இந்தியாவின் ஆன்மாவிற்காகவும், அதன் எதிர்காலத்திற்காகவும் இன்று (ஏப்.,11) அனைவரும் ஓட்டளியுங்கள் என காங்., தலைவர் ராகுல் கேட்டுக் கொண்டள்ளார்.
லோக்சபா தேர்தலில் இன்று (ஏப்.,11) முதல்கட்டமாக 20 மாநிலங்களில் உள்ள 91 தொகுதிகளுக்கு தேர்தல் நடக்கிறது. அத்துடன் ஆந்திரா, ஒடிசா, சிக்கிம், அருணாசலபிரதேசத்தில் சட்டசபை தேர்தலுக்கும் இன்று ஓட்டுப்பதிவு நடக்கிறது.
இது தொடர்பாக டுவிட்டரில் ராகுல் வெளியிட்டுள்ள அறிக்கை: 2 கோடி வேலைகள் இல்லை. வங்கி கணக்கில் ரூ.15 லட்சம் போடவில்லை. நல்ல காலமும் பிறக்கவில்லை. அதற்கு பதிலாக, வேலையின்மை, பணமதிப்பிழப்பு, வலியில் விவசாயிகள், கப்பர் சிங் வரி (ஜிஎஸ்டி), சூட் பூட் சர்கார், ரபேல், பொய்கள். பொய்கள். பொய்கள். அவநம்பிக்கை, வன்முறை, வெறுப்பு, பயம். நாட்டின் ஆன்மாவிற்காக இன்று நீங்கள் ஓட்டளியுங்கள். அதன் எதிர்காலத்திற்காக ஓட்டளியுங்கள். சிந்தித்து ஓட்டளியுங்கள். இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.