நாம் வெளியிடங்களுக்கு செல்லும் போது எதிர்பாராமல் மொபைல் போன் தொலைந்து விட்டால் உடனடியாக நாம் அந்த எண்ணுக்கு போன் செய்வோம்.
சுவிட்ச் ஆப் செய்யப்பட்ட பின் மொபைல் இருக்கும் இடத்தை கண்டறிய முடியுமா? என்றால் கண்டிப்பாக முடியும்.
நம் அனைவரின் மொபைல் போனுக்கும் தனித்தனியாக IMEI நம்பர் கொடுக்கப்பட்டு இருக்கும். இதன் மூலம் நம் மொபைல் இருக்கும் இடத்தை எளிதாக கண்டறியலாம்.
IMEI நம்பர்
IMEI நம்பர் என்பது நம் மொபைலில் உள்ள 15 இலக்க எண்ணாகும். மொபைல் போன் எந்த நாட்டை சேர்ந்தது, தற்போது எந்த நெட்வொர்க்கில் உள்ளது என்பதை அறியப்பயன்படுகிறது.
பேட்டரியின் பின் புறத்தில் IMEI நம்பர் ஆனது குறிப்பிடப்பட்டு இருக்கும். இதனை மொபைலில் *#06# என்னும் எண்ணுக்கு அழைத்தும் தெரிந்து கொள்ளலாம்.
2003-ம் ஆண்டில் முதன் முதலாக அவுஸ்திரேலியாவில் தான் இந்த எண் அறிமுகப்படுத்தப்பட்டது. போலியாக வரும் மொபைல் போன்களை அடையாளம் காணவே இது பயன்படுத்தப்பட்டது.
IMEI நம்பர் வைத்து மொபைல் இருக்கும் இடத்தை அறியலாம். இது மட்டுமல்லாமல் இந்த எண்ணை வைத்து மொபைல் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வருவதும் எளிது
மொபைலில் வேறு சிம் கார்டு பயன்படுத்தப்பட்டாலும் மொபைல் இருக்கும் இடத்தை ட்ராக் செய்வது எளிது.
சாதாரண நபர்களால் மொபைலை கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வரவோ அல்லது மற்ற விவரங்களை தெரிந்து கொள்ளவோ இயலாது. ஆனால் மொபைல் நிறுவனங்களுக்கு இது சாத்தியமே.
எனினும் மொபைல் நிறுவனங்கள் அவ்வளவு எளிதாக இந்த விவரங்களை யாருக்கும் தருவதில்லை.
சில ஹேக்கர்கள் இரகசியமாக இந்த வேலை செய்து மற்றவர்களின் விவரங்களை எளிதாக திருடிவிடுகின்றனர்.