரின் நடிப்பு ஏதோ நமக்குத் தெரிந்தவர்களை ஞாபகப்படுத்துவது போலவே இருக்கிறது.

ஆதித்யா நாராயணன் இயக்கியுள்ள இத்தமிழ்க் குறும்படம் மும்பை சர்வதேச குறும்பட விழாவில் முதல் பரிசு பெற்றது.


30 September 2015

விளம்பரங்கள் அற்ற யூடியூப் சேவை விரைவில்

உலகின் முதற்தர வீடியோ பகிரும் தளமாக விளங்கிவரும் யூடியூப் ஆனது தனது இலவச சேவையில் விளம்பரங்களை காட்சிப்படுத்துவது தெரிந்ததே.இந்நிலையில் விளம்பரங்கள் அற்ற சேவையினை வழங்கவுள்ளதாக கடந்த காலங்களில் அறிவித்திருந்த யூடியூப் குறித்த சேவையினை அடுத்த மாதம் அறிமுகம் செய்கின்றது.

இது தொடர்பான அறிவித்தல்களை தனது விளம்பரதாரர்களுக்கு மின்னஞ்சல் ஊடாக யூடியூப் நிறுவனம் தெரிவித்து வருகின்றது.

இச்சேவையினை மாதாந்தம் 10 டொலர்கள் செலுத்தி பெற்றுக்கொள்ள முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

28 August 2015

யூட்யூப் மூலம் பணம் சம்பாதிப்பது எப்படி..?

இண்டர்நெட் பற்றிய விழிப்புணர்வு இருந்தால் இன்று யாரும் தொழில் அதிபர் தான், இண்டர்நெட் மூலம் இன்று எதையும் செய்ய முடியும் என்றாகிவிட்ட போது பணம் சம்பாதிப்பது மட்டும் கடினமா என்ன.. குழம்ப வேண்டாம் இண்டர்நெட் மூலம் பணக்காரர் ஆவது எப்படி என்பதை தான் இங்கு நீங்கள் அறிந்து கொள்ள போகின்றீர்கள். அதாவது கூகுளின் யூட்யூப் இணையதளத்தின் மூலம் பணம் சம்பாதிப்பது எப்படி என்பதை பாருங்கள்..


அதிக சிரமம் இல்லாமல் சரியான உழைப்பு, புத்திசாலித்தனத்தை முதலீடாக கொண்டு அதிக வருமானம் பெற யூட்யூப் சேனல் சிறப்பான தேர்வாக இருக்கும்.

கூகுள் அல்லது யூட்யூப் அக்கவுன்ட் துவங்கி புதிய சேனல் துவங்க வேண்டும். துவங்கும் போது யூஸர் பெயரை பிரபலமானதாகவும், பலரும் விரும்பும் ஒன்றாகவும் இருந்தால் நல்லது
.
அதிக தரம் கொண்ட வீடியோக்களை உங்களது சேனலில் பதிவேற்றம் செய்ய வேண்டும். தொடர்ச்சியாக வீடியோக்களை பதிவேற்றம் செய்யும் போது அதிகளவிலான மக்கள் உங்களது சேனலை பின் தொடர்வார்கள்.

அதிக பார்வையாளர்களை பெற்று மானிடைசேஷனினை அதிகரிக்க வேண்டும். உங்களது வீடியோக்களை சமூக வலைதளங்களில் முடிந்த வரை பகிர்ந்து கொண்டே இருக்க வேண்டும்.

முடிந்த வரை பார்வையாளர்களின் கேள்விகளுக்கு பதில் அளிப்பது பார்வையாளர்களின் எண்ணிக்கையை வெகுவாக அதிகரிக்கும்.

