அன்பை பகிர்வோம்,அன்பால் இணைவோம்

Showing posts with label microsoft. Show all posts
Showing posts with label microsoft. Show all posts

30 July 2016

இனி Windows 10 இலவசம் இல்லை!

விண்டோஸ் 7 (Windows 7) மற்றும் 8.1 (Windows 8.1) பயனர்கள் இனி விண்டோஸ் 10 (Windows 10) இயங்குதளத்தை இலவசமாக (Upgrade) அப்கிரேட் செய்ய முடியாது என்று மைக்ரோசாஃப்ட் நிறுவனம் தெரிவித்துள்ளது.விண்டோஸ் 10 இயங்குதளம் வெளியிடப்பட்டு கிட்டதட்ட ஒரு வருடம் ஆகி விட்டது.

இந்த ஒரு வருடத்தில் விண்டோஸ் 7 மற்றும் 8.1 பயனர்கள் விண்டோஸ் 10 இயங்குதளத்தை இலவசமாக அப்கிரேட் செய்து வந்தனர்.
 windows 10 upgrade here

இந்நிலையில் ஆகஸ்ட் 2ம் திகதியில் இருந்து விண்டோஸ் 7 மற்றும் 8.1 பயனர்கள் விண்டோஸ் 10 இயங்குதளத்தை அப்கிரேட் செய்ய 119 டொலர்கள் செலுத்த வேண்டும் என்று மைக்ரோசாஃப்ட் நிறுவனம் கூறியுள்ளது.

02 June 2016

பேஸ்புக் மற்றும் மைக்ரோசொப்ட் இணைந்து உருவாக்கும் பாரிய இணைய வலையமைப்பு

கணினி  உலகில் மைக்ரோசொப்ட் நிறுவனமும்,இணைய உலகில் பேஸ்புக் நிறுவனமும் அசைக்க முடியாத இடத்தில் உள்ளன.தற்போது இவ் இரண்டு நிறுவனங்களும் இணைந்து பாரிய இணைய வலையமைப்பு ஒன்றினை உருவாக்க முன்வந்துள்ளன.

இதன்படி அட்லாண்டிக் சமுத்திரத்திற்கு ஊடாக சுமார் 4,000 மைல் நீளம் கொண்ட வலையமைப்பினை உருவாக்கவுள்ளன.இவ் வலையமைப்பானது அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளை இணைக்கும் முகமாக உருவாக்கப்படவுள்ளது.


இதன் மூலம் 160Tbps எனும் வேகத்தில் தரவுகளைக் கடத்த முடியும் என எதிர்பார்க்கப்படுகின்றது.மேலும் இந்த வலையமைப்பு உருவாக்கம் ஆனது எதிர்வரும் 2017ம் ஆண்டு அக்டோபர் மாதம் நிறைவு செய்யப்படக்கூடிய வகையில் திட்டமிடப்பட்டுள்ளது.இத் திட்டத்திற்காக சுமார் 200 மில்லியன் டொலர்கள் வரை முதலீடு செய்யப்பட்டுள்ளது.

27 May 2016

மைக்ரோசொப்ட் கணக்கு வைத்திருப்பவரா நீங்கள்? அதிரடி மாற்றத்திற்கு தயாராகுங்கள்

இன்றைய கணினி உலகிற்கு அத்திவாரம் போட்டதில் மைக்ரோசொப்ட் நிறுவனத்திற்கும் பெரும் பங்கு உண்டு.இந் நிறுவனத்தின் பல சேவைகளை இன்று மில்லியன் கணக்கான பயனர்கள் பயன்படுத்தி வருகின்றனர்.இச் சேவைகளை பயன்படுத்துவதற்காக கணக்குகளை கையாள்பவர்களும் இருக்கின்றனர்.

