அன்பை பகிர்வோம்,அன்பால் இணைவோம்

19 February 2012

கூகிள் குரோம்(google chrome) உபயோகிப்பவர்களுக்கு மேலும் ஒரு புதிய வசதி ,,,

நாம் இணையத்தில் உலாவிக் கொண்டிருக்கும் பொழுது, ஒரு சில வலைப்பக்கங்கள் பல விளம்பரங்கள், பிற தகவலகள் என பலதும் கலந்த கலவையாக இருக்கும். அவற்றில் ஒரு குறிப்பிட்ட பகுதியை மட்டும் வாசிக்க வேண்டுமெனில், அருகிலுள்ள கலர் கலரான பிற விளம்பரங்கள், படங்கள், பிற செய்திகள் நமக்கு எரிச்சலை தரும் விஷயமாக இருப்பதுண்டு.இது போன்ற சமயங்களில் நமக்கு பெரும் துணையாக இருப்பது Google Chrome உலாவிக்கான Reading Glasses நீட்சி! 




(தரவிறக்க சுட்டி இறுதியில் தரப்பட்டுள்ளது).

Install பொத்தானை அழுத்தி உங்கள் கூகுள் க்ரோம் உலாவியில் பதிந்து கொண்ட பிறகு, இது நிறுவப்பட்டதற்கான அறிவிப்பு வலது மேற்புற மூலையில் தோன்றியிருப்பதை கவனிக்கலாம்.

இனி உங்களுக்கு தேவையான வலைப்பக்கங்களை திறந்து கொண்டு வாசிக்கிறீர்கள். உதாரணமாக..


இந்த பக்கத்தில் தலையங்கத்தை மட்டும் வாசிக்க வேண்டும் எனில், அதிலுள்ள டெக்ஸ்டின் ஏதேனும் ஒரு பகுதியை தேர்வு செய்து, வலது மேற்புற டூல்பாரில் உள்ள மூக்கு கண்ணாடி ஐகானை க்ளிக் செய்தால் போதுமானது.


நமக்கு தேவையான டெக்ஸ்ட்டை தவிர மற்றதனைத்தும் fade ஆகி, நாம் படிக்கும்பொழுது ஏற்படும் அலுப்பை தவிர்க்கிறது. மறுபடியும் பழையபடி மாற்ற, அதே ஐகானை க்ளிக் செய்தால் போதுமானது.

4 comments:

  1. பயனுள்ள தகவல்.
    நன்றி நண்பரே.

    ReplyDelete
    Replies
    1. உங்கள் கருத்துக்கு மிக்க நன்றி,,, என்றும் உங்கள் அன்பைத் தேடி,,ANBUTHIL

      Delete
  2. முயற்சி செய்து பார்த்தேன். நன்றாக இருந்தது., நன்றி.

    ReplyDelete
  3. முயற்சி செய்து பார்த்தேன். நன்றாக இருந்தது நன்றி.

    ReplyDelete

நண்பனிடம் சொல்லுங்க,,,,,,,,,
பிடிச்சிருந்தாலும்....இல்லை என்றாலும் ;)