அன்பை பகிர்வோம்,அன்பால் இணைவோம்

13 February 2018

ஏர் செல் கம்பெனி மூடப்படுகிறது

கடன் நெருக்கடி காரணமாக ஏர்செல் கம்பெனி மூடப்படுகிறது என அக்கம்பெனியின் செய்தி வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

இது தொடர்பாக அந்த கம்பெனியின் மூத்த அதிகாரி ஒருவர் பத்திரிகையாளர்களிடம் கூறியுள்ளதாவது

கடந்த செப்டம்பர் மாதம் அனில் அம்பானியில் ஆர்காம் நிறுவனத்துடன் ஏர்செல் கம்பெனியுடன் இணைய உள்ளதாக அறிவிக்கப்பட்டது. 
ஆனால், இந்த இணைப்பு திட்டம் சில காரணங்களால் பின்வாங்கப்பட்டது. இந்நிலையில், 75 மில்லியன் வாடிக்கையாளர்களை பெற்றுள்ள ஆர்காம் நிறுவனம் வாய்ஸ் கால் சேவையை நிறுத்த முடிவு செய்தது. 

இதனையடுத்து தற்போது, அதோடு ஏர்செல் கம்பெனியானது தற்போதைய சந்தைக்கு ஈடுகொடுக்கும் வகையில் 4ஜி அலைக்கற்றைகள் இல்லை. புதிய 4ஜி அலைக்கற்றைகளை வாங்க முடியாமல் ஏர்செல் கம்பெனியானது நிதி நெருக்கடியில் சிக்கியுள்ளது. 
எனவே, வேறுவழியின்றி தனது 8 கோடியே 90 லட்சம் வாடிக்கையாளர்களை ஒரு நிறுவனத்துக்கும் 40 ஆயிரம் டவர்களை வேறு நிறுவனத்துக்கும் விற்க ஏர்செல் கம்பெனியானது திட்டமிட்டுள்ளது. இதனால் ஏர்செல் கம்பெனியானது தற்போதைக்கு மூடப்படுகிறது.