கணக்குகளை கையாளும்போது அதற்கான கடவுச் சொற்களை பயனர்களே தாம் விரும்பியவாறு தேர்ந்தெடுக்கும் வசதியினை ஏனைய நிறுவனங்கள் போன்று மைக்ரோசொப்ட் நிறுவனமும் வழங்கி வந்தது.எனினும் இக் கடவுச் சொற்களுள் பாதுகாப்பு குறைவானதும், இலகுவாக கண்டுபிடிக்கக்கூடிய கடவுச் சொற்களும் அடங்குகின்றன.

இதனால் கடந்த காலங்களில் தனி நபர் தகவல்களை திருடும் செயற்பாடுகளில் அதிகளவில் காணப்பட்டன.இதனைத் தடுப்பதற்காக மைக்ரோசொப்ட் நிறுவனம் புதிய நடைமுறை ஒன்றினை கொண்டுவரவுள்ளது.

இதன்படி பயனர்கள் கடவுச் சொற்களை தேர்ந்தெடுக்கும்போது அவற்றுள் பாதுகாப்பு குறைவான கடவுச் சொற்களை தடைசெய்து அவர்களுக்கு எச்சரிக்கை விடுக்கவுள்ளது.LinkedIn சமூகவலைத்தளத்தில் கணக்கு வைத்திருக்கும் 117 மில்லியன் பயனர்களுக்கும் பொருந்தும்.

01 April 2016

இணைய உலாவியில் புத்தம் புதிய வசதி

கூகுளின் குரோம் இணைய உலாவி மற்றும் மொஸிலாவின் பயர்பாக்ஸ் உலாவி என்பவற்றிற்கு போட்டியாக காணப்பட்ட இன்டர்நெட் எக்ஸ்புளோரர் எனும் உலாவியினை இன்று அதிகளவானவர்கள் மறந்திருப்பார்கள்.காரணம் மைக்ரோசொப்ட் நிறுவனம் விண்டோஸ் 10 இயங்குதளத்தில் இன்டர்நெட் எக்ஸ்புளோரர் உலாவிக்கு விடைகொடுத்து எட்ஜ் எனும் புதிய உலாவியினை அறிமுகம் செய்திருந்தது.

இதனால் இன்டர்நெட் எக்ஸ்புளோரரின் பாவனை வெகுவாக குறைந்துள்ளது.இதற்கிடையில் தனது புதிய எட்ஜ் உலாவியில் பயனர்களுக்கு நன்மை பயக்கக்கூடிய வகையில் விளம்பரங்களை தடை செய்யும் வசதியினை தற்போது மைக்ரோசொப்ட் நிறுவனம் அறிமுகம் செய்யவுள்ளது.

இவ் வசதியானது நேரடியாகவும், நீட்சிகளைப் பயன்படுத்துவதன் ஊடாகவும் ஏனைய உலாவிகளில் கிடைக்கின்றமை சுட்டிக்காட்டத்தக்கது.

02 January 2016

பயனர்களுக்கு மைக்ரோசொப்ட் விடுக்கும் அவசர எச்சரிக்கை

கூகுள், பேஸ்புக், யாகூ போன்ற நிறுவனங்கள் தமது பயனர்களை பாதுகாப்பாக வைத்திருப்பதற்கு எச்சரிக்கைகள் செய்வது வழக்கம்.இவற்றின் வரிசையில் மைக்ரோசொப்ட் நிறுவனமும் தற்போது இணைந்துள்ளது.

அதாவது ஒவ்வொரு நாட்டு அரசாங்கமும் தற்போது இணையத்தளங்கள் மூலமாக பல்வேறு கண்காணிப்புக்களை மேற்கொண்டு வருகின்றன.இதனால் பயனர்களின் தனிப்பட்ட தகவல்கள் அனுமதியின்றி கையாளப்படுவதற்கு வாய்ப்புக்கள் காணப்படுகின்றன.

