அன்பை பகிர்வோம்,அன்பால் இணைவோம்

21 August 2014

கூகிளுக்கு மாற்றான சிறந்த சர்ச் என்ஜின்

நமக்கு வேண்டிய தகவல்களை இன்டர் நெட்டில் தேட பெரும்பாலானோர் பயன்படுத்துவது கூகுள் சர்ச் இஞ்சின் தான். இவ்வகையில் கூகுள் மட்டுமே இந்த கம்ப்யூட்டர் உலகின் ஒரே ஒரு சர்ச் இஞ்சின் போலத் தோற்றத்தை உருவாக்கி உள்ளது. தேடல் பிரிவில் ஏறத்தாழ 70% பேர் கூகுள் தளத்தையே பயன்படுத்துகின்றனர்.

இத்துடன் யாஹூ மற்றும் எம்.எஸ்.என். ஆகியவற்றையும் சேர்த்தால் 90% வந்துவிடுகிறது. அப்படியானால் வேறு சர்ச் இஞ்சின்கள் உள்ளனவா? என்று உங்கள் மனதில் ஓடும் எண்ணங்கள் தெரிகின்றன.ஆம், இன்னும் பல சர்ச் இஞ்சின்கள் சிறப்பாகச் செயல்பட்டுக் கொண்டு தான் இருக்கின்றன. அவற்றைப் பற்றி இங்கு காணலாம். அவை எப்படி செயல்படுகின்றன என்பதற்காக ஓரிருமுறை இவற்றைப் பயன்படுத்திப் பாருங்களேன்.

                             

1.www.chacha.com : சிறப்பாகச் செயல் படும் சர்ச் இஞ்சின். தற்போது இது அமெரிக்காவில் மொபைல் போனுக்கும் தேடிய தகவலை அனுப்புவதால் இந்த தளத்திற்குச் சென்றவுடன் மொபைல் போனில் நாம் தேடும் சொற்களைக் கேட்டு தளம் திறக்கப்படும். இதில் looking for chacha classic என்ற இடத்தில் கிளிக் செய்தால் கம்ப்யூட்டரிலேயே முடிவுகள் தருவதற்கான டெக்ஸ்ட் விண்டோ கிடைக்கும். இதில் டெக்ஸ்ட் டைப் செய்தால் கூகுள் தளத்தில் கிடைப்பது போலவே தகவல்கள் கிடைக்கின்றன. இதற்கு எந்த ரெஜிஸ்ட்ரேஷனும் தேவையில்லை.

2. www.ask.com : இந்த தளத்தினை நம் நாட்டில் பலர் பயன்படுத்துகின்றனர். இதன் சிறப்பு இது நம்மை வழி நடத்தும் விதம் தான். நம் தேடல் தன்மையைப் புரிந்து கொண்டு தேடல் வழிகளை இன்னும் சுருக்கி தேடும் தளங்களைப் பட்டியலிடும். எடுத்துக் காட்டாக computer tips எனத் தேடப் போகையில் computer tips and tricks எனத் தேடலாமே? என்று வழி காட்டும்.computer tips and tricks எனத் தேடப்போனால் windows xp tricks அல்லது word tips எனத் தேடலாமா? என்று கேட்கும். மிக மிகப் பயனுள்ள தேடு தளம்.

3.www.draze.com : கூகுள் அளவிற்கு தகவல்களை இந்த தளம் அளிக்கிறது. மேலும் மற்ற தளங்களோடு எங்கள் தேடலையும் ஒப்பிட்டுப் பாருங்கள் என்று சவால் விட்டு மற்றதில் தேடுகையில் என்ன என்ன இல்லை என்று பட்டியலிடுகிறது. திறன் கொண்ட சற்று சவாலான தளம் இது.

7 comments:

  1. தங்களின் தொழில் நுட்ப பதிவுகளை தொடர்ந்து படித்து வருகிறேன் ,உங்களின் சேவை தொடர வாழ்த்துக்கள் !
    த ம 2

    ReplyDelete
    Replies
    1. தங்களின் கருத்துக்கு நன்றி

      Delete
  2. theriyaadha thagavl padhivittamaikku nandri
    surendran, guntur

    ReplyDelete
  3. ஆஸ்க் காம் பயன்படுத்தியுள்ளேன்! மற்றவை பயன்படுத்தியதில்லை! பயனுள்ள தகவல்! நன்றி!

    ReplyDelete
    Replies
    1. தங்களின் கருத்துக்கு நன்றி

      Delete

நண்பனிடம் சொல்லுங்க,,,,,,,,,
பிடிச்சிருந்தாலும்....இல்லை என்றாலும் ;)