உங்களது சேனலின் மூலம் பணம் சம்பாதிக்க மானிடைசேஷனினை எனேபிள் செய்ய வேண்டும், இவ்வாறு செய்தால் யூட்யூப் விளம்பரங்கள் உங்களது வீடியோக்களில் வழங்கப்படும். இதோடு உங்களது வீடியோ முழுக்க முழுக்க உங்களுக்கு மட்டுமே சொந்தமானதாக இருப்பதும் அவசியமாகும்.
வீடியோக்களை பதிவேற்றம் செய்தவுடன் வீடியோ மேனேஜர் சென்று உங்களுக்கு மானிட்டைஸ் செய்ய வேண்டிய வீடியோவில் '"Monetize with Ads" பட்டனை க்ளிக் செய்து மானிடைஸ் வித் ஆட்ஸ் என்ற ஆப்ஷனில் சரி பார்க்க வேண்டும்.
ஆட் சென்ஸ் இணையதளத்திற்கு சென்று கூகுள் ஆட் சென்ஸ் செட் செய்து கொள்ளலாம். சைன் அப் நௌ பட்டனை க்ளிக் செய்து உங்களுக்கான அக்கவுண்டினை துவங்க வேண்டும்.
கூகுள் ஆட் சென்ஸ் பெற உங்களது வயது 18 மற்றும் அதற்கும் அதிகமாக இருக்க வேண்டும், பேபால் அல்லது வங்கி கணக்கு மற்றும் தகுந்த மின்னஞ்சல் முகவரி இருக்க வேண்டும்.
ஆட் க்ளிக் எனப்படும் விளம்பரங்களில் கிடைக்கும் க்ளிக் மற்றும் பார்வையாளர்களுக்கு ஏற்ப கட்டணம் உங்களது வங்கி கணக்கில் போடப்படும்.
மானிடைஸ் செய்யப்பட்ட வீடியோ உங்களிடம் இருந்தால் உங்களது வீடியோ எவ்வாறு வேலை செய்கின்றது என்பதை அனாலடிக்ஸ் மூலம் தெரிந்து கொள்ள முடியும், இங்கு உங்களுக்கு வர இருக்கும் பணம், செயல்பாடு, வீடியோக்களின் பார்வை எண்ணிக்கை போன்றவைகளை பார்க்க முடியும்.
யூட்யூப் தளத்தில் பங்குதாரர் ஆவதன் மூலம் அதிக சலுகைகள், வளர்ச்சி திட்டங்கள் மற்றும் சில யோசனைகளை பெற முடியும், இதை பெற அதிக பார்வையாளர்கள் மற்றும் அதிக வீடியோக்களை பதிவேற்றம் செய்திருக்க வேண்டும்.

19 March 2015

ஆன்டிரய்டு போனில் யூட்யூப் வீடியோக்களை பதிவிறக்கம் செய்வது எப்படி?

ஸ்மார்ட்போனில் பல அப்ளிகேஷன்களை பயன்படுத்துவீங்க, எல்லா அப்ளிகேஷனும் உங்களுக்கு உதவியாகவும் இருக்கும், சிலது விளையாட்டாகவும் இருக்கும், இருந்தும் படங்களை டவுன்லோடு செய்ய முடியுமா, யூட்யூபில் இருந்து வீடியோக்களை டவுன்லோடு செய்ய தெரியுமா?

04 March 2015

யூடியூப் வீடியோக்களை தரவிறக்கம் செய்ய

யூடியூப் வீடியோக்களை தரவிறக்கம் செய்ய பல்வேறு இலவச மென்பொருள்களும், நீட்சிகளும் இணையத்தில் கொட்டிகிடக்கிறன. இவற்றில் ஒரு சிலவை மட்டுமே சரியானதாக இருக்கும். அந்த வகையில் தற்போது SnowFox YouTube Downloader என்னும் மென்பொருள் இலவசமாக லைசன்ஸ் கீயுடன் அந்த நிறுவனம் அளிக்கிறது. இந்த மென்பொருளுடைய சந்தை விலை $19 ஆகும். இந்த மென்பொருளை இலவசமாக பெற வேண்டுமெனில் உங்களுக்கு முகநூலில் (Facebook) கணக்கு இருக்க வேண்டும்.

02 March 2015

கூகிளின் புதிய சேவை குழந்தைகளுக்காக

அவ்வப்போது ஏதேனும் புதுமையான வசதிகளைத் தன் வாடிக்கையாளர்களுக்குத் தருவது, கூகுள் நிறுவனத்தின் வாடிக்கை. அந்த வகையில், சென்ற திங்கள் கிழமை, குழந்தைகள் பாதுகாப்பாகப் பயன்படுத்தவென, யு ட்யூப் கிட்ஸ் (YouTube Kids) என்ற பெயரில் அப்ளிகேஷன் ஒன்றை, ஆண்ட்ராய்ட் மற்றும் ஐ.ஓ.எஸ். தளங்களில் இயங்குவதற்கென தயாரித்து வழங்கியுள்ளது.