இதனை தவிர்த்து சிறந்த சேவையை வழங்குதற்காக ஏனைய நிறுவனங்களைப் போன்றே மைக்ரோசொப்ட் நிறுவனமும் தனது பயனர்களை அவதானமாக இருக்குமாறு எச்சரிக்கை செய்துள்ளது.

19 July 2015

நோக்கியாவை டைவர்ஸ் செய்தது மைக்ரோசாஃப்ட் - ஒரு விரிவான அலசல்!

நோக்கியாவை லாபம் தராத முதலீடாக ஒதுக்கிவிட்டது மைக்ரோசாஃப்ட். கடந்த வருடம்தான் நோக்கியாவை 7.6 பில்லியன் டாலர்களுக்கு வாங்கியது. முன்னாள் மைக்ரோசாஃப்ட் தலைவர் ஸ்டீல் பால்மர் -ன் இந்தக் காரியம் அப்போதே தீவிரமாக விமர்சிக்கப்பட்டது. இந்நாள் தலைவர் சத்யா நாதெள்ள, அந்தத் தவறை இப்போது சரிசெய்ய விரும்புகிறார் போல. 

'நிர்வாகத்தில் கடுமையான முடிவுகளை எடுக்கப்போகிறோம். தயாராக இருங்கள்’ என்று கடந்த ஜூன் மாதமே சத்யா அனைவருக்கும் மெமோ அனுப்பியிருந்தார். இப்போது விண்டோஸ் ஃபோன் ஹார்டுவேர் துறையில் பணிபுரியும் 7,800 பேரை வேலையில் இருந்து நிறுத்த இருப்பதாக அறிவித்துள்ளார் சத்யா நாதெள்ள. மேலும், 7.6 பில்லியன் டாலர் மதிப்புள்ள நோக்கியா முதலீடை ‘ஜஸ்ட் லைக் தட்’ ஒதுக்கிவிட்டார் சத்யா. 


என்ன பிரச்னை? 


விண்டோஸ் ஃபோன் வர்த்தகம் இருக்கட்டும். மைக்ரோசாஃப்ட்-ன் எதிர்காலமே யாராலும் கணிக்க முடியாதது போல் இருக்கிறது. கூகுள், ஆப்பிள் போன்று தன்னுடைய எதிர்காலம் குறித்த தெளிவு இல்லாமல் மைக்ரோசாஃப்ட் தடுமாறுவதாக எக்ஸ்பர்ட்டுகள் கருதுகிறார்கள். 


ஆனால் பிரச்னையே மைக்ரோசாஃப்ட்டை ஆப்பிள், கூகுள் போன்ற நிறுவனங்களோடு ஒப்பிடுவதுதான். ஏனென்றால், அடிப்படையில் மைக்ரோசாஃப்ட் ஒரு சாஃப்ட்வேர் நிறுவனம். ஆப்பிள் ஒரு ஹார்டுவேர் நிறுவனம். தன்னுடைய விண்டோஸ் ஆபரேட்டிங் சிஸ்டத்தை உலகம் முழுக்க கொண்டுசேர்த்ததுதான் மைக்ரோசாஃப்ட்-ன் சாதனை. தன்னுடைய கேட்ஜெட்டுகளை உலகம் முழுக்க ‘கெத்து’ கேட்ஜெட்டுகளாக மார்கெட் செய்தது ஆப்பிள்-ன் சாதனை. 





இங்குதான் ஒரு ட்விஸ்ட். மைக்ரோசாஃப்ட் நிறுவனமும்தான் ஸ்மார்ட்ஃபோன்களைத் தயாரித்தது. ஆனால், ஏன் பிரபலமாகவில்லை? இங்குதான் மைக்ரோசாஃப்ட், ஆப்பிள் போன்ற நிறுவனங்கள் அடிப்படையில் வேறுபட்டிருந்தாலும் ஒரே புள்ளியில் இணைகின்றன. 


