அன்பை பகிர்வோம்,அன்பால் இணைவோம்

22 January 2013

கூகிள் குரோம் அப்புறமா படிங்க பயனுள்ள நீட்சி

நாம்  இணையத்தில் ஏதாவது பயனுள்ள வலைப்பூக்களை பார்த்து, ’அட நல்ல விஷயமாக இருக்கிறதே! அவசியம் பிறகு சமயம் கிட்டும் பொழுது படிக்க வேண்டும்’ என பல சமயங்களில் யோசித்ததுண்டு, ஆனால் சமயம் கிட்டும் பொழுது அந்த வலைப்பூ முகவரியை மறந்து போய் விடுவதும் நிகழ்கிறது.இந்த பணியை எளிதாக்க கூகுள் க்ரோம் (Google Chrome) உலாவியில் பயன்படுத்தும்படியான ஒரு உபயோகமான நீட்சி Read Later Fast ஆகும்.



இந்த பதிவின் இறுதியில் தரப்பட்டுள்ள லிங்கில் சென்று Install பொத்தானை அழுத்தி க்ரோம் உலாவியில் பதிந்து கொள்ளுங்கள்.


                             


இந்த நீட்சியை பதிந்து கொண்ட பிறகு, Toolbar button ஒன்று உருவாகியிருப்பதை கவனிக்கலாம்.


                              


இந்த ஐகானை  க்ளிக் செய்து அந்த பகுதிக்கு செல்லுங்கள்.

                                   



இப்படியாக Read Later fast இல் தொகுத்து வைத்துள்ள வலைப்பக்கங்களை பார்வையிட, அந்த ஐகானை க்ளிக் செய்து அதில் தேவையான வலைபக்கத்தை க்ளிக் செய்து பார்வையிடலாம்.குறித்து வைத்த வலைப்பக்கங்களை படித்த பின்னர், அந்த பக்கங்கள், பட்டியலிலிருந்து நீக்கப்பட்டு, எண்ணிக்கை குறைவதை கவனிக்கலாம்.


                                          Read Later fast நீட்சி தரவிறக்க.

3 comments:

  1. இது போல் பல சமயங்களில் நேர்வதுண்டு.பின்னர் மீண்டும் தேடுபொறியில் தேடுவதற்குள் ஒரு வழியாகி விடுகிறது. பயனுள்ள பதிவு
    பயர் பாக்சில் இது போன்ற வசதி உண்டா?

    ReplyDelete
  2. அட! ரொம்ப உபயோகமான பதிவு! மிக்க நன்றி!

    ReplyDelete
  3. முதல் வலைபக்கத்தை எப்படி தொகுப்பது என்று சொல்லவும்
    நன்றி

    ReplyDelete

நண்பனிடம் சொல்லுங்க,,,,,,,,,
பிடிச்சிருந்தாலும்....இல்லை என்றாலும் ;)