19 December 2014

இன்டெர்நெட் இல்லாமல் யூட்யூப் வீடியோக்களை பார்க்கும் வசதி

சில தினங்களுக்கு முன் கூகுள் நிறுவனம் இன்டெர்நெட் இல்லாமல் யூ-ட்யூப் வீடியோக்களை பார்க்கும் வசதியை இந்தியா, இந்தோனேஷியா மற்றும் பிலிப்பைன்ஸ் ஆகியா நாடுகளுக்கு மட்டும் வழங்கியது அனைவரும் அறிந்ததே. ஆன்டிராய்டு ஸ்மார்ட்போனில் யூ-ட்யூப் செயளியை பயன்படுத்துபவர்கள் இனி யூ-ட்யூப் வீடியோக்களை இன்டெர்நெட் வசதி இல்லாமல் பார்க்க முடியும். எப்படி பார்ப்பது என்பதை அடுத்து பாருங்கள்.

23 November 2014

முடக்கப்பட்ட YOUTUBE வீடியோவை காண

YOUTUBE தளத்தில் நமக்கு தேவையான எந்த வீடியோவையும் பார்க்க முடியும். தேவையெனில் வேண்டிய வீடியோவினை பதிவேற்றமும்/பதிவிறக்கமும் செய்து கொள்ளவும் முடியும். இந்த YOUTUBE தளமானது கூகுள் நிறுவனத்துடையது ஆகும். இந்த YOUTUBE தளத்தில் ஒரு சில வீடியோக்கள் முடக்கப்பட்டிருக்கும், அதுபோன்ற வீடியோக்கள் பெரும்பாலும் பயனர்களை கவர்ந்தவையாக இருக்க கூடும்.

22 November 2014

அனைத்து வீடியோக்களையும் தரவிறக்கம் செய்ய ஒரே மென்பொருள்

தற்போதைய காலகட்டத்தில் எந்த ஒரு செய்தியையும் தெளிவாக பார்க்க வேண்டுமெனில் அது வீடியோவாக இருப்பின் சிறப்பாக இருக்கும். அவ்வாறு உள்ள வீடியோக்களை இணையத்தின் உதவியுடன் காண முடியும். அவ்வாறு காணும் வீடியோக்களை பதிவிறக்கம் செய்வது என்பது கடினமான செயல் ஆகும். வீடியோக்களை காண நாம் அனைவரும் அதிகமாக அனுகுவது யூடியூப் தளம் ஆகும்.

15 November 2014

யூடியூப் தரும் புத்தம் புதிய வசதி

வீடியோக்களை தரவேற்றம் செய்து பகிரும் வசதியைத் தருவதில் முன்னணியில் திகழும் யூடியூப் ஆனது பயனர்களுக்காக YouTube Music Key எனும் சேவையினை அறிமுகம் செய்திருந்தமை தெரிந்ததே.இந்நிலையில் இதில் விளம்பரங்கள் இடம்பெறுவது வழமையாகும்.

22 October 2014

யூடியூப் வீடியோக்களை தரவிறக்கம் செய்ய இலவச மென்பொருள்

யூடியூப் வீடியோக்களை தரவிறக்கம் செய்ய பல்வேறு இலவச மென்பொருள்களும், நீட்சிகளும் இணையத்தில் கொட்டிகிடக்கிறன. இவற்றில் ஒரு சிலவை மட்டுமே சரியானதாக இருக்கும். அந்த வகையில் தற்போது SnowFox YouTube Downloader என்னும் மென்பொருள் இலவசமாக  அந்த நிறுவனம் அளிக்கிறது. இந்த மென்பொருளுடைய சந்தை விலை $19 ஆகும்.

19 October 2014

யூடுப் வீடியோக்களை கன்வெர்ட் செய்ய சிறந்த தளம்

YOUTUBE தளத்தின் உதவியுடன் அனைத்து விதமான வீடியோக்களையும் காண முடியும். இந்த தளத்தின் உரிமை தற்போது கூகுள் வசம் உள்ளது. கூகுள் கணக்கு வைத்திருப்பவர்கள் அனைவருமே இந்த யூடுப் தளத்த்தில் வீடியோக்களை பதிவேற்றம் செய்ய முடியும். மேலும் கருத்துரை மற்றும் விருப்பம் போன்றவைகளையும் குறிப்பிட்ட விடியோக்களுக்கு தெரிவிக்க முடியும்.

23 September 2014

Youtubeல் வீடியோக்களை பிரபலமாக்குவது எப்படி?

இன்று Youtube என்பது மிகப் பிரபலமான ஒன்று. இதில் எல்லா வகையான வீடியோக்களும் உள்ளன. இதில் யார் வேண்டும் என்றாலும் தங்கள் வீடியோக்களை அப்லோடு செய்து கொள்ளலாம் அவ்வாறு செய்யப்படும் வீடிக்களை அதிகமான மக்களால் பார்க்கும் படி செய்யலாம் . அதாவது வீடியோக்களை பிரபலமாக்கலாம். 

