அன்பை பகிர்வோம்,அன்பால் இணைவோம்

11 June 2012

உங்கள் கணிணி குறித்த தகவல்களை மிக துல்லியமாக தெரிந்துகொள்ள

நண்பர்களே உங்கள் கணிணியில் உங்கள் கணிணியின் ட்ரைவர்கள் அப்டேட் செய்யப்பட்டுள்ளதா?, ஏதும் சந்தேகப்படும்படியான மென்பொருட்கள் நிறுவப்பட்டுள்ளதா?, எந்தெந்த கோப்புகள் உபயோகப்படுத்தப்படுகிறது, இதுமட்டுமில்லை உங்கள் கணிணியின் திறன் மற்றும் வன்பொருள்கள் குறித்த தகவலையும் பெறலாம் இந்த ஒரே மென்பொருள் மூலம்.இந்த மென்பொருளை வடிவமைத்தவர்கள் காஸ்பர்ஸ்கை ஆன்டிவைரஸ் நிறுவனத்தினர்.


இதை எப்படி செய்வது?

இந்த தளத்திலிருந்து இந்த மென்பொருளை தரவிறக்கி கொள்ளுங்கள்.

மென்பொருள் தரவிறக்க சுட்டி

மென்பொருளை தரவிறக்கிய பின் நிறுவத் தேவையில்லை நேரடியாக இயக்கலாம். இயக்கியவுடன் கீழிருக்கும் படம் போல உங்களை கேட்கும். உடனே I Agree என்பதனை தேர்வு செய்யுங்கள்.


systeminfo/anbuthil.com


அதன் பிறகு மென்பொருள் திறக்கப்படும்.
systeminfo/anbuthil.com

மென்பொருளில் Create Report என்பதனை தேர்வு செய்யுங்கள்.

அனைத்து வேலைகள் முடிந்தவுடன் சுருக்கப்பட்ட (ZIP) கோப்பாக சேமிக்கப்படும்.







பிறகு இந்த தளம் செல்லுங்கள் இணையத்தளசுட்டி







systeminfo/anbuthil.com


இந்த தளத்தில் Browse என்பதனை தேர்வு செய்து கொள்ளுங்கள். சேமித்த ZIP கோப்பினை தேர்வு செய்யுங்கள். பிறகு Submit என்பதனை தேர்வு செய்யுங்கள். முடிந்தது பிறகு உங்கள் சில விநாடிகளில் உங்கள் கணிணி குறித்த தகவல்கள் சுலபமாக பெறலாம்.




6 comments:

  1. payanulladhaaga irundhadhu nanbare nandri
    surendran
    surendranath1973@gmail.com

    ReplyDelete
  2. நல்ல தகவல். உபயோகப்படுத்திப் பார்க்கிறேன்.

    ReplyDelete
  3. பகிர்வுக்கு நன்றி. நேரம் கிடைக்கையில் பயன்படுத்தி பார்கிறேன்

    ReplyDelete
  4. தகவலுக்கு நன்றி நண்பா ..!

    ReplyDelete
  5. இந்த பதிவிற்கு கருத்து தெரிவித்த அணைத்து இனைய இனிய நண்பர்களுக்கு நன்றி

    ReplyDelete

நண்பனிடம் சொல்லுங்க,,,,,,,,,
பிடிச்சிருந்தாலும்....இல்லை என்றாலும் ;)