அன்பை பகிர்வோம்,அன்பால் இணைவோம்

14 September 2011

இலவசங்களை அள்ளிக் கொடுக்கும் இணையம்,,

பொருட்களை தூக்கி எரியாமல் யாருக்காவது இலவசமாக கொடுக்க நினைத்தால் அதற்கான இணைப்பு பாலமாக விளங்ககூடிய இணையதளமாக யாகிட் அமைந்துள்ளது.
இந்த பிரிவில் முன்னோடியான பிரிசைக்கிள் வகையை சேர்ந்தது என்றாலும் யாகிட் மேலும் ஒரு கொடுக்கல் சேவை என்ற அலுப்பை ஏற்படுத்தாமல் இருக்கிறது. அதற்கு காரணம் எளிமை மற்றும் பயன்பாட்டுத்தன்மை.
இந்த தளம் செயல்படும் விதம் மிகவும் எளிதானது. கொடுக்க விரும்புகிறவர்கள் கொடு பகுதியில் தாங்கள் பெற விரும்பும் பொருள் பற்றி குறிப்பிட்டால் போதுமானது. பொருட்களை பெற விரும்புகிறவர்கள் தங்களுக்கு தேவையான பொருள் பட்டியலிடப்பட்டுள்ளதா என்று தேடி பார்த்து கொள்ளலாம்.
உலகலாவிய தளம் என்பதால் இணையவாசிகளின் இருப்பிட நகரத்தின் அருகாமையில் பட்டியலிடப்படுள்ள பொருட்களே காட்டப்படுகின்றன. எந்த எந்த நகரங்களில் இருந்து விஜயம் செய்கின்றனரோ அந்த நகரின் அருகாமையில் தரப்படும் பொருட்களை பெறலாம்.
இப்போது தான் துவக்கப்பட்டுள்ள தளம் என்பதால் பெரிய அளவில் பரிமாற்றங்கள் இல்லை. ஆனால் நமக்கு பயன்படாதது யாருக்கேனும் பயன்படட்டும் என்னும் கருத்தின் அடிப்படையில் பிறருக்கு கொடுப்பதை ஊக்குவிக்கும் உயர்ந்த நோக்கம் கொண்ட தளம் என்பதால் இது பிரபலமானால் நன்றாக இருக்கும்.


இணையதள முகவரி                                                                           
                                                                                        

2 comments:

  1. I really enjoyed reading this post, I always appreciate topics like this being discussed to us. Thanks for sharing.
    man and van

    ReplyDelete

நண்பனிடம் சொல்லுங்க,,,,,,,,,
பிடிச்சிருந்தாலும்....இல்லை என்றாலும் ;)