ஆப்பிள், ஆண்ட்ராய்டு ஃபோன்கள் பெறும் வெற்றி பெற்றதற்கு முக்கியக் காரணம் அதன் டிஸைனோ, ஆபரேட்டிங் சிஸ்டமோ, வசதிகளோ இல்லை. பிஸினஸ் எக்கோசிஸ்டம்தான் இவற்றின் வெற்றிக்கு மிக முக்கியக் காரணம். 


ஆப்பிள் நிறுவனம் ஹார்டுவேர், சாஃப்ட்வேரை மட்டும் உருவாக்கிவிட்டு, அப்ளிகேஷன் டெவலப்பர்களுக்கு கதவைத் திறந்துவிட்டது. அதனால், அதன் வர்த்தகம் தொடர்ச்சியாக வெற்றி பெற்றது. 


கூகுள் நிறுவனம் ஆண்ட்ராய்டு ஆபரேட்டிங் சிஸ்டத்தைக் கொடுத்துவிட்டு, அப்ளிகேஷன் டெவலப்பர்களை வாரியணைத்துக்கொண்டது. சாம்சங், எல்ஜி, லெனோவோ போன்ற ஹார்டுவேர் நிறுவனங்களுக்கு இதுபெரும் வசதியாகப்போய் விட்டது. முன்புபோல் ஒவ்வொரு ஃபோனுக்கும் தனித்தனியாக ஆபரேட்டிங் சிஸ்டம் உருவாக்கத் தேவையில்லை. ஹார்டுவேரை மட்டும் உருவாக்கிவிட்டு, நிம்மதியாக இருந்தன. இந்த பிஸினஸ் எக்கோசிஸ்டத்தை மைக்ரோசாஃப்ட் முழுமையாக பயன்படுத்திக்கொள்ளவில்லை. 







பிரச்னை என்னவென்றால், விண்டோஸ் ஃபோன் முயற்சி மூலம் ஒரு அப்ளிகேஷன் டெவலப்பர், ஹார்டுவேர் உருவாக்கம், ஆபரேட்டிங் சிஸ்டம் டெவலப்மென்ட் என அனைத்து துறைகளையும் தானே செய்துகொள்ளமுடியும் என்று நினைத்ததுதான் மைக்ரோசாஃப்ட்-ன் தவறு. அவசரப்பட்டுவிட்டோம் என்று சுதாரிப்பதற்குள் நோக்கியாவையும் வாங்கி தன்கையை தானே கட்டிப் போட்டுக்கொண்டது மைக்ரோசாஃப்ட். 


என்னதான் நோக்கியாவை வைத்துக்கொண்டு மைக்ரோசாஃப்ட் ஃபோன்களை விண்டோஸ் ஆபரேட்டிங் சிஸ்டத்துடன் லூமியா ஃபோன்களைக் கொண்டுவந்தாலும் சந்தையில் எடுபடவில்லை. காரணம், அப்ளிகேஷன் டெவலப்பர்களை முழுமையாக உள்ளே விடாமல் இருந்ததால்தான். இன்னொரு பக்கம் ஆப்பிள் உயர்ரக செக்மென்ட்டை குறிவைத்து ஒவ்வொரு முறையும் வெற்றிபெற, ஆண்ட்ராய்டு ‘மாஸ் ஆடியன்ஸ்’ ஃபார்முலாவில் எல்லோர் கையிலும் ஸ்மார்ட்ஃபோனைத் திணிக்க, தன்னுடைய டார்கெட் வாடிக்கையாளர்கள் யார் என்பதிலேயே இன்னும் குழப்பமாக இருந்தது மைக்ரோசாஃப்ட். உயர்ரக லூமியா ஃபோன்கள் விற்பனைக்கு வரும். ஒரே மாதத்துக்குள் பட்ஜெட் லூமியா ஃபோன்களும் வரும். ஆப்பிள் இந்தத் தவறை செய்ததே இல்லை. ஒரு ஃபோன் என்றாலும் கெத்தாக சந்தைப்படுத்தும் வல்லமை படைத்தது ஆப்பிள். 