20 August 2014

யூடியூப் தரும் புத்தம் புதிய வசதி

வீடியோ கோப்புக்களை பகிரும் பிரபல தளமான யூடியூப்பினை சப்ஸ்கிரைப் (Subscribe) செய்து பயனர்கள் வீடியோக்களை உடனுக்கு உடன் தெரிந்து கொள்ளும் வசதி தற்போது காணப்படுகின்றது.அதேபோன்று யூடியூப் ஆனது YouTube Music Key எனும் புதிய சப்ஸ்கிரைப் வசதியினை விரைவில் அறிமுகம் செய்யவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

18 August 2014

Youtube க்கு போட்டியாக Yahoo வின் புதிய Video தளம் அறிமுகம்

Google வழங்கும் ஒரு சேவை Youtube தளத்தில் வீடியோக்களை பகிர மற்றும் கண்டுகளிப்பதாகும்.குறிப்பாக இந்தியாவில் சுமார் 30 மில்லியன் வீடியோக்கள் ஒரு மாதத்திற்கு பார்க்கப்படுகிறதாம்.Google தளங்களில் வளர்ச்சிப்பாதையில் சென்று கொண்டிருப்பது Youtube தளம். இதைப் பார்த்து Yahoo நிறுவனம் Youtube தளத்திற்குப் போட்டியாக புதிய வீடியோ தளத்தை உருவாக்கி உள்ளது.

29 June 2014

YOUTUBE ன் புத்தம் புதிய வசதி

வீடியோக்களை பகிருவதில் முன்னணியில் திகழும் யூடியூப் தளத்தில் தற்போது 24 Frames Per Second வேகம் கொண்ட வீடியோக்களையே தரவேற்றம் செய்ய முடியும்.எனினும் விரைவில் 48 Frames Per Second, 60 Frames Per Second வேகம் கொண்ட வீடியோக்களை தரவேற்றும் வசதி அறிமுகம் செய்யப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

17 June 2014

Youtube வீடியோக்கள் விரைவாக Buffering ஆக

அதிகமான இணையதளப் பயனாளர்கள் விரும்பிப்பார்ப்பது யுடியூப் வீடியோக்கள்தான். குறைந்த வேகம் கொண்ட இணைய இணைப்பு உள்ளவர்கள் இதில் வீடியோ பார்ப்பதென்றால் சிறிது நேரம் கழித்துதான் பார்க்க முடியும்.காரணம் வீடியோ முழுவதும் Buffer ஆவதற்கு சிறிய நேரம் எடுத்துக்கொள்ளும். முழுமையான வீடியோவைப் பார்க்க வீடியோ முழுவதும் Buffer ஆகும்வரை காத்திருக்க வேண்டும்.

08 June 2014

You tube வீடியோக்களுக்காக பத்து மென்பொருட்கள்

எந்த தகவலை எடுத்தாலும், பொருள் குறித்துத் தேடினாலும் அதனை சிறிய வீடியோவாக அமைத்துத் தருவது தற்போது வாடிக்கையாகிறது. இப்போதெல்லாம் மிக்ஸி மற்றும் கிரைண்டர் போன்ற வீட்டு சாதனங்கள் வாங்கினால், அவற்றை எப்படி இயக்கிப் பார்க்க வேண்டும் என்ற தகவல்கள் எல்லாம் சிறிய வீடியோ கிளிப்களாக நமக்கு ஒரு சிடியில் தரப்படுகின்றன. எனவே தான் மக்கள் அனைவரும் தங்களுக்கான தகவல்களைத் தேடுகையில் முதலில் வீடியோ காட்சிகளாக அவை கிடைக்கின்றனவா என்று தேடுகின்றனர்.

02 May 2014

யூடியூப் அறிமுகம் செய்துள்ள புதிய வசதி

வீடியோ தளங்களில் பிரபலமானதும் முதன்மை வகிப்பதுமான யூடியூப் வீடியோ தளமானது நேற்றைய தினம் தனது தளத்தின் மூலம் வீடியோக்களை பகிர்பவர்களுக்காக புத்தம் புதிய வசதி ஒன்றினை அறிமுகம் செய்துள்ளது.அதாவது யூடியூப்பில் பகிரப்படும் வீடியோக்களை சேனல் முறையில் வகைப்படுத்த முடியும், அவ்வாறு வகைப்படுத்தப்படாத வீடியோக்களை பயனர்களை பார்க்க வைப்பதற்காக தமது மூவிக்களின் ஆரம்பத்தில் இணைக்க முடியும்.