இன்றைய நவநாகரீக உலகில் தொழில்நுட்பங்களின் வளர்ச்சி வெகமாக செல்கிறது. தியேட்டரில் போய் படம் பார்த்த காலம் போய் இப்போது செல்போனிலேயே படங்களை பார்க்கும் காலமாகிவிட்டது. தற்போது சினிமாவில் இருப்பவர்களை தங்களது படங்களை தியேட்டரில் ரிலீஸ் செய்யாமல் டிடிஎச்., போன்றவற்றில் ரிலீஸ் செய்ய தயாராகி வருகின்றனர். இந்நிலையில் இப்போது தமிழ்படங்களை வீட்டில் இருந்தபடியே ஆன்லைனில் பார்க்க பிரத்யேமாக ஒரு இணையதளம் உருவாக்கப்பட்டுள்ளது.