லூமியா ஃபோன்களின் விற்பனை தற்போது சூடுபிடித்துள்ளது. ஆனால், ஒட்டுமொத்த மார்கெட் ஷேர் மிகவும் குறைவு. காரணம், iOS மற்றும் ஆண்ட்ராய்டு-ன் மார்கெட் ஷேர் மிக மிக வேகமாக எகிறிக்கொண்டிருக்கிறது. மைக்ரோசாஃப்ட்-ன் ஃபோன் பிஸினஸ் கடந்த மூன்றாவது காலாண்டில் 1.4 பில்லியன் டாலர் வருவாயைக் குவித்திருக்கிறது. அதிகமாகத் தெரிகிறதா? இதே சமயம் ஆப்பிள் நிறுவனத்தின் ஐஃபோன் பிஸினஸ் வருவாய் மட்டும் 40.3 பில்லியன் டாலர்கள்! 


அப்ப விண்டோஸ் ஃபோன் அவுட்டா? 


ஃபோன் மார்கெட்டை புரிந்துகொண்டிருப்பதிலேயே தவறு இருக்கிறது என்பதை சமீபத்திய அறிக்கையில் சொல்லாமல் சொல்லியிருக்கிறார் சத்யா நாதெள்ள. 






சத்யா நாதெள்ள அனுப்பிய மெமோவில் இருந்து சில வரிகள்:
“I am committed to our first-party devices including phones. However, we need to focus our phone efforts in the near term while driving reinvention. We are moving from a strategy to grow a standalone phone business to a strategy to grow and create a vibrant Windows ecosystem that includes our first-party device family.”


ஸ்மார்ட்ஃபோன் வர்த்தகத்தில் எக்கோசிஸ்டம்தான் முதல் தேவை என்பதில் இப்போது தெளிவாக இருக்கிறது மைக்ரோசாஃப்ட். எப்படி? 
சமீபத்தில் மைக்ரோசாஃப்ட் வரிசையாக அப்ளிகேஷன் நிறுவனங்களை வாங்கிக் குவிக்க ஆரம்பித்தது. Wunderlist,Acompl, Sunrise போன்ற iOS, ஆண்ட்ராய்டு அப்ளிகேஷன் இப்போது மைக்ரோசாஃப்ட்-இடம். ஃபோன் பிஸினஸுக்காக தன்னை மேலும் பலப்படுத்தி வருவதற்கான சிக்னல் இது. 







இத்தனைக்கும் மைக்ரோசாஃப்ட்-ன் சமீபத்திய அப்ளிகேஷனான Tossup விண்டோஸ் ஃபோனுக்குக் கிடையாது. ஆப்பிள், ஆண்ட்ராய்டு பிளே ஸ்டோர்களில் மட்டுமே இருக்கிறது அந்த அப்ளிகேஷன். மைக்ரோசாஃப்ட்-ன் சொந்த ஒன்நோட், ஒன்டிரைவ் போன்ற அப்ளிகேஷன்களை இப்போது ஆண்ட்ராய்ட்-ல் இயங்கு சாம்சங் கேலக்ஸி S6 ஃபோனில் ப்ரி-இன்ஸ்டால் செய்து வாங்கமுடியும். அதற்காக சாம்சங்குடன் ஒப்பந்தமும் போட்டிருக்கிறது மைக்ரோசாஃப்ட். இப்போது அப்ளிகேஷன் டெவலப்பர்களையும் ஆண்ட்ராய்டு, iOS-க்கு அப்ளிகேஷன்களை டெவலப் செய்யச் சொல்கிறது மைக்ரோசாஃப்ட். 

