ஸ்கேம் ஆர்டிஸ்ட்ஸ் தற்போது வாட்ஸ்ஆப் சந்தா கட்டணம் என்றவொரு மோசடி மூலம் இன்ஸ்டன்ட் மெசேன்ஜர் ஆன வாட்ஸ்ஆப் பயனர்களை கட்டணம் செலுத்த வைத்து வருகின்றனர் என்பதால் வாட்ஸ்ஆப் பயனர்கள் இது சார்ந்த விடயத்தில் மிக கவனமாக இருக்கும் வண்ணம் கேட்டுக்கொள்கிறோம்.
உங்கள் சந்தா காலாவதியாகிவிட்டது, உங்கள் கணக்கை சரிபார்க்கவும், ஒரு வாழ்நாள் சந்தாவை வெறும் 0.99 ஜிபிபி-ல் பெற இந்த இணைப்பைத் தட்டவும்" என்ற செய்தியால் மக்கள் இலக்கு வைக்கப்பட்டுள்ளனர் - என்று இந்திபெண்டண்ட்.கோ.யூகே தகவல் கொடுத்துள்ளது.
பல ஆண்டுகளுக்கு முன்னர் ஒரு சிறிய அளவிலான தொகையை வசூலித்த உடனடி மெஸ்ஸெஞ்சர் ஆன வாட்ஸ்ஆப் இப்போது முற்றிலும் இலவசமாக பதிவிறக்கம் மற்றும் பயன்பாடுகளை அனுமதிக்கிறது என்பது இங்கு குறிப்பிடத்தக்கது. தற்போது வெளியான வண்ணம் இருக்கும் சந்தேகத்திற்கிடமான இணைப்பைக் கிளிக் செய்வதின் மூலம் ஸ்கேமார்களுக்கு பயனர்கள் தங்கள் கட்டண விவரங்களை திருட வழிவகுக்கும். எனவே இந்த செய்தியைப் பெற்றவர்கள் அதை உடனடியாக நீக்க வேண்டும்.
ஒருவேளை நீங்கள் ஏற்கனவே இந்த குறிப்பிட்ட இணைப்பைக் கிளிக் செய்திருந்தால், தீம்பொருளால் பாதிக்கப்படுவதில்லை என்பதை உறுதிப்படுத்த உங்கள் சாதனத்தில் உள்ள வைரஸ் தடுப்பு மென்பொருளை இயங்கச் செய்வதன் மூலம் உங்களை பாதுகாத்துக் கொள்ளளவும். அல்லது இன்னும் ஒருபடி மேல் சென்று வெறுமனே இதுபோன்ற செய்தியை அனுப்பும் பயனரைத் பிளாக் செய்வது நல்லது. இதனால் அவர்களால் இனிமேல் இதுபோன்ற தீம்பொருள் செய்திகளை அனுப்பவோ அல்லது அழைக்கவோ முடியாது.