நாம் எத்தனையோ வலைப்பதிவுகளை தொடர்ந்து வாசித்து வருவோம். அப்படி வாசித்து வரும் வலைப்பதிவுகளை தினமும் நாளிதழ் வடிவில் படித்தால் எப்படி இருக்கும். இதற்காகவே கூகிள் குரோம் பிரவுசர் மூலம் கூகுள், பீட்லி என்ற சேவையை வழங்குகிறது.
இந்த சேவையை பெற நாம் முதலில் குரோம் பிரவுசரை உபயோகப்படுத்தவேண்டும். குரோம் பிரவுசரை தரவிறக்கம் செய்ய இங்கு கிளிக் செய்யவும்.
இந்த பீட்லி சேவை மூலம் நமது டிவிட்டர், பஸ் போன்ற தளங்களையும் நாளிதழ் வடிவில் காணமுடியும். Feedly Extension தரவிறக்கம் செய்ய இங்கு கிளிக் செய்யவும். தரவிறக்கம் செய்தவுடன் உங்கள் குரோம் உலாவியில் அதனை நிறுவிக்கொள்ளவும். நிறுவியபின் குரோமில் வலப்பக்கத்தில் பச்சை வண்ணத்தில் ஒரு முக்கோணம் போன்று தோன்றும்.
அதை கிளிக் செய்தவுடன் உங்கள் புதிய விண்டோ ஒன்று தோன்றும். அதில் உங்கள் gmail கணக்கின் மூலம் உள்நுழைந்தவுடன் நீங்கள் பின் தொடரும் அனைத்து வலைப்பதிவுகளின் புதிய பதிவுகளும் நாளிதழ் வடிவில் தோன்றும். எது வேண்டுமோ கிளிக் செய்தால் அதே பக்கத்தில் முழு பதிவும் தோன்றும். படித்துவிட்டு அதை மட்டும் மூடிவிடலாம். இப்படி ஒரே பக்கத்தில் நீங்கள் பின் தொடரும் அனைத்து வலைபதிவுகளையும் படித்துவிடலாம்.
உங்கள் டிவிட்டர் கணக்கையும் இதிலேயே படித்துவிடலாம். நீங்கள் படிக்காத புதிய பதிவுகள் மட்டுமே முகப்பு பக்கத்தில் தோன்றுவது இதன் சிறப்பு. எத்தனை படிக்கவேண்டும் என்பதையும் காட்டுகிறது இந்த சேவை.
மேலும் வீடியோ பதிவுகள், புகைப்பட பதிவுகள் எனவும் பிரித்து காண்பிக்கிறது இந்த feedly. பயன்படுத்திபாருங்கள், கருத்துகளை கூறுங்கள்...
அருமையான தகவல் தந்தமைக்கு நன்றி நண்பரே!
ReplyDeleteஅருமையான பயனுள்ள தகவல் தந்தமைக்கு நன்றி
ReplyDelete