இன்னும் எக்ஸ்க்ளூசிவ்வான தகவல், மைக்ரோசாஃப்ட்-ன் Cortana பெர்சனல் டிஜிட்டல் அஸிஸ்டன்ட் iOS, ஆண்ட்ராய்டு ஃபோன், டேப்லட்களுக்கு வர இருப்பதுதான்.

ஜூலை 29-ம் தேதி உலகம் முழுக்க விண்டோஸ் 10 ஆபரேட்டிங் சிஸ்டம் விற்பனைக்கு வர இருக்கிறது. கம்ப்யூட்டர்கள், டேப்லட்கள், ஃபோன்கள் என அனைத்து சாதனங்களிலும் ஒருங்கிணைந்து இயங்கக்கூடியது இந்த ஆபரேட்டிங் சிஸ்டம். இனி, ஒரு அப்ளிகேஷன், கேம், சாஃப்ட்வேர் டெவெலப்பர்கள் வெவ்வேறு சாதனங்களுக்கு தனித்தனியாக டெவலப் செய்யத் தேவையில்லை. ஒரே கோடிங்தான்! யூஸர் இன்ட்டர்ஃபேஸ் மட்டும் மாறுபடும். இது டெவலப்பர்களுக்கு வரப்பிரசாதம்!பின்னாலேயே ஹார்டுவேர் நிறுவனங்களும் வந்துவிடும்.



எனவே, விண்டோஸ் ஃபோன் வர்த்தகத்தை மைக்ரோசாஃப்ட் முழுமையாக கைவிடவில்லை. விண்டோஸ் 10 எனும் ஒரே ஆபரேட்டிங் சிஸ்டம் மூலம் டெஸ்க்டாப், மொபைல், டேப்லட் என 3 கோல்களையும் போட இருக்கிறது மைக்ரோசாஃப்ட்.

பதுங்கிப் பாயத் தயாராகிவிட்டதோ மைக்ரோசாஃப்ட்?

நன்றி ர. ராஜா ராமமூர்த்தி

12 July 2015

இணையதளத் தீமைகளிலிருந்து சிறுவர்களைப் பாதுகாக்க

இன்றைய சூழலில், சிறுவர்கள் உலகோடு தொடர்பு கொள்ள, பெர்சனல் கம்ப்யூட்டர், லேப்டாப், ஸ்மார்ட் போன் அல்லது டேப்ளட் என எதனையாவது பயன்படுத்தி இணையத்தோடு தொடர்பு ஏற்படுத்தி வருகின்றனர். 

28 August 2014

Dropbox தரும் அதிரடிச் சலுகை

ஆன்லைன் ஸ்டோரேஜ் வசதியை தரும் Dropbox ஆனது தற்போது Dropbox Pro எனும் புதிய திட்டத்தினை அறிமுகம் செய்துள்ளது.இத்திட்டத்தின்படி 9.99 டொலர் மாதாந்தக் கட்டணத்திற்கு 1TB (1000GB )சேமிப்பு வசதியினை பயனர்களுக்கு வழங்கவுள்ளது.இதற்கு முன்னர் 9.99 டொலர்களுக்கு 100GB சேமிப்பு வசதியும், 19.99 டொலர்களுக்கு 200GB சேமிப்பு வசதியும், 49.99 டொலர்களுக்கு 500GB சேமிப்பு வசதியினையும் Dropbox வழங்கிவந்தமை குறிப்பிடத்தக்கது

18 August 2014

விண்டோஸ் கணினிகளின் வேகத்தை அதிகரிப்பதற்கு மற்றுமொரு மென்பொருள்

வணக்கம் நண்பர்களே ,விண்டோஸ் இயங்குதளத்தினைக் கொண்ட கணினிகளின் செயற்பாட்டு வேகத்தினை அதிகரிப்பதுடன் , வேகம் குறைந்த கணினிகளின் செயற்பாட்டை அதிகரிப்பதற்கு என Avira System SpeedUp எனும் மென்பொருள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.