அன்பை பகிர்வோம்,அன்பால் இணைவோம்

24 April 2012

இணையத்தில் வேகமாக உலவ உதவும் FIREFOX ADD ON

இணையத்தில் அதிகமாக உலவுபவர்களுக்கு மிகவும் பயனுள்ள ஃபயர்பாக்ஸ் நீட்சி  இது. (Firefox Browser add-on). எனக்கு மிகவும் பிடித்த பயன்பாடு - முடிவில்லா பக்கம் ("Endless Page").  நீங்கள் ஒரு வலைப்பூவைப் படித்துக் கொண்டிருக்கிறீர்கள் என்றால், முதல் பக்கம் படித்து முடிக்கும் முன்,  தானாகவே அடுத்த பக்கத்தைத் தரவிறக்கி வைத்திருக்கும்.  அதே போல், Google, yahoo போன்ற தேடுப்பொறிகளில் தேடிடும் பொழுதும், தானாகவே அடுத்தடுத்த பக்கங்களைத் தரவிறக்கம் செய்து தயாராக வைத்திருக்கும்.


இந்த நீட்சியைத் தரவிறக்கம் செய்திட, https://addons.mozilla.org/en-US/firefox/addon/9825

“Related Article” -  சில நேரங்களில், நாம் இணைய பக்கங்களில் புதிய தகவல்களைப் படித்திடும் போது, அதைப் பற்றி மேலும் அறிய, சந்தேகங்களைத் தீர்த்துக் கொள்ள விளைவோம். அதை எளிதாக்குகிறது, இந்த நீட்சி.  ஒரு வார்த்தையைத் தெரிவு (select) செய்த உடன், அதன் மேல், ஒரு பலூன் (Popup Ballon) தோன்றும், அதில் “Google Search", "Wikipedia Search", "Twitter Search" போன்ற அம்சங்கள் இருக்கும்.



மேலும், வார்த்தைகளைத் தெரிவு செய்தவுடன், தானாகவே “Copy" ஆகிவிடும். (காப்பி & பேஸ்ட் பதிவர்களுக்கு உதவும் என்று நினைக்கிறேன்.)

மேலும், Googleலில் தேடிடும் பொழுதும், தேடும் சொல்லிற்குச் சம்பந்தப்பட்ட நிறைய பக்கங்களை ”Amazon, Twitter" போன்ற இணைய தளங்களில் இருந்து, எடுத்துத் தருகிறது. 




“Awesome Toolbar” - இந்த வசதி, Google Chrome-ல் இருப்பது போல, நாம் Address bar-ல் type செய்ய ஆரம்பித்தவுடன், நாம் அடிக்கடி செல்லும் தளங்களைப் பட்டியலிடும்.


Ctrl + Space - தட்டினால் Quick launcher என்ற வசதி வருகிறது.அதிகம் பயன்படுத்தும் தளங்களை அதில் பட்டியலிட்டுக் கொண்டால், Cellphone-ல் Quick dial வசதி இருப்பது போல, ஒரே சொடுக்கில் நமக்கு விருப்பமான தளத்திற்குச் செல்லலாம்.  


நாம் பார்வையிடும் இணைய தள பக்கத்தில் உள்ள எல்லா சுட்டிகளையும், எல்லா படங்களையும் ஒரே சொடுக்கில் தரவிறக்கம் செய்யும் வசதியும் இதில் உள்ளது. 

இந்த நீட்சியைத் தரவிறக்கம் செய்ய, இங்கே செல்லவும்

5 comments:

  1. Not available for Firefox 13.0a2//புதிய வெர்சனுக்கு இல்லை போலும்

    ReplyDelete
    Replies
    1. தங்களின் முதல் வருகைக்கு நன்றி நண்பா மீண்டும் மீண்டும் அன்பை தேடி வருக

      Delete
  2. nanaba na mechanical engineering 3 yr padikura enaku english knowledge illa athuku yeathavathu software iruka tamil valiya english kathuka.....na innovative ah naraya project ellam senju vachu iruka athu ellam explain panna ...project ellam submit panna english than mukiyama theva paduthu enakaka intha help pannuga plzzzzzzzzzzz.........enaku BE mudichitu german(or)singapore la MS padikanum nu aasai padura....naanum ennanamo panni pathuda english varamataguthu ithu enaku periya kuraya theriuthu..

    ReplyDelete

நண்பனிடம் சொல்லுங்க,,,,,,,,,
பிடிச்சிருந்தாலும்....இல்லை என்றாலும் ;)