ஹெலிகாப்டரில் துணியால் மறைத்து வைக்கப்பட்டிருந்த அதனைப் பெட்டியை வெடிகுண்டு நிபுணர் குழு எடுத்துச் சென்று அப்புறப்படுத்தினர். அதிகாரிகள் அனைவரும் அவசரமாக அந்தப் பெட்டியை தூக்கிக்கொண்டு ஓடிய வீடியோவும் சமூக வலைத்தளங்களில் பரவுகிறது.
ஹைலைட்ஸ்
மோடி ஹெலிகாப்டரில் துணியால் மறைத்து வைக்கப்பட்டிருந்த கருப்புப் பெட்டி
மோப்ப நாய் கண்டுபிடித்ததும் போலீசார் அவசரமாக எடுத்துச் சென்றனர்.
பிரதமர் நரேந்திர மோடியின் ஹெலிகாப்டரிலிருந்து எடுக்கப்பட்ட பெரிய கருப்புப் பெட்டி குறித்து விசாரணை நடத்த காங்கிரஸ் வலியுறுத்தியுள்ளது.
மக்களவைத் தேர்தலை முன்னிட்டு பிரதமர் மோடி சனிக்கிழமை பெங்களூருக்குச் சென்றார். அங்கே பிரச்சாரத்துக்உக பெரிய பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. இந்த கூட்டத்தில் பாதுகாப்பு குறைபாடு இருந்ததாக புகார் எழுந்துள்ளது.
பிரதமர் மோடி வந்த பிரத்யேக ஹெலிகாப்டரில் இருந்து பிரச்சார பொருட்கள் இறக்கப்பட்டன. அப்போது அங்கிருந்த பாதுகாப்புப் படையைச் சேரந்த மோப்ப நாய் ஒரு பெரிய கருப்புப் பெட்டியை கண்டுபிடித்தது.
ஹெலிகாப்டரில் துணியால் மறைத்து வைக்கப்பட்டிருந்த அதனைப் பெட்டியை வெடிகுண்டு நிபுணர் குழு எடுத்துச் சென்று அப்புறப்படுத்தினர். அதிகாரிகள் அனைவரும் அவசரமாக அந்தப் பெட்டியை தூக்கிக்கொண்டு ஓடிய வீடியோவும் சமூக வலைத்தளங்களில் பரவுகிறது.
இந்நிலையில், மோடியின் ஹெலிகாப்டரில் இருந்து இறங்கிய பெட்டி தொடர்பாக விசாரிக்க வேண்டும் என காங்கிரஸ் சார்பில் தேர்தல் ஆணையத்திடம் புகார் கொடுக்கப்பட்டுள்ளது.
“பெட்டியில் இருந்தது என்ன என பிரதமர் மோடி விளக்கம் அளிக்க வேண்டும். தேர்தல் ஆணையம் இவ்விவகாரம் தொடர்பாக விசாரணை மேற்கொள்ள வேண்டும்” என காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் ஆனந்த் சர்மா வலியுறுத்தியுள்ளார்.